Search
  • Follow NativePlanet
Share
» »உலகிலேயே அதிக தங்கம் உற்பத்தி செய்யும் நாடு இது தானாம் – வருடத்திற்கு 330 மெட்ரிக் டன்!

உலகிலேயே அதிக தங்கம் உற்பத்தி செய்யும் நாடு இது தானாம் – வருடத்திற்கு 330 மெட்ரிக் டன்!

தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? பெரியவர்கள், பெண்கள், சிறியவர்கள் என அனைவருமே தங்க ஆபரணங்களை விரும்புகிறார்கள். ராஜா காலம் தொடங்கி இந்த காலம் வரை தங்கத்திற்கான மதிப்பும், விலையும் சற்றும் குறையவே இல்லை. நவீன காலத்தில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட, வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள். நாம் அனைவரும் விரும்பும் தங்கம் எங்கிருந்து வருகின்றது என்று இதுவரை நீங்கள் யோசித்தது உண்டா?

இந்தியாவிற்கு தங்கம் எப்படி வருகிறது

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் தேவையை பூர்த்தி செய்ய, இந்தியா தங்கச் சுரங்கங்களைக் கொண்டுள்ளது. ஆனால், இது ஒரு சிறிய தொகையை மட்டுமே வழங்குகிறது. 2015 ஆம் ஆண்டில், 2 டன்களுக்கும் குறைவான தங்கம் வெட்டப்பட்டது. அதே போல இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், RBI, DGFT மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை தங்க இறக்குமதியை கண்காணிக்கிறது.

goldindia

அதிகரித்துக்கொண்டே போகும் தங்கத்திற்கான தேவை

தங்கம் விலைமதிப்பற்ற உலோகங்களில் ஒன்றாகும், அதன் மதிப்பின் அடிப்படையில் காலத்தின் சோதனையாக நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் வாங்கப்படும் தங்கத்தின் அளவு 70 களின் முற்பகுதியில் இருந்து மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. வரலாற்று ரீதியாக, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் உலகின் மிகப்பெரிய தங்க இருப்புக்கள் உள்ளன, ஆனால் இவை சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

சேர்த்து வைக்கப்படும் தங்க கட்டிகள்

அரிய பொருளான தங்கம் புவிசார் அரசியல் நெருக்கடியுடன் வரும் நிலையற்ற தன்மை மற்றும் நிச்சயமற்ற காலங்களில் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக செயல்படுகிறது. ஏனெனில் இது நீண்ட கால சேமிப்பக மதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாக்கப் பயன்படுகிறது. உலகின் அனைத்து நாடுகளிலும் தங்க கட்டிகள் சேமிப்பாக சேர்த்து வைக்கப்படுகின்றன. இந்தியாவிலும் கூட கிட்டதட்ட 800 டன் தங்க சேமிப்பு உள்ளது.

கொரோனா மட்டுமல்ல தங்கத்திலும் நாங்கள் தான் முதலிடம்

கொரோனா என்ற உடனேயே தங்க உற்பத்தியில் முதல் இடம் பிடித்த நாடு எதுவென்று நீங்கள் யூகித்து இருப்பீர்கள். ஆம், சீனா தான் உலக அளவில் தங்க உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது. ஒரு தசாப்த காலமாக உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர் எனக் கருதப்படும் சீனா, தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளின் உலகளாவிய பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஆச்சரியமில்லை. உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர் சீனா, உலகளவில் உற்பத்தியில் 11% ஆகும்.

india largest producer of gold

ஏன் இந்தியர்கள் சீனாவுக்கு செல்வது இல்லை

எங்கெங்கோ சுற்றுலாவிற்காக செல்லும் இந்திய மக்கள் பெரும்பாலும் அண்டை நாடான சீனாவை ஏன் தேர்ந்தெடுப்பது இல்லை என்பது ஒரு பெரிய ஆச்சரியமே. உலக அதிசயமான சீனப் பெருஞ்சுவர், விழா நகரமான மெக்கா, துடிப்பான நகரமான பெய்ஜிங், உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான ஜியாங், ஹாங்காங், பூ பூக்கும் சோலைகள், பனி மூடிய சிகரங்கள், அழகிய வெள்ளை நதிகள் என சீனா அழகிய கண்கவர் சுற்றுலாத் தலங்களை கொண்டிருந்தாலும், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவு தான்.

டாப் 10 தங்க உற்பத்தி நாடுகள்

1. சீனா, 330 மெட்ரிக் டன்

2. ஆஸ்திரேலியா, 320 மெட்ரிக் டன்

3. ரஷ்யா, 310 மெட்ரிக் டன்

4. கனடா, 220 மெட்ரிக் டன்

5. அமெரிக்கா, 170 மெட்ரிக் டன்

6. மெக்சிகோ, 120 மெட்ரிக் டன்

7. கஜகஸ்தான், 110 மெட்ரிக் டன்

8. தென்னாப்பிரிக்கா, 100 மெட்ரிக் டன்

9. பெரு, 95 மெட்ரிக் டன்

10. உஸ்பெகிஸ்தான், 90 டன்

More News

    Read more about: travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+