Search
  • Follow NativePlanet
Share
» » நியூயார்க் டைம்ஸின் 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய மாநிலம்!

நியூயார்க் டைம்ஸின் 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய மாநிலம்!

2023 இல் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலை "இந்த ஆண்டு பார்க்க வேண்டிய 52 இடங்கள்" என்ற தலைப்பின் கீழ் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் தரவரிசையில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய மாநிலம் கேரளா மட்டுமே. உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் ஒற்றை இந்திய இடமாக கேரளா இடம் பெற்றிருப்பது இந்திய சுற்றுலாத் துறையை தலை நிமிர செய்துள்ளது. இந்தியாவிலும் கூட எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் இருந்தும், ஏன் கேரளாவை மட்டும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்பது குறித்து இங்கு பார்ப்போம்!

இந்தியாவிலிருந்து இடம் பெற்ற ஒரே மாநிலம்

இந்தியாவிலிருந்து இடம் பெற்ற ஒரே மாநிலம்

புத்தாண்டு முடிந்த பிறகு, உலகெங்கிலும் உள்ள மக்கள் 2023 ஆம் ஆண்டிற்கான தங்கள் பயணத் திட்டங்களைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். சிறந்த இலக்கைத் தேர்வுசெய்ய மக்களுக்கு உதவும் வகையில், நியூயார்க் டைம்ஸ் இந்த "ஆண்டின் 52 சிறந்த சுற்றுலாத் தலங்களை" பரிந்துரைத்துள்ளது. அந்த பட்டியலில், 'கடவுளின் சொந்த நாடு' என்றழைக்கப்படும் நம் கேரளாவும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் கேரளா 13 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

2022 ஆம் ஆண்டின் சிறந்த இடங்கள் பட்டியலிலும் இடம் பெற்ற கேரளா

2022 ஆம் ஆண்டின் சிறந்த இடங்கள் பட்டியலிலும் இடம் பெற்ற கேரளா

இந்தியாவின் மிக அழகான மாநிலங்களில் ஒன்றான கேரளா கண்கவர் கடற்கரைகள் மற்றும் பசுமையான உப்பங்கழிகள், கோவில்கள் மற்றும் அரண்மனைகளுடன் "கடவுளின் சொந்த நாடு" (God's own country) என்றழைக்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே கடந்த ஆண்டு டைம் இதழ் 2022 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த இடங்களையும் சுட்டி காட்டியது. அதில் "ஆராய்வதற்கான 50 அசாதாரண இடங்கள்" என்ற தலைப்பில் கேரளா தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சுற்றுலாவுக்கு பெருமை சேர்த்த கேரளா

இந்திய சுற்றுலாவுக்கு பெருமை சேர்த்த கேரளா

உலக ஹாட்ஸ்பாட்களான லண்டன் மற்றும் ஜப்பானின் மோரியோகா போன்ற இடங்களைக் கொண்ட தரவரிசையில் இந்தியாவிலிருந்து ஒரு இடத்தைப் பிடித்த ஒரே மாநிலம் கேரளா மட்டும் தான். கேரளா அதன் கடற்கரைகள், உப்பங்கழிகள், உணவு வகைகள் மற்றும் வைகதாஷ்டமி பண்டிகை போன்ற பழமையான கலாச்சார பாரம்பரியங்களுக்கு கண்டிப்பாக பயணிக்க வேண்டிய இடமாகும். சுற்றுலாப் பயணிகள் கிராம வாழ்க்கையை அனுபவிக்க அனுமதிக்கும் கேரளாவின் விருந்தோம்பலை நியூயார்க் டைம்ஸ் பாராட்டியுள்ளது.

கேரளா லிஸ்டில் இடம் பெறுவதற்கு காரணமாக இருந்த இடங்கள்

கேரளா லிஸ்டில் இடம் பெறுவதற்கு காரணமாக இருந்த இடங்கள்

குமரகம்

இயற்கை எழில் கொஞ்சும் காயல்களுக்குப் பெயர் பெற்ற குமரகம் வேம்பநாடு ஏரியின் கரையில் அமைந்துள்ளது. பசுமையான நெல் வயல்கள், சதுப்புநில காடுகள் மற்றும் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்ற குமரகம் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கின்றது. இந்த கிராமம் 2008-2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த பொறுப்புள்ள சுற்றுலாத் திட்டத்திற்கான தேசிய சுற்றுலா விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மறவந்துருத்து

கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள மறவந்துருத்து கிராமிய தெருக் கலை மற்றும் பாரம்பரிய கோவில் நடனம் மற்ற வேடிக்கை நிகழ்வுகளை அனுபவிப்பதற்கு ஏற்ற இடமாகும். நீர்நிலைகள் கயாக்கிங், நாட்டுப்படகு, கராக்கிள் படகு சவாரி மற்றும் ஷிகாரா படகு பயணங்களை வழங்குகின்றன.

வைக்கம்

"வைகதாஷ்டமி" பண்டிகை தனித்துவமான கலாச்சார மரபுகளின் கொண்டாட்டமாகும். வைக்கம் மகாதேவர் கோவிலில் நடைபெறும் கிருஷ்ணாத்தமி திருவிழா, மலையாள மாதமான விருச்சிகத்தின் போது நடைபெறும் குறிப்பிடத்தக்க வருடாந்திர நிகழ்வாகும். இன்றும் அரச அடையாளங்களைத் தாங்கி நிற்கும் பழைய படகுத் தளம், லேக் வியூ பீச், சிலைப் பூங்கா, முனிசிபல் பூங்கா, வைக்கம் சத்தியாகிரக காந்தி அருங்காட்சியகம் ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டியவை.

உலக அளவில் இடம் பிடித்த மற்ற இடங்கள்

உலக அளவில் இடம் பிடித்த மற்ற இடங்கள்

கேரளாவைத் தவிர, லண்டன், ஜப்பானின் மோரியோகா, ஸ்காட்லாந்தின் கில்மார்ட்டின் க்ளென், நியூசிலாந்தின் ஆக்லாந்து, கலிபோர்னியாவில் உள்ள பாம் ஸ்பிரிங்ஸ், ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவு, அல்பேனியாவின் வ்ஜோசா நதி மற்றும் நார்வேயின் ட்ரோம்சோ ஆகியவை பட்டியலில் இடம்பிடித்த மற்ற இடங்களும் 2023 இல் பார்க்க்க வேண்டிய சிறந்த இடங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இத்தனை உலகத்தர சுற்றுலா ஈர்ப்புகளில் நம் நாட்டில் இருந்து கேரளா இடம் பிடித்திருப்பது மிகவும் பெருமைமிகு தருணம் தானே!

Read more about: new york times kerala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X