Search
  • Follow NativePlanet
Share
» »பகவான் விஷ்ணு பூமியில் அவதரித்த இடம் எது தெரியுமா?

பகவான் விஷ்ணு பூமியில் அவதரித்த இடம் எது தெரியுமா?

பகவான் விஷ்ணு பூமியில் அவதரித்த இடம் எது தெரியுமா?

By Udhay

உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் நந்தபிரயாகை ஆகும். இந்த இடம் ஆலக்நந்தா மற்றும் நந்தாகினி ஆகிய ஆறுகள் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் தங்களுடைய பாவங்களை கரைப்பதற்காக இந்த சங்கமத்தில் மூழ்கி எழுந்து செல்வார்கள். இந்து புராணங்களின் படி, நந்தபிரயாகை யாது வம்சத்தினரின் தலைநகரமாகும். புகழ் பெற்ற சுற்றுலாதலங்களான பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் செல்ல நுழைவாயிலாக இருக்கும் ஐந்து பிரயாகைகளில் ஒன்றாக நந்தபிரயாகை உள்ளது. விஷ்ணுபிரயாகை, கர்ணபிரயாகை, ருத்ரபிரயாகை மற்றும் தேவபிரயாகை ஆகியவை பிற பிரயாகைகளாகும். நந்தபிரயாகை அதன் அழகிய பனி படர்ந்த மலைகளுக்காக புகழ் பெற்ற இடமாகும். நந்தபிரயாகையில் ஆலக்நந்தா நதிக்கரையில் உள்ள கோபால்ஜி கோவிலுக்கு நாடு முழுவதுமிருந்து எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பகவான் விஷ்ணு பூமியில் அவதரித்த இடம் எது தெரியுமா?


Fowler&fowler

எங்கே இருக்கிறது

கர்னபிரயாகையிலிருந்து 18 கிமீ தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.

அலக்நந்தா ஆறு

அலக்நந்தா ஆற்றின் மூல ஆறுகள் பத்ரிநாத் தம் அருகிலுள்ள சட்டோப்பந்த் மற்றும் நந்தாகினி ஆறு ஆகும். இந்த நந்தாகினி ஆறு நந்தா தேவி சிகரத்திலிருந்து பாய்ந்து வருகிறது

பகவான் விஷ்ணு பூமியில் அவதரித்த இடம் எது தெரியுமா?


Michael Scalet

என்னவெல்லாம் செய்யலாம்

இயற்கை நடைபயணம், கிராமத்து சுற்றுலா, தியானம் முதலியன இந்த பயணத்தில் நாம் செய்யமுடியும்.

இயற்கை நடை - இங்குள்ள பகுதிகளில் காலையிலேயே காலார நடைபோடுவது மிகச் சிறப்பானதாக இருக்கும். பச்சை பசேலென்ற இயற்கை அழகை ரசிக்க யாருக்குதான் பிடிக்காது. அதுவும் நம் மனம் விரும்பியவர்களுடன் செல்வது சிறப்பு அல்லவா?

கிராமத்து சுற்றுலா

பொதுவாகவே கிராமத்தைச் சுற்றிப் பார்க்க நமக்கு ஆர்வம் இருக்கும். அதுவும் பசுமையான கிராமம் என்றால் சொல்லவா வேண்டும். கிராமத்தின் காடுகள், மலைகள், மூலை முடுக்குகளெல்லாம் செல்வோம். சுற்றுலாவை அனுபவிப்போம்.

பகவான் விஷ்ணு பூமியில் அவதரித்த இடம் எது தெரியுமா?

Fowler&fowler

தியானம்

நம் ஒவ்வொருவருக்கும் தியானம் மிக முக்கியம் என்பது சிறப்பானது.

எப்போது செல்லலாம்

ஜனவரியிலிருந்து ஜூன் வரையிலும், செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரையிலும் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.

அமைந்துள்ள இடம் - சாமோலி, கார்வால்

எவ்வளவு நாள் தங்கலாம் - ஒரு நாள்

பிரபலமான இடம் - சர்தாம் ரூட், ஆன்மீகத் தலம்

அருகிலுள்ள ரயில் நிலையம் - ரிஷிகேஸ் இது 194 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

விமான நிலையம் - ஜாலி கிராண்ட் விமான நிலையம், டேராடூன். இது 214 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X