Search
  • Follow NativePlanet
Share
» »நிலாவூர் ஏரியில் குதூகலிக்கலாம் வாருங்கள்!

நிலாவூர் ஏரியில் குதூகலிக்கலாம் வாருங்கள்!

By Udhaya

நிலாவூர் ஏரி ஏலகிரியில் படகுப் பயண விரும்பிகள் அடிக்கடி வந்து செல்லும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றொரு இடமாகும். இது நிலாவூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய ஏரி, கிட்டத்தட்ட கரைகளில் தோட்டங்களுடன் கூடிய குளம் போன்றது. இங்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மிகவும் ரம்மியமான சூழலில் கொஞ்சம் பசுமையும் கிராமத்தின் மண் மணமும் கலந்த ஒரு சிந்தனை ஊற்றாக உள்ளது இந்த நிலாவூர். பெயருக்கு ஏற்றார் போலவே ஊரின் அழகு உங்களைத் திரும்ப இங்கு வரவழைக்கும். அப்படிபட்ட இடத்தை மிஸ் பண்ணலாமா வாங்க ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்துடலாம்.

 எப்படி செல்வது

எப்படி செல்வது

ஏலகிரியிலிருந்து வெறும் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.ஏரிக்கு அருகிலுள்ள பகுதியில் கடவு நாச்சியாருக்கு சொந்தமான தேவி கோயில் ஒன்று உள்ளது. பக்தர்கள் வெள்ளிக்கிழமைகளில் இரவு 11 மணி முதல் 12 மணிவரை பூஜை செய்ய இங்கு வருகின்றனர். இங்குள்ள தேவி ஆற்றல் மிக்கவர் என்று நம்புகின்றனர். சமீபத்தில் நிலாவூர் ஏரி அருகே தம்பிரான் தாமரைக் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள இடங்கள்

அருகிலுள்ள இடங்கள்

மோட்ச விமோசன ஆலயமும் இந்த ஏரி அருகில் உள்ளது. இங்குள்ள மக்கள் இந்தக் கோயிலில் வழிபட்டால் பாவங்களில் இருந்து விடுபெறலாம் என்று நம்புகின்றனர். நிலாவூர் ஏரியைச் சுற்றியுள்ள பகுதி அமைதியாக சாந்தமான அழகுடன் காணப்படுகிறது. நீங்கள் மன அமைதி வேண்டுபவராக இருந்தாலோ அல்லது தினசரி வாழ்கைப்பிரச்சினைகளில் இருந்து சிறிது நேரம் விடுபட விரும்பினாலோ நிலாவூர் ஏரி நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம்.

சுவாமி மலைக் குன்றுகள்

சுவாமி மலைக் குன்றுகள்

சுவாமி மலைக் குன்றுகள் ஒரு கேக் போன்ற அமைப்பு உடையன. உயரமான சிகரங்களைக் கொண்ட இந்த குன்றின் அடித்தளங்கள் ஒரு கேக் போன்று தோன்றுவதுடன் , இதன் சிகரங்கள் விண்ணை முட்டுவது போல் காட்சியளிக்கின்றன. இந்த மலையிலுள்ள உயரமான சிகரம் தரை மட்டத்திலிருந்து 4338 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலையேறுபவர்களுக்கு சுவாமிமலை மிகவும் விருப்பமான ஒரு பாதையாகும்.

Ashwin Kumar

எப்படி போகலாம்

எப்படி போகலாம்

சுவாமிமலை மலையேற்றப்பாதை போய்வர கிட்டத்தட்ட 6 கி.மீ தூரம் கொண்டது. இந்தப் பாதை அழைத்தச் செல்லும் குன்றிலிருந்து பார்த்தால் மலையின் முழுத் தோற்றமும் காணக்கிடைக்கும். சுவாமி மலைக்கு அருகிலுள்ள ஜவ்வாது மலை, பள்ளமத்தி மலை ஆகியவற்றிலும் புகழ்பெற்ற மலையேற்றப் பாதைகள் உள்ளன. இந்த மலைகளில் ஏறுவது எளிதாக இருக்கிறது இவை பயணிகளுக்கு தொலைவில் இருந்து இயற்கை அழகை ரசிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

solarisgirl

 இயற்கைப் பூங்கா

இயற்கைப் பூங்கா

இந்த இயற்கைப் பூங்கா புங்கனூர் ஏரி அருகே 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பாறைகள் நிறைந்த இவ்விடத்தின் தன்மைக்கு ஏற்ற பல வகைத் தாவரங்கள் இந்தப் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. இந்தப் பூங்காவில் செயற்கை நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது. இங்கு குளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கான பூங்கா, இசை நீருற்று , நீர்வாழ் உயிரினங்களின் கண்காட்சி, தோட்டம், மூங்கில் வீடு , கண்ணாடி வீடு ஆகியன உள்ளன. புங்கனூர் ஏரியின் அழகை ரசிக்கவும், ஓய்வுநேரத்தை போக்கவும் இந்தப் பூங்கா சிறப்பான இடம். கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ 15, சிறியவர்களுக்கு ரூ. 5 செலுத்த வேண்டும் இசை நீரூற்றைக் காண ரூ. 25 செலுத்த வேண்டும். காலை எட்டு மணியிலிருந்து மாலை எட்டு மணி வரை பூங்கா திறந்திருக்கும்.

Subharnab Majumdar

மலையேற்றம்

மலையேற்றம்

மலையேற்றம் ஏலகிரி உங்களுக்கு தரும் சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இருக்கும். அடர்ந்த காடுகள் வழியே அழகான இடங்களுக்கும், நீர்வீழ்ச்சிகளுக்கும், சிகரங்களுக்கும், பள்ளத்தாக்கைக் கண்டு ரசிக்கும் இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் ஏழு பாதைகள் இங்கு உள்ளன. உள்ளதிலேயே நீளமான பாதை புங்கனூர் ஏரியிலிருந்து நிலாவூர் ஜலகம்பாறை செல்லும் 14 கி.மீ. தூரமுள்ள பாதையாகும். புங்கனூர் ஏரியிலிருந்து சுவாமி மலைக்கு செல்லும் மற்றொரு அழகான 6 கி.மீ. தூரமுள்ள பாதையும் உள்ளது. இது பலராலும் விரும்பப்படும் பாதையாகும். இந்தப் பாதை அழைத்துச் செல்லும் குன்றிலிருந்து மலையின் மொத்தத் தோற்றமும் காணக்கிடைக்கிறது.

solarisgirl

 வேலவன் கோயில்

வேலவன் கோயில்

வேலவன் கோயில் ஏலகிரி மலையில் உள்ள உயமான சிகரங்களுள் ஒன்றில் அமைந்துள்ளது. இது முருகக் கடவுளின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து மலையின் முழுத் தோற்றமும் காணக் கிடைக்கிறது. மலையின் அடிவாரத்திலுள்ள சமவெளிகளின் அழகிய தோற்றமும் இங்கிருந்து தெரிகிறது. தமிழத்தின் பெரும்பாலான பண்டிகைகள் இங்கு ஆடம்பரமான முறையில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் தான் இங்கு வர சிறந்த சமயம்.

Read more about: travel lake hills chennai yelagiri
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more