அருணாச்சலப் பிரதேசத்தின் கோன்சாவிலிருந்து 166 கிமீ தொலைவில் அமைந்துள்ள நம்தாபா தேசியப் பூங்கா சுமார் 2000 சதுர கிலோமீட்டர் அளவில் பரந்து விரிந்து அங்குள்ள முதன்மையான சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.
இந்திய மியான்மர் எல்லையில் அமைந்துள்ள இந்த தேசியப் பூங்கா தனித்துவமான வனப்பகுதி, ஊடுருவ முடியாத பழமை மற்றும் பசுமையான தாவரங்களின் மயக்கும் அழகால் சூழப்பட்டுள்ளது.
1972 இல் வனவிலங்கு சரணாலயமாக நிறுவப்பட்ட இந்த பூங்கா, 1983 இல் புலிகள் காப்பகமாகவும் தேசியப் பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான இந்த இடம் இயற்கையுடன் ஒன்றாக இருக்க விரும்புவோருக்கு மிகவும் பொருத்தமான ஒரு ஸ்பாட் ஆகும். இந்த பூங்காவை பற்றிய மேலும் சில சிறப்பம்சங்களை இங்கே காண்போம்!

நம்தாபா தேசியப் பூங்காவில் உள்ள வனவிலங்குகளும் தாவரங்களும்
பட்காய் மலைத்தொடர் மற்றும் டாபா பம் மலைத்தொடருக்கு இடையில் அமைந்துள்ள இந்த பூங்கா, சுமார் 425 வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு தாயகமாக உள்ளது.
இங்கே விலங்கினங்களில் பனிச்சிறுத்தைகள், ஸ்நோவி த்ரோட்டடு சிறுத்தைகள், சிறுத்தைகள், புலிகள், ஓநாய்கள், ஆசிய கருப்பு கரடிகள், சிவப்பு பாண்டாக்கள், சிவப்பு நரிகள், மஞ்சள் தொண்டை மார்டென்ஸ், ஸ்லோ லோரிஸ், ஹூலாக் கிப்பன்கள், லாங்கர்ஸ் மற்றும் அஸ்ஸாமிஸ் மகேஸ்கஸ்குஸ் ஆகியவற்றை நாம் காணலாம். மேலும், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நம்டபா பறக்கும் அணில் நம்தாபா தேசியப் பூங்காவில் மட்டுமே காணப்படுகிறது.
பறவையின் பன்முகத்தன்மையில் ஹார்ன்பில்ஸ், ஸ்னோய் டோன்ட் பாப்லர்ஸ், ருஃபஸ்-நெக் ஹார்ன்பில், க்ரீன் கோக்கோவா, பர்ப்பிள் கோச்சோவா மற்றும் அழகான நத்தாட்ச் ஆகியவை அடங்கும்.
மேலும் லிசு, சக்மா, டாங்சா மற்றும் சிங்போவின் குடியிருப்புகளும் பூங்காவிற்குள் உள்ளன.

நம்தாபா தேசியப் பூங்காவில் நாம் என்னவெல்லாம் செய்யலாம்
பூங்காவின் கீழ் பகுதிகள் துணை வெப்பமண்டலமாக இருந்தாலும், நீங்கள் மேலே செல்லும்போது நிலப்பரப்பு விரைவில் துணை வெப்பமண்டல பைன் காடுகள், மிதமான காடுகள், ஆல்பைன் புல்வெளிகள் மற்றும் வற்றாத பனி ஆகியவற்றால் நம்மை வரவேற்கும். அதிக உயரமான பகுதிகள் ஆண்டின் பெரும்பகுதிக்கு பனிக்கட்டியாகவே இருக்கும். இங்கே ட்ரெக்கிங் செய்வது மிகவும் பிரபலம்.
எல்லைக்குள் முகாமிட அனுமதிக்கும் சில தேசியப் பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும். இயற்கை எழிலுக்கு மத்தியில் முகாமிட்டு தங்க நம் யாருக்குத் தான் பிடிக்காது என்று சொல்லுங்களேன்! ஆனால் நீங்கள் இதை முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்.
வனவிலங்குகளையும், பறவைகளையும் பார்த்து மகிழ்ந்துவிட்டு இங்கேயே யானை மீது சவாரி செய்யலாம். பல்வேறு வியப்புகள் ஆழ்ந்த மியாவ் மியூசியத்தையும் பார்வையிடலாம்.

நம்தாபா தேசியப் பூங்காவை எப்படி அடையலாம்?
தேசியப் பூங்காவில் இருந்து 160 கிமீ தொலைவில் உள்ள திப்ருகரில் உள்ள மோகன்பரி விமான நிலையம் பூங்காவிற்கு அருகிலுள்ள விமான நிலையம் ஆகும். மேலும் 140 கிமீ தொலைவில் அமைந்துள்ள டின்சுகியா ரயில் நிலையம் பூங்காவிற்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும்.
நம்தாபா தேசியப் பூங்கா நாட்டின் அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் இடங்களுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் தினமும் பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படுவதால் சாலை வழியாகவும் நீங்கள் செல்லலாம்.



Click it and Unblock the Notifications




