உங்களுக்குள் தேங்கி இருக்கும் அழுத்தம் யாவையும் போக்க, நண்பர்களுடன் ஒரு ஜாலி பிக்னிக் செல்ல, குடும்பத்தினருடன் ஆட்டம் போட, காதலருடன் லாங் ரைடு செய்ய இந்த இடம் தான் சரியான சாய்ஸ். சென்னையில் இருந்து வெறும் 90 கிமீ தொலைவில் அமைந்துள்ள நாகலாபுரம் பல நீர்வீழ்ச்சிகளுடன், ஜில்லென்ற வானிலையுடன், கண்கவர் இயற்கை சூழலுடன் நம் மனதை மயக்குகிறது. சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் எப்படி பிளான் பண்ணுவது என்று இங்கே பாருங்கள்!
சென்னையிலிருந்து மிக அருகில் அமைந்திருக்கும் அழகிய இடம்
எப்பொழுதும் சென்னை நகரத்திற்கு உள்ளேயே பரபரப்பான சாலைகளுக்குள் சுற்றி திரிந்து அலுப்பாகி விட்டதா? இயற்கை சார்ந்த சூழல், மரம், செடி, கொடிகள், காடுகள், நீர்வீழ்ச்சி என பார்த்து ரசித்து ட்ரெக்கிங் செய்தால் நன்றாக இருக்கும் தானே! சென்னையில் இருந்து வெறும் 90 கிமீ தொலைவில் அமைந்துள்ள நாகலாபுரம் பல நீர்வீழ்ச்சிகளுடன், கண்கவர் இயற்கை சூழலால் நம் மனதை மயக்குகிறது. சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் செல்ல இது மிகவும் சரியான ஸ்பாட் ஆகும்.

சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் தான் பெஸ்ட் சாய்ஸ்
பரபரப்பான நகர வாழ்வில் இருந்து சற்று ஓய்வெடுத்து இயற்கையின் மடியில் லேசாக தலை சாய்த்தால் எப்படிப்பட்ட மன குழப்பமும், டென்ஷனும், வருத்தமும் நீங்கிவிடும். ஆனால் வேலைப்பளு, குடும்ப அலுவல்களால் சென்னையில் இருந்து நகர முடியவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் அச்சமின்றி இந்த இடத்தை தேர்வு செய்யலாம். நாகலாபுரம் சென்னையிலிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளதால் அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்தில் அடைந்திடலாம். அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் ஆட்டம் போட்டுவிட்டு மாலை கிளம்பினால் இரவு சென்னைக்கு வந்து விடலாம்.
மிகவும் பாதுகாப்பாக இருப்பதால் பயமின்றி செல்லலாம்
நாகலாபுரம் நீர்வீழ்ச்சிகள் சென்னைக்கு அருகில் இருக்கும் மிக அழகிய நீர்வீழ்ச்சிகள் ஆகும். சென்னையிலிருந்து 90 கிமீ தொலைவிலும் ஊத்துக்கோட்டையில் இருந்து 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. முன்பு இருந்ததை விட இப்போது கட்டுப்பாடுகள் கூடியிருக்கிறது. வனத்துறையே இதை எடுத்து நடத்துவதால் இங்கு பாதுகாப்பு குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதனால் குடும்பம், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் தாரளமாக நீங்கள் இங்கே வரலாம்.

சென்னையிலிருந்து எப்படி செல்வது
காலையில் நீங்கள் 7 மணிக்கெல்லாம் கிளம்பினால் தான் சரியாக இருக்கும். சென்னையில் இருந்து NH 16 வழியாக புழல், ரெட்ஹில்ஸ் வழியாக, திருப்பதி சாலையில் இடது புறமாக சென்றால் ஊத்துக்கோட்டையை அடைவீர்கள். அங்கிருந்து பிச்சாத்தூர் வழியாக சென்றால் அரை மணி நேர்த்தில் செக் போஸ்டிற்கு வந்திடலாம். அனைத்து நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து விட்டு மாலை 5 மணிக்கு கிளம்பினாலும் கூட சீக்கிரம் சென்னை வந்தடையலாம்.
சொந்த வாகனங்களில் செல்வதே சிறந்தது
நீங்கள் அங்கு சென்ற உடனே செக் போஸ்ட் உங்களை வரவேற்கிறது. பேருந்து, ரயில் போன்ற வசதிகள் எல்லாமும் மிக தூரத்தில் இருப்பதால் நீங்கள் உங்கள் சொந்த வாகனங்களில் வருவது மிக நல்லது. செக் போஸ்டை ஒட்டியிருக்கும் பார்க்கிங்கில் உங்களது கார் அல்லது பைக்கை பார்க் செய்துவிட்டு. அங்கிருந்து நடக்க ஆரம்பிக்கலாம். 5 அருவிகள் கொண்ட நாகலாபுரம் நீர்வீழ்ச்சிகள் ஒவ்வொன்றை அடைவதற்கும் குறைந்தபட்சம் 20 முதல் 25 நிமிடங்கள் ஆகிறது.

நம்முள் இருக்கும் ஆனந்தம் தானாக வெளியே வரும்
செக் போஸ்டில் இருந்து ஒன்றரை கிமீ தூரத்தில் முதல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. செக் போஸ்டில் ரூ. 20 செலுத்தி என்ட்ரி டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளுங்கள். அங்கிருந்து மெதுவாக நடக்க ஆரம்பியுங்கள். உங்களை போலவே அங்கு நிறைய பயணிகள் வருகை தருவதால் எப்படி செல்வது என்று பயம் வேண்டாம். வேடிக்கை பார்த்துக்கொண்டே ஆனந்தமாக நடக்கலாம். 20 நிமிடங்களிலேயே முதல் நீர்வீழ்ச்சியை அடைந்து விடுவீர்கள். எப்பொழுதும் நகரத்திற்கு உள்ளேயே இருக்கும் நமக்கு நீர்வீழ்ச்சியின் சத்தத்தை கேக்கும் பொழுது நம்முள் எழும் ஆரவாரத்திற்கு அளவே இருக்காது.
நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?
முதல் நீர்வீழ்ச்சியில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலே அடுத்தடுத்த நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. சுற்றிலும் பசுமை, தூய்மையான நீர், சிறு சிறு குளங்கள் என பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. இந்த சிறு குளங்களிலும் நீர்வீழ்ச்சியிலும் நீங்கள் இறங்கி குளிக்கலாம். நீர் மிகவும் இதமாக இருப்பதால் உங்களுக்கு அதைவிட்டு வெளி வரவே மனது இருக்காது. நீங்கள் ஒரு செட் மாற்றுத்துணி, வழுக்காத செருப்பு, டவல், பிஸ்கட், சாக்லேட், தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டி எடுத்து செல்வது அவசியம். ஏனெனில் அங்கு எதுவும் கிடைக்காது. அதே நேரத்தில் இவ்வளவு மெனக்கெட்டு வந்த இடத்தில் அமர்ந்து ரசித்தால் தானே நன்றாக இருக்கும்.
அவ்வளவு தான், நாளையே உங்கள் ட்ரிப்பை பிளான் பண்ணிடுங்கள்!



Click it and Unblock the Notifications





