Search
  • Follow NativePlanet
Share
» »திருப்பூரில் இந்த நான்கு கோவில்களுக்கும் அப்படி ஒரு சக்தி! போய்தான் பாருங்களேன்!

திருப்பூரில் இந்த நான்கு கோவில்களுக்கும் அப்படி ஒரு சக்தி! போய்தான் பாருங்களேன்!

திருப்பூரில் இந்த நான்கு கோவில்களுக்கும் அப்படி ஒரு சக்தி! போய்தான் பாருங்களேன்!

தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 47 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பூர் நகரம் அமைந்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் துணி வகைகள் நாட்டின் பல்வேறு நகரங்களின் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. திருப்பூரில் பல பழமையான கோவில்கள், முன்னனி நிறுவனங்களின் ஆலைகள் ஆகியவை அமைந்துள்ளன. இந்நகரம் திருப்பூர் மாவட்டத்தின் நிர்வாக நகரமாக விளங்குகிறது. மேலும் தமிழ்நாட்டிலுள்ள கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இது நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

 கோவில்கள்

கோவில்கள்


பல்வேறு வகையான துணி ஆலைகள் மட்டுமின்றி, சோழ, பாண்டிய மன்னர் காலத்திய, பல்வேறு கோவில்கள் இங்கு அமைந்துள்ளன. அவிநாசியில் உள்ள அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில், திருப்பூர் திருப்பதி கோவில், சுக்ரீஸ்வரர் கோவில், போன்ற மிகப் பழமையான கோவில்கள் இங்கு உள்ளன.

திருப்பூர் திருப்பதி கோவில்

திருப்பூர் திருப்பதி கோவில்

திருப்பூர் நகர எல்லைக்குள் அமைந்துள்ள இக்கோவிலுக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவிலைப் போன்றே இக்கோவில் அமைந்துள்ளது. வருடத்தின் அனைத்து நாட்களிலும் இக்கோவில் திறக்கப்பட்டு, அனைத்துவகையான ஆகம பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. வருடத்தின் அனைத்து நாட்களிலும் இக்கோவிலுக்குச் செல்லலாம் என்றாலும், சிறப்புப் பூஜைகள் நடத்தப் படும் பொழுது இக்கோவிலைப் பார்க்கச் செல்வது நல்லது.

அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில்

அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில்

கோயம்புத்தூரிலிருந்து ஈரோட்டிற்கு செல்லும் வழியில் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அவிநாசி என்ற ஊரில், அமைந்துள்ளது அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில். பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், 15 ஆவது நூற்றாண்டில் சுந்தர பாண்டியன் என்னும் மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டது. இந்தக் கோவிலைத் திருப்பூருக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டும். இக்கோவிலில் உள்ள தேர் தென்னிந்தியாவிலுள்ள மிகப்பெரிய தேர்களுள் ஒன்றாகும்.

சிவன் மலை

சிவன் மலை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் சிவன் மலை அமைந்துள்ளது. முருகப்பெருமான் இங்கு எளுந்தருளியுள்ளார். இங்கு நடைபெறும் புகழ் பெற்ற தைப்பூச விழாவில், கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் இங்கு வருகை புரிகிறார்கள். தைப்பூச விழாவில் மூன்று நாட்கள் நடைபெறும் "தேரோட்டம்" மிக முக்கியமானது. மலையுச்சியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலுக்கு, மலை அடிவாரத்திலிருந்து கட்டப்பட்டுள்ள 450 படிகளில் ஏறிச் செல்லவேண்டும். இக்கோவிலை வந்தடைய சாலைப் போக்குவரத்து வசதிகள் உண்டு.

சுக்ரீஸ்வரர் ஆலயம்

சுக்ரீஸ்வரர் ஆலயம்

திருப்பூர் நகரத்தின் மற்றொரு முக்கியமான இடம் சுக்ரீஸ்வரர் ஆலயம் ஆகும். திருப்பூரில் ஒடும் நொய்யல் ஆற்றின் கிளை ஆறான நல்லாற்றின் கரையில், இக்கோவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்கள் காலமான பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இது ஆகும். அதற்குப் பின்பு சோழர்களால் இக்கோவிலின் உள்ளே பல்வேறு மண்டபங்களும் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக் கோவில் கட்டிடக் கலைக்குச் சான்றாக இக்கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் கட்டப்பட்டுள்ள இரு விமானங்களில் ஒன்று இக்கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கும் மற்றொன்றுக்கும் பார்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டதாகும். ஐந்து லிங்கங்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன.

All Photos are taken from

Ssriram mt

Read more about: travel tirupur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X