Search
  • Follow NativePlanet
Share
» »ஆனி மாதத்தில் பிறந்த இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்குது பாரு யோகம்!

ஆனி மாதத்தில் பிறந்த இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்குது பாரு யோகம்!

நீங்கள் ஆனி மாதத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கையை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறீர்களா. உங்கள் மனைவி, குழந்தை, அம்மா யாராவது ஆனி மாதத்தில் பிறந்து உங்களுக்கு அதே மாதத்தில் பிறந்தநாள் வருகிறதா. அப்ப

By Udhaya

நீங்கள் ஆனி மாதத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கையை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறீர்களா. உங்கள் மனைவி, குழந்தை, அம்மா யாராவது ஆனி மாதத்தில் பிறந்து உங்களுக்கு அதே மாதத்தில் பிறந்தநாள் வருகிறதா. அப்போ நீங்க அதிர்ஷ்டசாலிதான். எப்படி என்று கேட்கிறீர்களா. உங்களுக்கு லக்கினம், லக்கினாதிபதி, சந்திரன், புதன் ஆகியோரின் பலம் அள்ளிக் கொட்டப்போகிறது. ஆம்... உங்கள் வாழ்க்கையில் முக்கியமான வெற்றிப்படியை கடக்க இருக்குறீர்கள். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான், கீழ்க்கண்ட கோயில்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வணங்கி வாருங்கள். ஆனி முடிவதற்குள் நீங்களும் டாப்பா வருவீங்க....

கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில்

கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில்

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்ச் சத்திரம் அருகே அமைந்துள்ளது கீழப்பாவூர் எனும் ஊர். இங்குள்ள வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். காலை முதல் மாலை வரை நடைபெறும் பூசைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி விழாக்கள் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில்

கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில்

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்ச் சத்திரம் அருகே அமைந்துள்ளது கீழப்பாவூர் எனும் ஊர். இங்குள்ள வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். காலை முதல் மாலை வரை நடைபெறும் பூசைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி விழாக்கள் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

ஆனிமாதம் பிறந்தவர்கள் அதிலும் குறிப்பாக மீனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கோயிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வந்தால், எதிர்காலம் சிறப்பாக அமையும். மேலும் இங்கு அருகில் நிறைய சுற்றுலாத் தளங்களும் உள்ளன. கோயிலுக்கு சென்றுவிட்டு அப்படியே சுற்றுலாவையும் ரசிக்கலாம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், குற்றாலம், செங்கோட்டை, தென்காசி, பாபநாசம் என நிறைய சுற்றுலாத் தளங்கள் அருகாமையில் அமைந்துள்ளன.

Arikrishnan

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில்

ஆனி மாதத்தில் பிறந்த நல்ல உள்ளங்கள் வேகமாகவும் அதே நேரத்தில் விவேகமாக அறிவார்ந்த முறையில் செயல்பட்டு காரியத்தை செயல்படுத்துவதில் வல்லவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு இந்த வருடம் சிறப்பாக அமைய இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் போதும். பொதுவாக மழை வளம், இயற்கை வளம் பெற்று மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கோயிலில் நாற்று நடவு விழா கொண்டாடப்படும். அதுமாதிரியே வாழ்வு வளம் பெறவும், செல்வம் செழிக்கவும் இந்த கோயிலுக்கு வந்து வழிபடுகிறார்கள்.

Ssriram mt

எப்படி செல்வது

எப்படி செல்வது

இந்த கோயில் கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. காமதேனுபுரி, பட்டிபுரி,ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த கோயிலுக்கு கோயம்புத்தூரிலிருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Ssriram mt

திருநாரையூர் பொள்ளாப்பிள்ளையார் கோவில்

திருநாரையூர் பொள்ளாப்பிள்ளையார் கோவில்

நடுநிலை தவறாமல் அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் இந்த ஆனி மாதத்தில் பிறந்தவர்கள். குறிப்பாக மேசம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் வீட்டின் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் சொந்த விருப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்துக்காக உழைப்பவர்கள். உங்கள் வீட்டில் வேறு யாரும் ஆனி மாதத்தில் பிறந்திருந்தால் உங்களுக்கு மிக பெரிய அதிர்ஷ்டம் ஒன்று காத்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தீர்கள் என்றால் வரும் மாதங்களில் தொழில் வளம் பெருகி குடும்பம் நல்ல நிலை பெறும்.

எங்குள்ளது

எங்குள்ளது

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாரையூர் எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த பொள்ளாப்பிள்ளையார் கோயில். அள்ளிக் கொடுக்கும் ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால், மிகவும் நல்ல நிலையை அடையலாம். மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் அதிர்ஷ்டம் உங்களையும் உச்சாணிக்கொம்பில் உயர்த்தி வைக்கும். பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 33-வது தலமாக விளங்குவது திருநாரையூர். இத்தலமானது கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உள்ள திருநாரையூரில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள அம்மனின் பெயர் திரிபுரசுந்தரி மற்றும் மூலவரின் பெயர் சவுந்தரேஸ்வரர் இக்கோவிலின் சிறப்பு அம்சம் இங்கு பொல்லாப்பிள்ளையார் இருப்பதாகும்.

ஆழ்வார்குறிச்சி சாஸ்தா கோயில்

ஆழ்வார்குறிச்சி சாஸ்தா கோயில்

கடையம் அருகே ஆழ்வார்குறிச்சியில் அமைந்துள்ளது இந்த சாஸ்தா கோயில். இங்கு செல்பவர்களுக்கு நல்ல அருளை வழங்கும் தெய்வம், கடின காலத்தில் ஆறுதலையும் அளிக்கிறது. இந்த கோயிலில் நடைபெறும் மகா அபிஷேக, அலங்கார தீபாராதனை, மற்றும் அர்த்தஜாம பூஜைகள் மிக சிறப்பாகும். இதனையடுத்து நடைபெறும் சின்னநம்பி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று அருளை பெற்று செல்வார்கள்.

பணம் வரும் யோகம்

பணம் வரும் யோகம்


பணவரவு, செல்வ வளம் என்பது எல்லாருக்கும் எப்போதும் கிடைத்துவிடுவதில்லை. சிலருக்கு ராசி, நட்சத்திரங்கள் மேல் நம்பிக்கை இருக்காது. அவர்கள் அனைவரும் கூட ஆச்சர்யம் கொள்ளும் வகையில் ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் வளருவார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டத்தால் செல்வத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் சந்திரனும், புதனும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளனர்.

Raghuvansh r

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயம்

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயம்

பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தையும், வீரஸேனன் என்னும் மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தையும் போக்கிய புண்ணிய தலம் என்று புகழ் பெற்ற இந்த கோயில் உங்கள் வாழ்விலும் ஒளி ஏற்ற வருகிறது. ஆம், ஆனி மாதத்தில் பிறந்த மக்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் உலகப் புகழ் பெறலாம் என்கிறது கணிப்பு. அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல் அள்ளிக் கொடுக்கும் நட்சத்திரங்களை மனதில் கொண்டு இந்த கோயிலுக்கு சென்று வரவேண்டும். பாண்டியர்களின் வீழ்ச்சிக்கு பிறகு மீண்டும் ஒரு எழுச்சி இந்த கோயிலுக்கு சென்றபின்தான் கிடைத்தது என்றும் நம்பப்படுகிறது.

மூலவர் சிவபெருமான் வீற்றிருக்கும்

மூலவர் சிவபெருமான் வீற்றிருக்கும்

சோழநாட்டையே ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவர் சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் திருவிடைமருதூர். திருவிடைமருதூரில் இருக்கும் சுவாமிதான் பெரியவர். அதனால் மகாலிங்கம் என்று பெருமைப்படுத்தப்படுகிறார். இத்தலத்தில் உள்ள இறைவன் மகாலிங்க சுவாமி, தல விருட்சமான மருத மரத்தின் பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார்.

பஞ்சமுகேஸ்வரர்

பஞ்சமுகேஸ்வரர்

திருச்சியில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் பஞ்சமுகலிங்கத்திற்கு என தனிக்கோவில் உள்ளது. இத்தல மூலவர் பஞ்சமுகேஸ்வரர் என திருநாமம் கொண்டுள்ளார். அம்மையார் திரிபுரசுந்தரி. ஐந்து முக லிங்கங்களில் திசைக்கு ஒன்றாக ஐந்து முகங்கள் தவிர, உச்சியில் வடகிழக்கு திசை நோக்கி ஒரு முகமும் காணப்படும். பஞ்சமுக லிங்கத்தைச் சிலர் சிவாகம லிங்கம் எனவும் சொல்வார்கள். ஐந்து முக ருத்திராட்சத்தினால் மண்டபம் கட்டி, ஐந்து பொருட்களால், குறிப்பாய் பஞ்சகவ்யம் எனப்படும் பசும்பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவற்றால் அபிஷேஹம் செய்து, ஐந்து மலர்களால் மாலை அணிவித்து, ஐந்து வில்வங்களால் அர்ச்சித்து, ஐவகை நைவேத்தியம் செய்வித்து, வழிபடுவதே இதன் விசேசமாகும்.

Ssriram mt

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

திருச்சி மாநகரில் இருந்து ஸ்ரீரங்கநாதர் ஆலயம் செல்லும் வழியில் திருவானைக்காவல் என்னும பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் ஆலயம். பாப்பங்குறிச்சி, திருவெறும்பூர், வளலூர் என மாநகரத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் இக்கோவிலுக்குச் செல்ல போக்குவரத்து வசதிகள் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

Laks316

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X