ஆதி பரம்பொருளான ஈசனின் அருள் கிடைக்க வேண்டுமென்றால் சிவராத்திரி விரதம் இருப்பது அவசியம். வருடத்தில் வருங்கின்ற அனைத்து சிவராத்திரிக்கும் சேர்த்து விரதம் இருந்த பலனை இந்த மகா சிவராத்திரி ஒரே இரவு விரதம் இருந்தால் நாம் பெற்று விடலாம். இந்த நந்நாளில் ஆலய வழிபாடு என்பது மிகவும் நன்மை பயக்கும். கோயில்களில் உள்ள லிங்கங்கள் மீது ஒரு முறை சிறு வில்வத்தை எடுத்து போட்டாலும் அந்த சிவபெருமானின் மனது குளிர்ந்து விடும். அந்த வகையில் சென்னையில் நீங்கள் செல்ல வேண்டிய வரலாற்று சிறப்புமிக்க சிவ ஸ்தலங்களின் பட்டியல் இதோ உங்களுக்காக!
மகா சிவராத்திரி 2025
2025 ஆம் வருடத்திற்கான மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதி (புதன் கிழமை) அன்று வருகிறது. நீங்கள் கண் விழிக்க வேண்டும் என்று நினைத்தால், இரவு 8.20 மணிக்கு மேல் பூஜையை ஆரம்பித்துவிட்டு, நீங்கள் கண் விழிக்கலாம். ஒரு சிலர் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். 26 ஆம் தேதி முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம். இந்த நாளில் சிவன் கோவிலுக்கு சென்று ஓம் நமச்சிவாய என்ற மந்திரம் சொன்னால் போதும். நாம் செய்த பாவங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வுக்கு சிவ பெருமான் நமக்கு ஆசி வழங்குவார்!

சென்னையில் நீங்கள் செல்ல வேண்டிய கோயில்கள்
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர்
அருள்மிகு கபாலீஸ்வரருக்கு அர்பணிக்கப்பட்டுள்ள இந்த திருத்தலம், சென்னையில் அமைந்துள்ள சிவஸ்தலங்களில் மிகவும் பழமையானது என்று கூறப்படுகிறது. இங்கே சிவபெருமான் கபாலியாகவும், தாய் கற்பகாம்பாளாகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். சிவாலயங்கள் என்று வரும் போது சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலை யாரும் மறந்திட முடியாது. தேவி பார்வதியான கற்பகாம்பாள் மயில் வடிவில் இங்கு சிவபெருமானை வழிபட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்த இடம் மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது. திருஞான சம்பந்தர், சிவன் பக்தரான சிவநேச செட்டியாரின் மகளான பூம்பாவையை சாம்பலில் இருந்து (அவள் பாம்பு கடித்து இறந்த பிறகு) வாழ்க்கையை மீட்டெடுத்தார். மஹா சிவராத்திரி அன்று மயிலை ஜொலிக்கும். இங்கு சென்று வருவது மிகவும் விசேஷமாகும்.
ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோவில், திருவொற்றியூர்
276 தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றான் இந்த திருத்தலம், சென்னையில் அமைந்துள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். சென்னையில் உள்ள சிவாலயங்களிலேயே மிகவும் பழமையானது இந்த ஆதிபுரீஸ்வரர் மற்றும் வடிவுடை அம்மன் கோவில் தான். தியாகராஜ சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் வட சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டில் பாண்டவர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் சோழர்களால் விரிவுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது பாடல் பெற்ற ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணினால் ஆன ஆதிபுரீஸ்வரர் ஒரு வெள்ளி ஓடு போட்டு மூடப்பட்டிருப்பார். மஹா சிவராத்திரி தினத்தன்று மட்டுமே அந்த ஓட்டை எடுத்து தைல அபிஷேகம் செய்வார்கள். அபிஷேகம் செய்த தைலம் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. சிவராத்திரியன்று இந்த கோவில் விழாக்கோலம் பூணுகிறது.

மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர்
காமதேனு என்ற பசுவானது வசிஷ்ட முனிவரின் சாபத்தைப் போக்க இங்கு சிவனை வழிபட்டது. தினமும் தன் பால் இறைவனுக்குப் படைத்து வந்தாள். ஒரு நாள் சில அரசரின் ஆட்கள் அவளைப் பிடிக்க முயன்றபோது, அவள் தப்பிக்க முயன்றபோது தவறுதலாகத் தன் குளம்புகளால் லிங்கத்தைத் தாக்கினாள். லிங்கம் இன்றும் குளம்பு அடையாளங்களுடன் உள்ளது, மேலும் இறைவன் பால்வண்ணநாதர் என்று அழைக்கப்படுகிறார். வால்மீகி முனிவரும், திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இங்கு வழிப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன. இந்த கோயில் 276 தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் உள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாகவும், லிங்கம் வெண்மை நிறமாகவும் உள்ளது. "தீண்டத்திருமேனி" என்பதால் இந்த லிங்கத்தை மனிதக் கைகளால் தொடுவதில்லை, அர்ச்சகர்கள் கூட தொடுவதில்லை.
வேதபுரீஸ்வரர் கோயில், திருவேற்காடு
சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள திருவேற்காட்டில் உள்ள புகழ்பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற சிவஸ்தலமாகும். சிவபெருமான் அகஸ்தியர் முனிவருக்கு இத்தலத்தில் பார்வதி தேவியுடன் திருமண தரிசனம் அளித்ததாகக் கூறப்படுகிறது. அகஸ்தியர் முனிவர் (வடக்கே இமயமலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த) திருமணத்தில் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை, ஏனெனில் அவர் தெற்கு நோக்கிச் சென்று பூமியின் சமநிலையைப் பராமரிக்க சிவபெருமானால் அனுப்பப்பட்டார். அகத்தியர் மனமுருகி வேண்டிக் கொண்டதன் பேரில் சிவபெருமானும் பார்வதி தாயாரும் திருமணக் கோலத்தில் அவருக்கு காட்சியளித்தனர்.

ஸ்ரீ திருவாலீஸ்வரர் கோயில், பாடி
திருவலித்தாயம் (பாடி) சென்னைக்கு திருவள்ளூர் வழித்தடத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 276 தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றான இந்த திருத்தலத்தில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக (சுயரூபமாக) காட்சி தருகிறார். இந்த கோயிலில் தான், விநாயகப் பெருமானுக்கு கமலை, வள்ளி திருக்கல்யாணம் நடந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த பழமையான கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இத்தலத்தின் வரலாற்றுப் பெயர் திருவலிதாயம் ஆனால் தற்போது பாடி என்று அழைக்கப்படுகிறது.
மாசிலாமணீஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்
திருமுல்லைவாயலில் உள்ள புகழ்பெற்ற மாசிலாமணீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற சிவஸ்தலமாகும். ஒரு மன்னன் தன் யானையின் கால்களில் சிக்கிய படர்தாமரைகளை அகற்றிய போது முல்லைப் படர்களில் சிவலிங்கம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. மன்னன் சிவலிங்கத்தை நிறுவி, சிவனின் அருளால் போரில் வெற்றி பெற்றான். பகைவரிடம் இருந்து ஜெயிக்க, நினைத்த காரியங்களில் வெற்றி பெற இங்கு வருகை தருவது அவசியம்.

ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயில், திருவேற்காடு
திருவேற்காடு பூந்தமல்லியில் இருந்து ஆவடி செல்லும் வழித்தடத்தில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பிரசித்தி பெற்ற சிவஸ்தலம்! பாலாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த பழமையான கோயில் 1300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்று நம்பப்படுகிறது. இங்கே சிவபெருமான் ஸ்ரீ வேதபுரீஸ்வரர், ஸ்ரீ வேர்காட்டு நாதராகவும், அம்பாள் ஸ்ரீ பாலாம்பிகை, ஸ்ரீ வேர்க்கண்ணியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இந்த கோயில்களில் எவற்றேனும் ஒன்றுக்கு சென்று சிவபெருமானின் ஆசி பெற்றிடுங்கள்!



Click it and Unblock the Notifications



