Search
  • Follow NativePlanet
Share
» »சம்பல் முதலைகளைக் காண செல்வோமா?

சம்பல் முதலைகளைக் காண செல்வோமா?

சம்பல் தேசிய சரணாலயம் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது

1070ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சம்பல் தேசிய சரணாலயமானது 'தேசிய சம்பல் கரியல் காட்டுயிர் சரணாலயம்' என்றும் அழைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான மாநிலங்களைச்சேர்ந்த பகுதிகளை உள்ளடக்கிய மும்முனைப்பகுதியில் இந்த காட்டுயிர் சரணாலயம் அமைந்திருக்கிறது. இந்த வனப்பகுதியை ஊடறுத்துக்கொண்டு ஆழமான பள்ளத்தாக்குகள், மலைகள், மணற்கரைப்பகுதிகள் வழியாக சம்பல் ஆறு ஓடுகிறது.

சம்பல் தேசிய சரணாலயம் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது

Chambal_Sanctuary

சம்பல் ஆறு முழுவதும் கரியல் முதலைகள் ஏராளமாக காணப்படுகின்றன. கங்கை டால்பின்கள் மற்றும் ஆலிகேட்டர் முதலைகளும் இதில் வசிக்கின்றன. பல நூற்றாண்டுக்காலமாக மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட மண் அரிப்பின் மூலம் சம்பல் பகுதியில் காணப்படும் ஆழமான பிளவுப்பள்ளத்தாக்குகள் உருவாகியுள்ளன. சம்பல் தேசிய சரணாலயம் 400 கி.மீ 400 கி.மீ தூரத்தை உள்ளடக்கியதாக 400 கி.மீ தூரத்துக்கு ஓடும் சம்பல் ஆற்றுடன் மொத்தம் 1235 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் மொத்தம் 330 வகையான இருப்பிட மற்றும் புகலிடப்பறவைகள் வசிக்கின்றன. இவற்றில் இந்திய வல்லூறு மற்றும் ராட்சத புள்ளிக்கழுகு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

சைபீரியாவிலிருந்து வருகை தரும் இடம்பெயர் பறவைகளும் இப்பிரதேசத்தில் வசிக்கும் உயிரினங்களில் அடங்குகின்றன. IN122 எனும் ஒரு முக்கியமான பறவைகள் சரணாலயமாக இது சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. குளிர்காலத்தில் பூநாரை, பாம்புத்தாரா மற்றும் பழுப்பு ஆந்தை போன்றவற்றை இங்கு காணலாம். புராண இந்திய நூல்களின்படி இந்த சம்பல் ஆறு ஒரு காலத்தில் சர்மான்யவதி எனும் பெயரால் அறியப்பட்டிருக்கிறது. இது ரந்திதேவர் எனும் அரசர் ஆயிரக்கணக்கான பசுக்களை பலி கொடுத்தபோது பெருகிய ரத்தத்தினால் உருவானதாக சொல்லப்படுகிறது. இது போன்ற கதைகள் இப்பகுதிக்கு அதிக மக்கள் விஜயம் செய்யாமல் தடுத்து விட்டன.

சம்பல் தேசிய சரணாலயம் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது

Chambal_Sanctuary

இருப்பினும் இந்தியாவில் ஓடும் மாசுபடாத தூய்மையான ஆறுகளில் இந்த சம்பல் ஆறும் ஒன்று என்பதே உண்மை. பயணம் மேற்கொள்ள ஏற்ற பருவம் சம்பல் தேசிய சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான பருவத்தில் விஜயம் செய்வது சிறந்தது. பயண வசதிகள் டெல்லியிலிருந்து 5 மணி நேர பயண தூரத்தில் சம்பல் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பாதையில் ஆக்ரா நகரமும் உள்ளதால் தாஜ் மஹால் உள்ளிட்ட ஆக்ரா நகர சுற்றுலாத்தலங்களுக்கும் கூட தங்கள் சுற்றுலாவை பயணிகள் திட்டமிட்டுக்கொள்ளலாம். ஆக்ரா நகரத்திலிருந்து ரயில் மார்க்கமாக 80 கி.மீ தூரத்தில் சம்பல் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையமும் ஆக்ரா நகரத்தில்தான் அமைந்திருக்கிறது.

Read more about: uttar pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X