» »வருடம் இருமுறை மட்டும் விழும் ஒளி.... திருவிடைவாசல் மர்மங்கள் பற்றி தெரியுமா?

வருடம் இருமுறை மட்டும் விழும் ஒளி.... திருவிடைவாசல் மர்மங்கள் பற்றி தெரியுமா?

Posted By: Udhaya

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக சம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275வது தலமானது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இந்த கோயிலைப் பற்றிதான் நாம் தற்போது பார்க்கவிருக்கிறோம்.

வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டும் சரியாக இறைவனின் மீது சூரிய ஒளி படுகிறது. இந்த நிகழ்வு வைகாசி மற்றும் மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது. இத்தலத்தின் பெருமை குறித்து பார்க்கலாம் வாங்க.

இந்த மாதத்தின் டாப் 5 அட்டகாசமான கட்டுரைகள் கீழே

பாலசாஸ்தா

பாலசாஸ்தா

இத்தல சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருளுகிறார்.

 தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி

இத்தல தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.

முற்றிலும் நீர் சூழ

முற்றிலும் நீர் சூழ

கோயிலின் மேற்கே காவிரியின் கிளைநதியான வெண்ணாறு, தெற்கே வெள்ளையாறு, வடக்கே பாண்டையாறு, கிழக்கே கடல் சூழ இத்தலம் அமைந்துள்ளது.

மற்றொரு பெருமை

மற்றொரு பெருமை

திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என அழைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் சம்பந்தர் தனது பாடலில் "விடைவாயே' என குறிப்பிட்டு பாடியிருக்கிறார்.

பழமை

பழமை

இத்தலம் 1000 முதல் 2000 வருடங்களுக்கு பழமையானது என்று பல குறிப்புகளின் மூலம் தெரியவருகிறது.

குலோத்துங்கன்

குலோத்துங்கன்


இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. சோழர்களால் கட்டப்பட்ட கோயில் இது என்பதால் அதிக கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்தது.

பலன்கள்

பலன்கள்

திருமணத் தடை, குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த கோயிலுக்கு வந்தால் மிகுந்த பலன் கிடைக்கும் என்கின்றனர்.

சிறப்புக்கள்

சிறப்புக்கள்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.

வேறு தெய்வங்கள்

வேறு தெய்வங்கள்

கோயில் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி கஜலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் முருகர், பாலசாஸ்தா, நவகிரகங்கள், பைரவர், அய்யனார், சூரிய சந்திரர்கள் ஆகியோர் கோயிலில் உள்ள பிற கடவுளர்கள் ஆவர்.

வேண்டுதல்

வேண்டுதல்


தங்கள் வேண்டுதல் நிறைவேற பஞ்சமூர்த்திகளுக்கும் அபிசேகம் செய்து வழிபடுகின்றனர்.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் பகுதிக்குட்பட்ட ஒரு சிறிய ஊர் தான் இந்த திருவிடைவாசல்.

பெரும்பாலும் அதிகம் பேர் அறியாத இடம். இங்குதான் அற்புத புண்ணியகோடியப்பர் கோயில் உள்ளது.

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் நாச்சியார்குப்பம் தாண்டியபிறகு வரும் இந்த ஊர்.

கும்பகோணம், திருவாரூர் போன்ற பகுதிகளிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

இந்த கோயிலின் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களாக பூம்புகார், நாகப்பட்டினம், கும்பகோணம், சுவாமிமலை, திருநாகேஸ்வரம் சிதம்பரம், திருவெண்காடு முதலிய ஊர்கள் உள்ளன.

கும்பகோணம்

கும்பகோணம்


கும்பகோணத்திலும் அதனைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கோவில்களின் காரணமாக இந்நகரம் கோவில்களின் நகரம் என அழைக்கப்படுகிறது.கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிக்குள் 188 கோவில்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Adam63

சுவாமிமலை

சுவாமிமலை


தமிழ் கடவுளான முருகப் பெருமானின் ஆறு படைவீடுகளில் சுவாமிமலையும் ஒரு படைவீடாகும்.

கோவில்கள் நிறைந்த நகரமான கும்பகோணத்திற்கு வெகு அருகாமையில் அமைந்திருப்பதால், ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் சுவாமிமலைக்கு வருகைபுரிகிறார்கள்.

ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா, மார்ச் மாதத்தில் நடைபெறும் பங்குனி உத்திரம் உள்ளிட்ட பிரபலமான திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.

மே மாதத்தில் வைகாசி விசாகத்திருவிழாவும், அக்டோபர் மாதத்தில் கந்த சஷ்டித்திருவிழாவும் கொண்டாடப்படுகின்றன.

UnreachableHost

திருநாகேஸ்வரம்

திருநாகேஸ்வரம்


இவ்வூரில் இரண்டு பெரிய கோவில்கள் உள்ளன. ஒன்று, சிவன் கோவிலான நாகநாத சுவாமி ஆலயம், மற்றொன்று பெருமாள் கோவிலான ஒப்பிலியப்பன் ஆலயம். நாகநாதசுவாமி ஆலயத்தில் சிவபெருமான் நாகநாதசுவாமி என்ற பெயரில் தனது தேவியான பார்வதியுடன் வீற்றிருக்கிறார்.

Raji.srinivas

ஆத்தாடி... எத்தன பாம்பு... இது என்ன ராஜநாகங்களின் தலை நகரமா?

பிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா?

விலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா?

3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்

ரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்