Search
  • Follow NativePlanet
Share
» »நுஹ் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

நுஹ் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

நுஹ் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

நுஹ் நகரம் ஹரியானா மாநிலத்தில் உள்ள மேவத் மாநகராட்சியில் டெல்லி-அல்வார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கசேராவை சேர்ந்த பகதூர் சிங் என்பவரின் காலத்தில் தான் இந்நகரம் முக்கியத்துவம் பெற்றது. அதற்கு காரணம் இதன் அருகில் இருக்கும் கிராமங்களில் தயாரிக்கப்பட்ட உப்புகளை வைத்து இங்கே வணிகம் செய்யப்பட்டது. இவர் காலத்தில் இது உப்பு வணிகத்தின் முதன்மையான வணிக மையமாக விளங்கியது. 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல வரலாற்று அழிபாடுகளை இங்கே காணலாம்.

நுஹ் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Anupamg

நுஹ் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

வரலாற்று அழிவுகளின் மிச்சங்கள் மற்றும் சமயஞ்சார்ந்த இடங்கள் தான் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள். இங்குள்ள ஷேக்கிங் மினரெட்ஸ் என்ற இடம் தான் பழங்கால பொறியியலுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. மேலும் இது தான் நுஹ்ஹில் உள்ள முதன்மையான சுற்றுலாத் தலமாகும். மர வேலைபாடுகளுடன் கூடிய செம்மணற்கல் நிரப்பிய சுய் மை குளம் ஒன்று சத்ரி எனப்படும் கட்டத்தில் உள்ளது. நுஹ்ஹிலிருந்து 2 கி.மீ. தொலைவில் ஆரவல்லி மலையின் கீழ் நல்லாத் என்ற கிராமத்தில் ஒரு இயற்கையான நீர்த் தேக்கம் உள்ளது. இதில் உள்ள சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த நீர்த் தேக்கத்தில் இருந்து தண்ணீர் வழிந்தபடியே இருக்கும். மேலும் இது ஆரவல்லி மலையின் பாறைகளுக்கு நடுவில் உள்ளது. இங்கு சிறுபான்மையராக இருக்கும் ஹிந்துக்களின் முக்கியத்துவம் வாய்ந்த சமயஞ்சார்ந்த இடமாக விளங்குகிறது இங்கிருக்கும் சிவன் கோவில். பஞ்ச பாண்டவர்கள் 14 வருடங்களுக்கு நாடு கடத்தப்பட்ட போது, ஒரு முறை இங்கு தங்கி நீர் பருகியதாக நம்பப்படுகிறது. நுஹ்ஹிற்கு சுற்றுலா வருவதற்கான சிறந்த நேரம் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இங்கு வானிலை இனிமையுடன் இருப்பதால் இக்காலத்தில் இங்கு சுற்றுலா வருவதே உகந்த நேரமாக இருக்கும்.

நுஹ்ஹுவை அடைவது எப்படி?

மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்களுக்கு இரயில் மற்றும் சாலை வழியாக நுஹ்ஹிலிருந்து செல்லலாம். நுஹ்ஹிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் குர்கானில் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Read more about: haryana
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X