ஜனனம் மரணம் இயற்கையின் நியதி. அதை மாற்றும் சக்தி யாருக்கும் கிடையாது,. ஆனால் அதே நேரத்தில் பிறப்பிலும், இறப்பிலும் பல சுவாரசியமான நிகழ்வுகள் பல நடந்திருக்கும். அவை மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ ஏதோ ஒரு வகையில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். 400 வருடங்களாக ஒரு சாபம் இந்த கிராமத்தின் மக்களை துரத்தி வருகிறது. அது குழந்தை பெற்றால் தாய் அல்லது சேய் இருவரில் ஒருவரை பலி வாங்கி விடுகிறதாம். இது குறித்து அந்த கிராம மக்களிடம் கேட்கும்போது பல்வேறு அதிர்ச்சியான தகவல்களை கூறுகின்றனர். சுற்றுலா பகுதிகள் நிறைந்த மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துவரும் இந்த நிகழ்வுகளையும், அருகிலுள்ள சுற்றுலாப் பகுதிகளையும் பற்றி காண்போம்.

பிரசவமே பார்ப்பதில்லையாம்
மத்திய பிரதேசத்தில் சங்கா ஷியாம் ஜி கிராமத்தில் கடவுளின் சாபம் காரணமாக 400 ஆண்டுகளாக பிரசவம் நடப்பதில்லை. அவ்வாறு நடந்தால் குழந்தையோ அல்லது தாயோ மரணமடைவர் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். ராஜ்கார் மாவட்டத்தில் உள்ளது சங்கா ஷியாம் ஜி கிராமம். இந்த கிராமத்தில் 400 ஆண்டுகளாக பெண்களுக்கு பிரசவமே நடப்பதில்லை என்று கூறப்படுகிறது. அவசர காலங்களில் இந்த கிராம எல்லைக்கு வெளியே ஒரு மண்டபத்தில் பிரசவம் நடப்பதாக கூறப்படுகிறது.

இறக்கும் தாய் - சேய்
கடந்த 400 ஆண்டுகளாக இந்த ஊரில் வைத்து பெண்களுக்கு பிரசவம் பார்ப்பதில்லை. அவ்வாறு பார்த்தால் குழந்தை ஊனமாகமோ அல்லது குழந்தை அல்லது தாய் இறப்போ நேரிடுகிறதாம். 16-ஆவது நூற்றாண்டில் இந்த கிராமத்தில் ஒரு கோயில் கட்டும் பணிகள் நடந்து வந்தது. அப்போது ஒரு பெண் கோதுமை அரைத்தது அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அந்த கடவுள் சாபமிட்டதாகவும் அது முதல் அங்கு பிறக்கும் குழந்தைகள் இறந்துவிடுவதாகவும் நம்பப்படுகிறது.

மூதாதையர்களின் வாக்கு
பிரசவம் பார்க்க வேண்டுமானால் கிராம எல்லையில் வைத்து பார்ப்போம். இல்லாவிட்டால் இதற்கென ஒரு தனி அறை கட்டப்பட்டு வருகிறது. பெரும்பாலும் 90 சதவீத பிரசவம் மருத்துவமனைகளில் நடந்து விடும் அவசர காலங்களில் மட்டும் கிராம எல்லைக்கு வெளியே பார்க்கப்படும், கடவுள் சாபம் குறித்து எந்த குறிப்புகளும் இல்லை. எனினும் இவர்கள் தங்கள் மூதாதையர்கள் வாய்மொழியாக சொன்னதுகேற்ப செயல்பட்டு வருகிறார்களாம்.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
கால பைரவர் கோயில்
பழமையான ஹிந்துக்களின் பாரம்பரியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது உஜ்ஜைன் நகரத்தில் உள்ள கால பைரவர் கோவில். இந்த கோவில் ஆன்மீக அறிவியல் சடங்குகளுடன் தொடர்பில் உள்ளது. கால பைரவர் என்பது சிவபெருமானின் கடுமையான ருத்ர தாண்டவத்தை குறிக்கும். புனிதமான இந்த கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை தினசரி காணலாம். கோவில் வளாகத்தில் உடம்பு முழுவதும் சாம்பல் பூசிய சாதுக்களை பார்க்கலாம். கோவிலில் அழகிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் ஒரு ஆலமரம் உள்ளது. அதனடியில் ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது. இந்த சிவலிங்கம் நந்தி சிலைக்கு எதிரில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றி பல புராணக் கதைகள் பொறிக்கப்பட்டுள்ளன. தன் அடிமனதில் இருந்து வேண்டுபவர்களுக்கு நினைத்த காரியம் நடக்கும் என்று நம்பப்படுகிறது. மகாசிவராத்திரி அன்று இந்த கோவில் வளாகத்தில் பெரிய திருவிழா நடைபெறும்.

சின்தமன் கணேஷ் கோவில்
உஜ்ஜைன்னில் உள்ள முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்று தான் சின்தமன் கணேஷ் கோவில். விநாயகரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு இந்தக் கோவிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சின்தமன் என்ற பழமையான ஹிந்து சொல்லுக்கு 'மன அழுத்தத்தை நீக்குதல்' என்று பொருளாகும். இங்கு மன அழுத்தத்துடன் வரும் அனைத்து பக்தர்களுக்கும் விநாயகர் உடனடி நிவாரணம் தருவார் என்று மக்களால் நம்பப்படுகிறது. இந்த கோவில் வளாகத்திற்கு மிக அருகில், பதேபூர் இரயில் பாதையை ஒட்டி அமைந்துள்ளது ஷிப்ரா நதி. இந்த கோவிலை வந்தடைய பல வசதிகள் உள்ளன. இங்கு தனியார் வாகனம், பேருந்து, ஆட்டோ மற்றும் இரயில்கள் மூலம் வரலாம். உஜ்ஜைன் இரயில் நிலையத்திலிருந்து இந்த கோவில் வெறும் 5 கி.மீ. தொலைவில் தான் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் விநாயகர் ஒரு சுயம்பு வடிவம் என்று உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். விநாயகரின் இருபக்கத்திலும் ரித்தி மற்றும் சித்தி வீற்றிருப்பதை பார்க்கலாம்.

மகாகலேஷ்வர் கோவில்
உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகலேஷ்வர் கோவில் ஒரு மங்களகரமான கோவிலாக ஹிந்துக்களால் பார்க்கப்படுகிறது. இந்த கோவில் ஒரு ஏரியின் அருகில் பெரிய மதில்களால் சூழப்பட்டு முற்றத்துடன் மிடுக்குடன் காட்சியளிக்கிறது. இந்த கோவிலில் ஐந்து அடுக்குகள் காணப்படுகின்றன. அதில் ஒரு அடுக்கு தரை மட்டத்துக்கு கீழ் உள்ளது. இங்குள்ள கடவுளை தட்சிணாமூர்த்தி என்று அழைப்பர். தட்சிணாமூர்த்தி தெற்கு திசையை நோக்கி காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலுள்ள 12 ஜ்யோதிர்லிங்கத்தில் இதுவும் ஒன்றாகும். இங்கு கடவுளுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை மீண்டும் ஒரு முறை படைக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் இது இந்த கோவிலை தவிர வேறு எங்கும் நடப்பதில்லை. இந்த கோவிலில் ஓம்கரேஷ்வர் சிவனுக்கு சிலை உள்ளது. மஹகல் சன்னதிக்கு மேல் தான் இந்த சிவனின் கருவறை அமையப்பெற்றுள்ளது. மகாசிவராத்திரி அன்று இந்த கோவில் வளாகத்தில் பெரிய பொருட்காட்சி நடைபெறும்.

அப்பர் லேக் ஏரி
மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளில் நம் நாட்டிலேயே மிகவும் பழமையான ஏரியாக அப்பர் லேக் ஏரி உள்ளது. 11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஏரி உள்ளூர் மக்களால் பாடா தலாப் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கோலன்ஸ் நதிக்கரையின் மேல் மாபெரும் கரைகளுடன் உள்ள இந்த ஏரி இந்தியாவிலேயே மிகவும் அழகிய ஏரியாக அறியப்படுகிறது. புராணங்களில் போஜ ராஜனின் ஆணையால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த ஏரியின் தண்ணீர் போஜ ராஜனின் நோயைத் தீர்க்கவல்லதாக கருதப்பட்டதாகும். மிகவும் பரந்த பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏரி மிகப்பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் உள்ளது. அப்பர் லேக் ஏரியின் தண்ணீர் தான் போபால் நகர வீடுகளுக்கு குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஏரியை அழகுபடுத்தும் பொருட்டாக இங்கு உருவாக்கப்பட்டுள்ள கமலா பார்க், இப்பகுதியின் அழகை மேலும் கூட்டுவதாகவே உள்ளது.

இந்திரா காந்தி தேசிய அருங்காட்சியகம்
போபால் நகரத்தின் ஷாம்லா மலைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்திரா காந்தி தேசிய அருங்காட்சியகம், அப்பர் லேக் ஏரியின் சுற்று வட்டக் காட்சியைக் காண ஏற்ற இடமாகும்.
இந்த 1977-ம் ஆண்டு மனித குல வராலாற்றை மக்களுக்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த சங்கராலயாவில் மிகப்பெரிய திறந்தவெளி மானிடவியல் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கத்திற்காகவே, எண்ணற்ற திறந்த வெளி கண்காட்சிகள் மற்றும் உள்ளரங்கு கண்காட்சிகளையும் நடத்தி வருகின்றனர். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் ஆழமான பார்வையையும், பழமையான இந்திய கலை மற்றும் கட்டிடக்கலை பற்றிய பல்வேறு விஷயங்களும் வைக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுக்கு முந்தைய கால ஓவியங்களையும் மற்றும் அவற்றைப் பற்றிய நீண்ட குறிப்புகளையும் கொண்டுள்ள இந்த வகை அருங்காட்சியகத்தை இந்தியாவிலேயே இந்த ஒரு இடத்தில் மட்டுமே காண முடியும்

அப்பர் லேக் ஏரி
அப்பர் லேக் ஏரியின் கரையில் உள்ள கோஹர் மஹால் போபால் நகரத்தின் பிரமிக்க வைக்கும் அரண்மனைகளில் ஒன்றாகும். போபால் நகரத்தின் முதல் பெண் அரசியான கோஹர் பேகம் என்பவரால் இந்த மாளிகை கட்டப்பட்டது. 1820-ம் ஆண்டு அவருடைய பாதுகாப்பு மற்றும் மேற்பார்வையில் இந்த அரண்மனை கட்டப்பட்டதிலிருந்தே இந்த மாளிகை கட்டிடக்கலை அற்புதமாக விளங்கி வருகிறது. இந்து மற்றும் முகலாய கட்டிடக்கலையின் மிகச்சரியான இணைவாகவே இந்த மாளிகை உள்ளது. அது கட்டப்பட்ட காலத்தில் இருந்த எதிர்பார்ப்பிற்கேற்ப இந்த மாளிகை பராமரிக்கப்படாமல் பரிதாபமான நிலையில் இருந்தாலும், அது தனது முந்நாளைய பிரம்மாண்டத்தையும் மற்றும் வளமையையும் இன்னும் இழக்கவில்லை. இன்றைய நாட்களில் போபால் நகரத்தின் முக்கியமான வரலாற்றுச் சிறப்பு பெற்ற கட்டிடங்களில் ஒன்றாக இருக்கும் கோஹர் மஹாலை, அதன் பழைய அழகையும் மற்றும் பிரமிப்பையும் உருவாக்கும் பொருட்டாக மத்தியப் பிரதேச மாநில அரசு சீரமைப்பு செய்து வருகிறது.

ராஜ்வாடா அரண்மனை
இந்த அரண்மனையின் நுழைவாயிலில் காணும் காட்சி உங்கள் கண்களை விட்டு என்றென்றும் மறவாமல் நிலைத்திருக்கும். இது ஒரு பெரிய வளைவான நுழைவாயிலாக உள்ளது. இந்நுழைவாயிலில் ஒரு பெரிய மரக்கதவு உருவாக்கப்பட்டு, அதில் இரும்பினாலான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பெருமைமிக்க சின்னமாக இருக்கிறது. இந்த அரண்மனை முழுவதுமே கற்கள் மற்றும் மரங்களால் கட்டப்பட்டுள்ளது. பெரிய ஜன்னல்கள், மாடங்கள் மற்றும் நடக்கும் தாழ்வாரங்கள் ஆகியவை இன்றும் ஹோல்கார் அரசர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளன. ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் இந்தூரில் காண வேண்டிய அற்புதமான இடமாக ராஜ்வாடா அரண்மனை உள்ளது.



Click it and Unblock the Notifications




