» »கனவில் வரும் காமாட்சி... பிரசாதம் சாப்பிட்டால் குழந்தை பேறு .. எங்கே தெரியுமா?

கனவில் வரும் காமாட்சி... பிரசாதம் சாப்பிட்டால் குழந்தை பேறு .. எங்கே தெரியுமா?

Posted By: Udhaya

தலைநகர் சென்னைக்கு அருகிலேயே இப்படி ஒரு அற்புதம் நிகழ்த்தும் கோயில். கேட்ட கோரிக்கையை நிறைவேற்றும் கோயில். வேண்டியதை அருளும் அம்மன். தாய் காமாட்சி உங்களுக்கு வேண்டுவதை எல்லாம் தருகிறாள்.

நேர்த்திக்கடன் என்று எதுவும் இல்லை. இந்த கோயிலுக்கு வந்தால் மட்டும்போதும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள் என்கின்றனர் இந்த கோயிலின் பக்தர்கள்.

நீண்ட நாட்களாக இந்த கோயிலுக்கு வரும் பக்தர் ஒருவரிடம் விசாரித்தபோது, இந்த உண்மைகள் தெரியவந்தன. இதுவெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று வினவியபோது அவர் தெரிவித்தவை பல. இறுதியாக அவர் சொன்னது இதுதான்.

நம்புங்கள்..நல்லது செய்வாள் காமாட்சி....

இந்த கோயில் குறித்து முழுவதும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

குவியும் பக்தர்கள்

குவியும் பக்தர்கள்

இந்த கோயிலுக்கு வருகை தரும்பக்தர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர்.

சிறப்பு வாய்ந்த கோயில்

சிறப்பு வாய்ந்த கோயில்


இங்கு வரும் பக்தர்கள் குறையுடன் வீடு திரும்புவதில்லையாம் தெரியுமா.

பிரம்மோட்சவ அரிசி

பிரம்மோட்சவ அரிசி

இந்த கோயிலின் பிரம்மோட்சவ அரிசியை எல்லா பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்குகின்றனர்.

குழந்தை பாக்கியம் வேண்டுமா

குழந்தை பாக்கியம் வேண்டுமா

இந்த கோயிலின் காமாட்சியம்மன் இதற்கென சிறப்பு வாய்ந்தவர். இந்த ஊரில் பெரும்பாலும் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறப்பதற்கு இவரின் அருள்தான் காரணம் என்கின்றனர் பக்தர்கள்.

 கடும் தவங்கள்

கடும் தவங்கள்

புராணக்கதைகளில் கடும்தவம் புரிந்து இறைவனை அடைவார்கள். ஆனால் இந்த கோயிலுக்கு சென்று வந்தாலே காமாட்சியை நேரில் கண்டதுபோல என்கிறார்கள் அவர்கள்.

உண்மையா

உண்மையா


பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கோயிலுக்கு வருபவர்கள் கூட ஆச்சர்யப் படுகின்றனர். உண்மையில் காமாட்சி அற்புதம் செய்கிறார்.

 வரலாறு

வரலாறு

இந்த கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டிருந்தது. அது யாரோ ஒருவரின் சாபமேற்று இடிந்து மண்ணாகியது என்பது கோயிலின் மூத்த பக்தர்கள் சொல்லும் வரலாறு.

மீண்டு வந்த காமாட்சியம்மன்

மீண்டு வந்த காமாட்சியம்மன்

தன் சொன்ன வாக்கை காப்பாற்றாத காமாட்சிக்கு கோயில் எதற்கு என்று சாபமிட்டவர். பின்னாளில் காமாட்சியம்மனின் மகிமையை மக்களிடம் கொண்டு சேர்க்கும்பொருட்டு கோயிலுக்கு சேவகம் செய்ய ஆரம்பித்துவிட்டாராம்.

5 நூற்றாண்டு சாபம்

5 நூற்றாண்டு சாபம்

துர்வாசமுனி சாபம் இட்டதும் 5 நூற்றாண்டுகளாக பூசைகள் செய்யாமல் பாழடைந்து மண்ணாகிவிட்டது... கோயில்...

புண்ணியம் சேர்க்கும் நதி

புண்ணியம் சேர்க்கும் நதி

இங்கு பாயும் நதி பெண்ணையில் குளித்தால் சகல பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

நோய்கள் தீரும்

நோய்கள் தீரும்

இந்த நதியில் நோய்களும் தீர்க்கப்படுவதாக பரவலாக நம்பிக்கை உள்ளது.

நதி அமைந்துள்ள இடம்

நதி அமைந்துள்ள இடம்


பென்னையாறு நெல்லூர் மாவட்டத்தில் ஜன்னவாடா மண்டலத்தில் கொங்குபங்கா கரையில் அமைந்துள்ளது.

பனை ஓலையில் ரகசியம்

பனை ஓலையில் ரகசியம்

இந்த கோயிலின் மேற்புறத்தில் வைக்கப்பட்டுள்ள பனைஓலையில் பல ரகசியங்கள் எழுதப்பட்டுள்ளன. அதில் பல நோய்களுக்கு நாட்டு மருந்தும் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தூங்கினால் நோய் தீரும்

தூங்கினால் நோய் தீரும்

இந்த ஆற்றங்கரையில் மூன்று நாள்கள் தூங்கினால் நோய்தீரும் என்கின்றனர் இங்குள்ள மக்கள்.

மனக்குழப்பங்கள் தீர்க்க

மனக்குழப்பங்கள் தீர்க்க

மன பிரம்மை, பேய் பிடித்தமாதிரியான நபர்களை இங்கு அழைத்துச் சென்றால் விரைவில் குணமாக்கித் தருகிறார் காமாட்சி.

குழந்தை பேறு

குழந்தை பேறு

குழந்தை பேறு பெற இக்கோயிலுக்கு வந்து பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

பிரசாதம் சாப்பிட்டால் குழந்தை

பிரசாதம் சாப்பிட்டால் குழந்தை

இந்த கோயிலின் பலகாரம் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இரவில் அம்மன்

இரவில் அம்மன்

இரவில் இங்கு தங்கும் பக்தர்களின் கனவில் காமாட்சியம்மன் வருகிறாராம். யார் கனவில் வருகிறார்களோ அவர்களுக்கு அல்லது அவரது நெருங்கிய உறவினருக்கு குழந்தை பிறக்கும். இது 99 சதவிகிதம் தவறாமல் நடக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

இந்த இடத்தின் பெயர் ஜொன்னவாடா... இது நெல்லூரிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

சென்னையிலிருந்து நெல்லூர் அல்லது வேலூரிலிருந்து நெல்லூர் சென்று அங்கிருந்து எளிதாக அடையலாம்.

 ஸ்ரீகாளகஸ்தி

ஸ்ரீகாளகஸ்தி

ஜொன்னவாடாவிலிருந்து 105 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீகாளகஸ்தி.

திருப்பதி

திருப்பதி


ஜொன்னவாடாவிலிருந்து 3 அரை மணி நேர பயணத்தில் திருப்பதியை அடையலாம்.

Read more about: travel, temple, mystery