
உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் நைனித்தல் என்னும் நகரம் அந்த மாநிலத்தின் முதன்மையான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. குமாவ்ன் மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த நகரின் முக்கிய இடமாக நைனி ஏரி திகழ்கிறது.

Photo: படம் : Udayanarya
பேரிக்காய் வடிவில் அமைந்திருக்கும் இந்த ஏரி சுற்றுலாப்பயணிகளுக்கு என்று ஏராளமான விஷயங்களை கொண்டுள்ளது. இதன் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு துடுப்பு படகு அல்லது சொகுசு படகில் சவாரி செய்யலாம்.
மேலும் இந்த நைனி ஏரியை சுற்றி ஏராளமான ரிசார்ட்டுகள் மற்றும் கடைகள் உள்ளன. அங்கே இருந்தபடியும் நாம் இந்த ஏரியின் பேரழகையும், சுற்றிலும் சூழ்ந்திருக்கும் ஹிமாலய மலையையும் ரசிக்கலாம்.

இதை தவிர்த்தும் நைனித்தலில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன.
நைனி தேவி கோயில்:

படம் : Ekabhishek
நைனி ஏரியின் வட கரையில் அமைந்திருக்கும் நைனி அம்மன் கோயிலால் தான் இந்த நகரம் நைனித்தல் என்னும் பெயரையே பெற்றிருக்கிறது. இந்த கோயிலில் நைனி அம்மன் இரு கண்களின் வடிவாக வணங்கப்படுகிறார். மேலும் இந்தியாவில் இருக்கும் 64 ஷக்தி பீடங்களில் ஒன்றாகவும் இக்கோயில் கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகை தரும் இக்கோயிலுக்கு செல்ல மறந்து விடாதீர்கள்.

இதே நைனித்தல் மாவட்டத்தில் தான் நைனித்தல் ஏரியில் இருந்து 142 கி.மீ தொலைவில் இந்தியாவின் பழமையான தேசிய பூங்காவான ஜிம் கார்பெட் தேசிய பூங்கா அமைந்திருக்கிறது. உலகத்திலேயே அதிகமான காட்டுப்புலிகளை கொண்ட இந்தியாவில், கார்பெட் தேசிய பூங்காவில் மட்டும் சுமார் 160 புலிகள் உள்ளன.
புலிகளை தவிர இங்கு மற்ற விலங்குகளான சிறுத்தைப்புலிகள், யானைகள், புள்ளி மான்கள், சம்பார் மான்கள், ஹாக் மான்கள், தேவாங்கு கரடிகள், காட்டுப் பன்றி, குரல், லாங்கூர், ரெசுஸ் குரங்குகள் ஆகியவையும் இருக்கின்றன.

இவைத்தவிர 600-க்கும் மேற்பட்ட பறவைகளின் வாழ்விடமாக திகழும் கார்பெட் தேசிய பூங்காவில், 51 வகையான புதர்களையும், 30 வகையான மூங்கில்களையும் மற்றும் 110 வகையான மரங்களையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
குர்பதால்:
குர்பதால் நைனித்தால் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள குர்பதால், தூண்டில் மீன் பிடிப்பு பிரியர்களுக்கு மிகவும் உகந்த இடமாகும். குடும்பத்தினருடனோ தேநிலவுக்கோ இங்கு வந்து உங்கள் அன்பானவருடன் இயற்கையின் பேரழகை ரசிக்க விரும்பினால் நைனித்தல் தான் மிக சிறந்த இடம்.



Click it and Unblock the Notifications



