Search
  • Follow NativePlanet
Share
» »ஆயிரம் வருட வரலாற்றை புதைத்து வைத்துள்ள நானேகாட் மலைகள்!

ஆயிரம் வருட வரலாற்றை புதைத்து வைத்துள்ள நானேகாட் மலைகள்!

தானே மாவட்டத்தில் மால்ஷேஜ் காட் பிரதேசத்தில் இந்த நானேகாட் மலைகள் அமைந்துள்ளன. இந்த மலைகள் கடல் மட்டத்திலிருந்து 838.2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன.இந்த மலைகளுக்கிடையே மிகப்புராதனமான கணவாய் வழி ஒன்று

By Udhaya

தானே மாவட்டத்தில் மால்ஷேஜ் காட் பிரதேசத்தில் இந்த நானேகாட் மலைகள் அமைந்துள்ளன. இந்த மலைகள் கடல் மட்டத்திலிருந்து 838.2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன.இந்த மலைகளுக்கிடையே மிகப்புராதனமான கணவாய் வழி ஒன்று உள்ளது. இது காட்மாதாவையும் கொங்கண் பிரதேசத்தையும் இணைக்கிறது. இந்த கணவாய் பகுதியில் பல குகைக்குடைவுகளும் பாறைத்தடாகங்களும் காணப்படுகின்றன.இந்த குகைகளில் பிராம்மி மொழியில் காணப்படும் கல்வெட்டு குறிப்புகள் காணப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாகும்.நானச்ச அங்கதா என்ற உயரமான சிகரம் நானேகாட் மலைகளில் அமைந்துள்ளது. இது 'மலையேறி'களுக்கும் பாறை ஏற்றம் செய்வோருக்கும் மிகப்பிடித்தமான ஒரு ஸ்தலமாகும். வாருங்கள் இந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பற்றி பார்க்கலாம்

பிவாண்டி

பிவாண்டி

தானே மாவட்டத்தில் குறிப்பிடத் தக்க சுற்றுலா ஸ்தலங்களில் பிவாண்டியும் ஒன்று. இது தானே நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில், மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த இடம் இங்குள்ள நெசவு தொழிற்சாலைகளுக்கும், கார்பெட், பட்டுத்துணி, கைத்தறி போன்ற பிரத்யேக படைப்புகளுக்கு பெயர் பெற்றுள்ளது. கொங்கண பிரதேசத்தின் கரையோரப்பகுதியில் அமைந்துள்ள பிவாண்டி சுற்றிலும் உயரமான மலைகள் சூழ காணப்படுகிறது.

பஸைன் கோட்டை

பஸைன் கோட்டை


தானே மாவட்டத்தில் வஸாய் மாவட்ட த்தில் இந்த பஸைன் கோட்டை அமைந்துள்ளது. இது தற்சயம் வஸாய் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. தானே ஓடையை ஒட்டி அமைந்த போர்த்துகீசிய குடியிருப்பாக இது ஆரம்ப காலத்தில் விளங்கியது. அப்போது இந்த கோட்டை ‘ஃபோர்ட் ஆஃப் செயிண்ட் செபாஸ்டியன் ஆஃப் வஸாய்' என்று அழைக்கப்பட்டது. ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய கோட்டையான இது குஜராத் சுல்தான் பஹதூர் ஷா'வால் கட்டப்பட்டுள்ளது.

Gladson Machado

வரலாற்று புகழ்மிக்க கோட்டை

வரலாற்று புகழ்மிக்க கோட்டை

இக்கோட்டை அக்காலத்தில் போர்த்துக்கிசியர்களால் எழுப்பப் பட்டிருந்தாலும் இந்திய அரசரின் கட்டுப்பாட்டின் கீழேயே அச்சமயம் இது இருந்துள்ளது. பின்னர் மராத்தியர்கள் 1739 ஆண்டில் இந்த கோட்டையை கையகப் படுத்தினர். இந்த பஸைன் கோட்டையானது ஒட்டுமொத்த பஸைன் பிரதேசத்துக்கும் காவல் அரணாக திகழ்ந்திருக்கின்றது. 58000 கிறித்துவ மக்களுக்கும், 60000 இந்திய மக்களுக்கும் 2000 போர்த்துகீசிய மக்களுக்கும் இது அரணாக விளங்கியிருக்கிறது. ஒரு சோகமான விஷயம் இந்த சரித்திர புகழ்பெற்ற கோட்டை தற்சமயம் சிதிலமடைந்து இடிபாடுகளுடன் காணப்படுவதுதான்.

Gladson777

அமைப்பு

அமைப்பு

இருப்பினும் இதன் பிரம்மாண்டமான கோட்டைச்சுவர்கள் 4.5 கி.மீ நீளத்துக்கு இன்றும் கம்பீரமாக நிற்கின்றன. ‘போர்ட்டா டா டேர்ரா' மற்றும் ‘போர்ட்டா டா மார்' என்ற இரண்டு கதவுகள் போர்த்துகீசிய சர்ச்சுகள் மற்றும் கட்டிடங்களின் மிச்சமாக காட்சியளிக்கின்றன. இந்த கோட்டையின் வாயில்கள் மிக அற்புதமான கலை அம்சத்துடன் பல அலங்கார வேலைப்பாடுகள் குறிப்புகளுடன் காணப்படுகின்றன. அவற்றுக்கு அருகிலேயே 1558 ம் ஆண்டைச் சேர்ந்த போர்த்துகீசிய கல்லறைகள் காணப்படுகின்றன. கோட்டையை சுற்றி சூழ்ந்துள்ள பிரதேசம் மிகுந்த இயற்கை எழிலுடன் மூன்று புறமும் கடல் சூழ காட்சியளிக்கின்றது. பாலிவுட் சினிமா தயாரிப்பாளர்களால் படப்பிடிப்புக்கு மிகவும் விரும்பப்படும் இடமாக இது விளங்குகிறது.
Gladson Machado

உப்வண் ஏரி

உப்வண் ஏரி

தானே பகுதியில் உள்ள 23 ஏரிகளில் இந்த உப்வண் ஏரி இயற்கை ரசிகர்கள் மற்றும் தனிமையில் பொழுது போக்க விரும்பும் காதலர்கள் விரும்பும் இடமாக உள்ளது. இளைஞர்கள் தம் நண்பர்களுடன் பொழுது போக்குவதையும் இங்கு அதிகமாக காணலாம்.

சுற்றியுள்ள இயற்கைக்காட்சிகளை வசதியாக அமர்ந்து ரசிப்பதற்கேற்ற இருக்கைகள் இங்கு அதிக அளவில் உள்ளன. தானே மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மிகப்பெரிதாக இந்த உப்வண் ஏரி கருதப்படுகிறது.

Verma a k

ஏயூர் மலைகள்

ஏயூர் மலைகள்

நீங்கள் ஒரு இயற்கை உபாசகராக இருக்கும் பட்சத்தில் தானே நகரத்தில் பார்க்க வேண்டிய முதல் 20 இடங்கள் பட்டியலில் இந்த ஏயூர் மலைகள் இடம் பெற வேண்டியது அவசியம். மக்கள் கூட்டமற்ற, மாசற்ற சுற்றுப்புற சூழல் உங்களுக்கு பிடித்தமானது எனில் ஏயூர் மலைகள் நிச்சயமாக உங்கள் உணர்வுகளை கவர்ந்திழுக்கும். மாமா பாஞ்சா மலைகள் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த மலைப்பகுதி தானேயிலிருந்து சிற்றுலா செல்வதற்கு சிறந்த இடம் என்பதால் வார இறுதி நாட்களில் இங்கு அதிக அளவில் மக்கள் வருகை தருகின்றனர். 150 வருடங்கள் பழமையை கொண்ட ஒரு கோயில் ஒன்றும் இங்குள்ளது. ஸ்வாமி மடம் என்பது இங்கு அவசியம் பார்க்க வேண்டிய ஆன்மீக மையமாகும். இங்குள்ள அமைதியும் சாந்தமும் உங்கள் உணர்வுகளை வருடிக்கொடுப்பது போன்ற இயல்பைக்கொண்டிருக்கிறது. இந்த மலையில் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசிய வனவிலங்கு பூங்காவும் நீங்கள் அவசியம் சென்று பார்க்க வேண்டிய இடமாகும். காட்டுயிர் ஆர்வலர்களுக்கு பிடித்தமான இந்தப் பூங்காவில் பலவிதமான தாவர மற்றும் விலங்கு வகைகளை பார்க்கலாம். 12 அரிய வகை விலங்குகளும்78 வகையான பறவைகளும் இங்கு காணப்படுகின்றன.

Pratikbuttepatil52

Read more about: travel india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X