» »ஆளை விழுங்கும் மர்மமலை .... கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கு தெரியுமா?

ஆளை விழுங்கும் மர்மமலை .... கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கு தெரியுமா?

Written By:

இந்த உலகத்தில் நிறைய மர்மங்கள் இருக்கின்றன. அவற்றை சிலர் நம்புகிறார்கள். மீதி சிலர் நம்பமறுக்கிறார்கள். அவர்கள் கண்முன்னே நடக்கும் வரை அது புரளி, கட்டுக்கதை என்றே நினைத்துக்கொண்டிருப்பார்கள். நாங்களும் அப்படித்தான், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத வரையில் எதையும் நம்பக்கூடாது என்று நிலைப்பாடு கொண்டவர்கள். நமக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் ஒரு மர்மத்தைப் பற்றி சொல்லும்போது, அவர் பொய்யே சொல்லமாட்டார் என்று தெரிந்திருந்தும், சில விசயங்களை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. கோயம்புத்தூரைச் சார்ந்த நமது நண்பர் ஒருவர் அனுப்பிய மர்ம பகுதியைப் பற்றிய தகவல்கள் நிச்சயம் உங்களையும் அதிரச் செய்யும். நம்மில் எத்தனையோ பேர் இந்த இடத்துக்கு அருகிலும், அதன் வழியாகவும் தினமும் பயணித்து வந்திருப்போம். ஆனால் இந்த விசயம் பற்றி தெரிந்திருக்கவில்லை என்றால், இந்த கட்டுரையை முழுவதும் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அடுத்த முறை சுற்றுலா செல்லும்போது கவனமாக செல்லுங்கள். உங்கள் ஊருக்கு அருகில் இப்படி ஒரு இடம் இருக்கிறது என்றால் அதைப் பற்றியும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் பெயரில் அதை பதிவேற்றம் செய்கிறோம்.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழப்படும் கோவை நகரம் இளைஞர்கள் அதிகம் தேர்வு செய்யும் இடமாகும். சுற்றுலா என்றாலும் அருகிலுள்ள ஊட்டி, குன்னூர், அவிலாஞ்சி, கோத்தகிரி, பவானி, கோடநாடு, கூடலூர் ஆகிய இடங்களுக்கு சென்று வரலாம். அப்படி ஊட்டிக்கு செல்லும் வழியில் இருக்கும் ஒரு இடம் நம்மை ஆச்சர்யத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கும் இடமாகும். இந்த இடத்துக்கு சென்ற நபர்கள் மர்மமாக மறைந்துவிடுவார்களாம்.

PC: Ragunathan

எங்கே இருக்கிறது

எங்கே இருக்கிறது

ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் 23 கிமீ தொலைவில் ஊசி மலை எனும் காட்சி முனையம் அமைந்துள்ளது. இங்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வந்து செல்பி எடுக்கவும், பொழுதை கழிக்கவும் சுற்றுலாப் பிரியர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றனர் என்ற தகவல் அறிந்ததும் எங்களுக்கும் அதைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. .

PC: Surajpandey86

பயணம்

பயணம்

கோயம்புத்தூரிலிருந்து ஊட்டி சென்றிருந்த நாங்கள் நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க சென்ற இடம் ஏமாற்றம் தரவில்லை. கோயம்புத்தூரிலிருந்து குரும்பம்பாளையம், கோயில்பாளையம், கணேஷபுரம், அன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்தை அடைந்தோம். அங்கு ஒரு கடையில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு, அங்கிருந்து ஊட்டி நோக்கிய பயணத்தை தொடர்ந்தோம்.

மேட்டுப் பாளையத்திலிருந்து ஊட்டி 53கிமீ வரை இருக்கும். ஆனால் மலைப்பாதை என்பதால் செல்லும் நேரத்தைப் பொறுத்து நேரம் மாறுபடும். நாங்கள் இரண்டரை மணி நேரத்தில் ஊட்டியை அடைந்தோம். வழியில் குன்னூர் அருகே ஒரு சிறு விபத்து, அவர்களுக்கு உதவி செய்ய வண்டியை நிறுத்தியதால் சற்று தாமதமானது. அந்த வேளையில் டீ அருந்திவிட்டு மீண்டும் கிளம்பலானோம். ஆனால் நண்பர் ஊட்டிக்கு போய்விட்டு அருகிலுள்ள கூடலூருக்கும் போய்விட்டு வரலாம் என்றதும், எங்களுடன் இருந்த மற்றொரு நண்பருக்கு இதில் உடன்பாடில்லை. நான் வழியில் இறங்கிக் கொள்கிறேன் என்றவுடன் எப்படியோ சமரசம் செய்து ஊட்டி அழைத்துச் சென்றோம்.

PC:ChefAnwar1

ஊட்டியில் என்னவெல்லாம் இருக்கிறது

ஊட்டியில் என்னவெல்லாம் இருக்கிறது

ஊட்டியில் பல இடங்கள் இருந்தாலும் நாங்கள் எங்கெல்லாம் செல்வது என்பதை முடிவு செய்து கொண்டோம். நண்பர்கள் சிலர் காட்டுக்குள் ஒரு நடைபயணம் செல்லலாம் என்றார்கள். எனினும் நான் எனது அம்மாவுடன் வந்திருந்ததால் அவரை தனியாக விட்டுவிட்டு வரமுடியாது என்றேன்.

அதைத் தவிர்த்து, ஏரிகள், சிகரங்கள், பூங்காக்கள், அணைகள், ஷாப்பிங் என நல்லபடியாக சென்றது எங்கள் ஊட்டி பயணம். உங்களுக்காக ஊட்டியில் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் குறித்த சிறு தொகுப்பு

ஊட்டி ஏரி

ஏரியில் படகுச் சவாரி உள்ளதால், சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அமைதியான படகுச் சவாரி மூலம், ஏரியின் கண்ணுக்கினிய அழகை அனுபவிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் போது, மாநில அரசு, இரண்டு நாட்கள் நீடிக்கும் படகு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

பைக்காரா ஏரி

முதுமலை தேசிய பூங்காவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைக்காரா ஏரி, இயற்கையின் அளவில்லா அழகுக்கு ஒரு சிறந்த உதாரணம். ஏரி காண்பதற்கு ஒரு அற்புதமான அழகாக பச்சை தண்ணீருடன் உள்ளது. நீலகிரி மாவட்டத்தின் இந்த பெரிய ஏரியை தோடர்கள் மிகவும் புனிதமாக கருதினர். வென்லாக் டவுன்ஸ் என்ற ஒரு பரந்த பசுமையான புல்வெளி , இந்த ஏரிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

க்ளென்மார்கன்

ஊட்டியில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கண்ணுக்கினிய கிராமம், சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. கிராமத்தில் சிறப்பு தேயிலை தோட்டங்கள் உள்ளன. க்ளென்மார்கன் கிராமத்தில் ஒரு பிரபலமான ஈர்ப்பு மின் நிலையத்திலிருந்து (சிங்காராவில் அமைந்துள்ளது) கிராமத்திற்கு செல்லும் ஒரு கயிற்றுப்பாதை. 3 கி.மீ. நீண்டுள்ள இந்தக் கயிற்றுப்பாதை 980 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

தொட்டபெட்டா மலைச் சிகரம்

தொட்டபெட்டா நீலகிரி மலையின் மிக உயர்ந்த மலை சிகரம். தொட்டபெட்டா என்ற சொல் கன்னட மொழியில் 'பெரிய மலை' என்று குறிக்கிறது. இந்த மலை 8650 அடி உயரத்தில், ஊட்டி நகரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், ஊட்டி-கோட்டகிரிச் சாலையில் உள்ளது

முக்கூர்த்தி தேசிய பூங்கா

முக்கூர்த்தி தேசிய பூங்கா நீலகிரியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா ஊட்டி மலையின் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த இடத்தில் ஒரு தேசிய பூங்கா அமைக்கப்பட முக்கிய காரணம், நீலகிரியின் தார் வகையைப் பாதுகாக்கவே. இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக இருப்பதால், இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையமாகத் திகழ்கிறது.

PC:Kishore1902

ஊட்டியிலிருந்து கூடலூர்

ஊட்டியிலிருந்து கூடலூர்

முன்பே சொன்னது போல, ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லலாம் என்று கிளம்பினோம். முன்பு வரமுடியாது என்று அடம்பிடித்த அந்த நண்பர், ஊட்டியிலிருந்தே ஊர் திரும்பினார். அவர் சொன்ன ஒரு விசயம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும் அதுதான் எங்களை ஊட்டி தாண்டி 23 கிமீ வரை பயணிக்க வைத்தது.

ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் வழியில் 23 கிமீ தூரத்தில் ஊசிமலையை அடைந்தோம்.

இங்குள்ள சிறப்பான இடங்கள்

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இந்த சாலையில் பைக்காரா, நடுவட்டம் தவளை மலை, ஊசி மலை என நிறைய இடங்களைக் கடந்தோம். ஊசிமலையை ஒட்டி இருந்த மலைதான் அந்த மர்மமலை..

 ஆளை விழுங்கும் மர்ம பாறை

ஆளை விழுங்கும் மர்ம பாறை


இந்த மலையைப் பற்றி தான் ஊட்டியிலிருந்து வீடு திரும்பிய நண்பர் சொல்லியிருந்தார். அங்கு செல்லவே கூடாது என்று என்னிடம் கூறியிருந்தார். அவரின் அன்புக் கட்டளையை ஏற்று நான் அங்கு செல்லமாட்டோம் என்று உறுதியளித்திருந்தேன். ஆனால் எல்லா நண்பர்கள் கூட்டத்திலும் சிலர் இருப்பார்களே. எங்கு போகக்கூடாது என்று சொன்னாலும் அங்கு போயேத் தீருவேன் என்று கூறுபவர்கள். என் நண்பர் ஒருவர் அப்படித்தான். இந்த காலத்தில் பேய் மந்திரம் மாந்திரீகம்னு சும்மா வெளாடாதீங்க.. வாங்க போய்ட்டு வரலாம்னாரு..

பின்னர் அங்கு வந்த ஒருவரின் பேச்சில் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். இந்த மலையில் துளி கூட யாரையும் பார்த்துவிட முடியாது. இவ்வளவு ஏன் விலங்குகள் நடமாட்டம் கூட இல்லை. இந்த பகுதியின் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் யாரும் செல்லக்கூடாது என்றார்.

அப்போது குறுக்கிட்ட எனது நண்பர், மீறி சென்றால் என்னவாகுமாம் என்று கேட்க, அவரோ அங்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்தது கிடையாது என்று கூறிவிட்டு சென்றார்.

PC:L. Shyamal

உண்மை நிகழ்வு

உண்மை நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவர், ஒரு வனக்காவலர் ஆகியோர் இந்த காட்டுக்குள் சென்று மலையேறினார்கள் என்றும், அவர்கள் அதன்பின்னர் திரும்பவே இல்லை என்றும் கூறப்படுகிறது.

இங்குள்ள மக்களிடம் ஒரு கதை இருக்கிறது. இந்த மலையில் ஒரு வித மூலிகைச் செடி இருக்கிறதாம். அதுதான் இங்கு சென்றவர்களை மறைத்து வைக்கிறது என்றும் கூறுகின்றனர். இதுபோன்ற கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லைதான். என்றாலும் இத்தனை பேர் நம்பும் ஒரு விசயத்தை நாம் மறுக்கவும் முடியவில்லை. ஒருவேளை யாராவது இந்த மலைக்கு செல்லத் திட்டமிட்டால் ஒரு நிமிடம் சிந்தித்துவிட்டு கிளம்புங்கள். ஆளை விழுங்கும் மர்ம மலை.....

இதுபோன்று உங்கள் பகுதியில் இருக்கும் மர்ம மலைகள், மர்ம பகுதிகள், ஆச்சர்யமான விசயங்கள், கோயில்கள், அதிசயங்கள், சுற்றுலாத் தளங்கள் ஆகியவற்றில் ஏதாவது இருந்தால் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். udhayakumar.a@oneindia.co.in

எமது இணையத்திலிருந்து தொடர்ந்து அப்டேட்டுகள் உடனுக்குடன் கிடைக்க மேலுள்ள பெல் பட்டனை கிளிக் செய்க...


PC: L. Shyamal

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்