Search
  • Follow NativePlanet
Share
» » இளவரசனின் ஆவி கோட்டையில் காட்டிய சேட்டையை பாருங்கள்

இளவரசனின் ஆவி கோட்டையில் காட்டிய சேட்டையை பாருங்கள்

அமானுஷ்யங்கள் உலாவும் ஷானிவார் வாடா கோட்டைக்கு போயிருக்கீங்களா?

சந்திரமுகி படத்துல ரஜினியும், வடிவேலுவும் ஒரு கோட்டைக்குள்ள போவாங்களே.. அங்க கூட ஒடயுமாம்..உருளுமாம்.. அதேமாதிரியான ஒரு கோட்டைதான் இந்த ஷானிவார் கோட்டை.

ஆராய்ச்சியாளர்களையே வாயை பிளக்க வைத்த தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?ஆராய்ச்சியாளர்களையே வாயை பிளக்க வைத்த தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?

ஷானிவார் வாடா கோட்டை ஒரு வரலாற்று சுற்றுலாத் தளமாகும். அதன் வரலாறு வெறும் மன்னர்களின் கட்டடக்கலை பெருமைகளை மட்டும் கொண்டிராமல், கூடவே சில அமானுஷ்யங்களையும் கொண்டிருக்கின்றன.

இந்த கோட்டை மகாராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ளது.

<strong>உலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்</strong>உலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்

சித்தி கொடுமை என்பது சாமானியனுக்கு மட்டுமல்ல. இளவரசன் கூட அதில் தப்பிக்கமுடியாது என்பதற்கான சான்றே இந்த கோட்டை.

இந்த கோட்டையில் பேய் செய்யும் அட்டகாசத்தை பார்க்க ஆசையா?

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

ஆமாம்... உங்களை பயமுறுத்தும் வகையிலான காட்சிகள் உங்கள் கண்முன்னே நகரும் இந்த கோட்டைக்கு ஒரு பயணம் போகலாமா கூடவே இங்குள்ள மர்மங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

இந்த வாரம் அதிகம்பேர் படித்த கட்டுரைகள் கீழே

பாதி அழிந்த கோட்டை

பாதி அழிந்த கோட்டை

1828 ம் ஆண்டு மர்மமான முறையில் தீப்பிடித்ததில் கோட்டையின் முக்கியமான பல பகுதிகள் அழிந்துவிட்டன.

இன்றுவரை எப்படி எதனால் தீப்பிடித்தது என்ற மர்மம் விலகவே இல்லை. அதற்கு அங்குள்ளவர்கள் சொன்ன காரணம்தான் நெஞ்சில் புளியை கரைத்தது.

Pc: Ashok Bagade

7 நாள்கள் தொடர்ந்து எரிந்த கோட்டை

7 நாள்கள் தொடர்ந்து எரிந்த கோட்டை

தீயை அணைக்க எவ்வளவோ முயன்றும் 7 நாள்கள் வரை முற்றிலும் எரிந்தபின்தான் அடங்கியது இந்த அமானுஷ்யம்.

தீயில் எரிந்த போது கோட்டையில் மங்கிய வெளிச்சத்தில் ஏதோ உருவம் தெரிந்துள்ளதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதை அவர்களின் தாத்தா, பாட்டி மார்கள் சொன்னதாகவும், இக்கோட்டையில் இருப்பது ஒரு இளவரசனின் பேய் எனவும் தெரிவிக்கின்றனர்.

Pc: wiki

தீப்பற்றாத தேக்கு

தீப்பற்றாத தேக்கு


ஏழு நாள்கள் முழுமையாக எரிந்து தேக்கினால் செய்யப்பட்ட சட்டங்கள், நுழைவு வாயில்களுக்கு எதுவும் ஆகவில்லையாம். இளவரசனின் ஆவி தான் இதை செய்துள்ளதாக நம்புகின்றனர் அங்குள்ளவர்கள்.

PC:Prasad Vaidya

ஏன் தெரியுமா?

ஏன் தெரியுமா?

அந்த தேக்கு சட்டங்கள், மரவேலைப்பாடுகள் அனைத்தும் இளவரசன் மிகவும் விருப்பப்பட்டு செய்ததாம். இப்போது புரிகிறதா தீப்பற்றாததற்கான காரணம்.

PC: Kshitij Charania

பேய் வரும் நேரம்

பேய் வரும் நேரம்

இப்போதும் கூட அந்த இளவரசனின் பேய் அங்கேயே உலாவுவதாகவும், முழு நிலா நாள்களில் அதை உணரலாம் எனவும் கூறுகின்றனர்.

இளவரசனின் நாடி, நரம்பு, குருதி

இளவரசனின் நாடி, நரம்பு, குருதி

இளவரசனான 13 வயது நாராயனராவின் இரத்த வாசமும், ஆவியும் அங்கேயே உலவுகிறதாம். அவனை கொன்றது அவனது சித்தி ஆனந்தி என்கிறார்கள்.

சித்தி கொடுமை?

சித்தி கொடுமை?


சித்தப்பாவின் இரண்டாவது மனைவியான ஆனந்தி கோட்டையை கைப்பற்றுவதற்காக தான் பெறாத மகனை கொன்றதாக கருதப்படுகிறது. தன் அண்ணன் இறப்புக்கு பிறகு முடிசூடவிருந்த இளவரசனை கொன்றுவிட்டு ஆட்சியை கைப்பற்ற நினைத்தார் ஆனந்தி.

Pc: Sivaraj D

சித்தப்பா என்னை காப்பாத்து....

சித்தப்பா என்னை காப்பாத்து....

அந்த முழுநிலவு நாள்களில் ஒரு அசரீரீ கேட்குமாம். அது சித்தப்பா என்னை காப்பாத்து என்று தொடர்ந்து ஒலிக்கும் என்று கேட்டவர்கள் கூறுகின்றனர்.

இளவரசனை கொல்லும் போது அவன் கத்திய அதே குரல் இன்றும் ஒலிக்கிறதாம். இருந்தபோதிலும் அவனது சித்தப்பா அவனை காப்பாற்றவே இல்லை...

விளையாட்டுப்பையனான இளவரசன் இறந்ததிலிருந்து இப்படி பலவிதமாக தொல்லை கொடுத்துவந்தானாம்.

அதிகம் பேர் படித்த கட்டுரைகள்

அதிகம் பேர் படித்த கட்டுரைகள்

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

பார் போற்றும் பர்வதமலை பரவசமூட்டும் அதிசயங்கள்.. தெரியுமா?

ஏன் இந்த அக்கப்போரு .. வெள்ளயங்கிரி மலையில அப்டி என்னதான் இருக்கு?

மகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் இப்ப எப்டி இருக்கு தெரியுமா?மகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் இப்ப எப்டி இருக்கு தெரியுமா?

 ஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு ? ஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

பேயை நேரில் பார்க்கணுமா அப்போ இங்கெல்லாம் நைட் டிராவல் பண்ணுங்க பேயை நேரில் பார்க்கணுமா அப்போ இங்கெல்லாம் நைட் டிராவல் பண்ணுங்க

 ஏன் இந்த அக்கப்போரு .. வெள்ளயங்கிரி மலையில அப்டி என்னதான் இருக்கு? ஏன் இந்த அக்கப்போரு .. வெள்ளயங்கிரி மலையில அப்டி என்னதான் இருக்கு?

பஞ்ச பாண்டவர்களின் குகை... கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள்! பஞ்ச பாண்டவர்களின் குகை... கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள்!

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X