» »பாம்புகளோட கோட்டை எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!

பாம்புகளோட கோட்டை எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!

Written By: Balakarthik Balasubramanian

சர்ப்பங்களின் வீடுகளாக விளங்கும் இந்தப் பன்ஹாலா (அ) பன்ஹாலாபாத், மராத்தியில் காணப்படுகிறது. கோலாப்பூரிலிருந்து 22.3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளப் பன்ஹாலாக் கோட்டை மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். இந்த டெக்கான் பிரதேசத்தில் உள்ளப் பெரியக் கோட்டைகளில் அப்படி என்ன தான் நம் கண்களை வெகுவாகக் கவர்கிறது! வாங்கப் பார்க்கலாம்!

விடை தெரியாத 'சிதம்பர ரகசியங்கள்' வெளியானதா ? 

கோலாப்பூர் என்றுக் கூறினால் நாம் நினைவிற்கு வருவதுப் புனித லக்ஷ்மி ஆலயம் என நாம் அனைவரும் நினைக்க, "நானும் இங்குப் பிரசித்திப்பெற்ற ஒன்று தான்" எனப் புகழை ஓங்கிப் பெருமையுடன் நிற்கிறது பன்ஹாலாக் கோட்டை. டெக்கான் பிரதேசத்திலுள்ள ஒருப் பெரியக்கோட்டைகளுள் ஒன்றாக இந்த பன்ஹாலாக் கோட்டையும் அடங்கும். மேலும் இந்தக் கோட்டை, சிறிய நகரமான மகாராஷ்டிராவில் அமைந்து நம் மனதினைக் காட்சிகளால் வருடுகிறது. பன்ஹாலா (அ) பன்ஹாலாபாத் எனப்படும் மராத்தியிலுள்ள இந்தக் கோட்டை, பாம்புகளின் வீடாகவும் விளங்குகிறது என்பதனைத் தெரிந்துக்கொள்ளும் நம் மனம் ஒருத் திகைப்புடனே அதனைப் பார்க்கிறது.

மகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா?

மேலும் இந்தக் கோட்டை, சஹ்யாத்ரி எல்லைகளின் உத்தி நிலைக் காரணமாக, பிஜாப்பூரிலிருந்து கடற்கரைப் பகுதிகள் வழியாக வணிகத்துக்கு உட்படுத்தப்பட்ட ஒன்று என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், டெக்கான் பிரதேசத்தில் மராட்டியர்கள், முகலாயர்கள், மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிகளின் சண்டையின் போது அவற்றுக்கு மையப்புள்ளியாகவும் இருந்து இந்தக் கோட்டை அரணாகச் சிறந்து விளங்கியதாகவும் வரலாறுக் கூறுகிறது.

இந்தக் கோட்டை, பவன்கிண்ட் போரில் போராடிய, மராட்டிய மன்னராலும், , சர்தார் பாஜி பிரபு தேஷ்பாண்டே மற்றும் முகலாய சக்கரவர்த்தியினாலும், ஆதில் ஷா சிட்தி மாசூதினாலும் மேலும் நாம் தெரிந்துக்கொள்ள உதவியதாகவும் ஒருக் கதை உண்டு.

குழந்தை வரம் வேண்டுமா ஒருமுறை செல்லுங்கள் போதும்!

மேலும் இந்தக் கோட்டையின் உள்ளே, மாஹாகாளி ஆலயம், அமாபாய் ஆலயம், சோமேஷ்வர் ஆலயம், இரண்டாம் சாம்பாஜியின் ஆலயம் ஆகியவையும் அமைந்து நம் மனதினை அமைதிப் படுத்துகிறது. இவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஒரு ஆலயமாகக் கருதப்படுவது இந்த அமாபாய் ஆலயம் தான். அதுமட்டுமல்லாமல் இந்தக் கோட்டையின் பெருமையாக, ஜிஜாபாய் முசோலிமும் ஒரு சதோப முஸ்லிம் துறவியும் மராத்திய கவிஞருடன் இணைந்து இங்குச் செயல்பட்டதாகவும் வரலாறுக் கூறுகிறது.

பன்ஹாலாக் கோட்டை

பன்ஹாலாக் கோட்டை

பன்ஹாலாக் கோட்டையைப் பற்றின வரலாற்றுப் பதிவுகள் ஒருப் பார்வை:

இந்தக் கோட்டை, கி.பி 1178 லிருந்து கி.பி 1209ற்குள் ஷிலஹராவின் ஆட்சியாளராக இருந்த இரண்டாம் போஜாவால் கட்டப்பட்டதாகும். டெக்கான் பிரதேசத்தில் உள்ள பெரியக் கோட்டைகளுள் ஒன்றாக விளங்கும் இந்த பன்ஹாலாக் கோட்டை, கற்களாலும், ஈயத்தினாலும் கொண்டுக் கட்டப்பட்டு வலிமையினைச் சோதனை செய்ய, தடைகளைத் தகர்த்துக் கம்பீரமாக நின்றுக் காட்சியளித்தது. அரணாய் விளங்கும் இந்தக் கோட்டையினை யாதவர்களும், ஆதில் ஷாகிகளும். பாமனி சுல்தான்களும், கோலாப்பூர் அரசர்களும் ஆட்சிச் செய்ததுக் குறிப்பிடத்தக்கது.

சத்தராவில் கண்டறியப்பட்ட ஒரு செம்புத் தகடின் மூலம் இந்தக் கோட்டையினை கி.பி 1191லிருந்து கி.பி 1192 வரைக்கும் ராஜ போஜா ஆட்சி செய்தார் என்பதும் வரலாற்றின் பெருமைகளை உணர்த்தும் சுவடுகளின் வாயிலாக நமக்குத் தெரியவருகிறது. இந்தக் கோட்டை மேலும் பிஜாப்பூரின் ஆட்சிக்கு கீழ்வர, விரிவாக வழுப்படுத்தப்பட்டது என்றும் வரலாற்றினை தாங்கும் நினைவுகள் நமக்குத் தெரியப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், இப்ராஹிம் ஆதில் ஷாஹி ஆட்சியை உறுதிப் படுத்தும் வகையில் காணப்படும் பல கல்வெட்டுக்களும் இந்தக் கோட்டையில் அங்காங்குக் காணப்படுகிறது.

இந்தக் கோட்டை மேலும், இரண்டாம் சிவாஜியின் மனைவியானத் தாராபாய் சேவை செய்த தலைமையகமாகவும் விளங்கியது என்றும் கூறப்படுகிறது. ஆம், அதனை உறுதிப்படுத்தும் வகையில், தாராபாயின் இருப்பிடம் இந்தக் கோட்டையின் உள்ளே அமைந்து நம்மை வரலாற்றினை நோக்கிக் காலம் கடந்துப் பயணம் செய்ய வைத்து வியப்பில் ஆழ்த்துகிறது.

PC: avinash

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பன்ஹாலாக் கோட்டையின் சிறப்பம்சங்கள்:

இந்தக் கோட்டை கடல் மட்டத்தின் அடியிலிருந்து சுமார் 845 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நாம் தேடிப் பார்ப்பதன் மூலம் 110 இடுகைகள் இங்குக் காணப்படுகிறது. இங்கிருக்கும் பெரும் கோட்டைகளுள் ஒன்றாக விளங்கும் இந்தக் கோட்டை, சுமார் 14 கிலோமீட்டர் சுற்றளவுக் கொண்டதாய் இருக்கிறது. மேலும் இங்குக் காணப்படும் நிறையச் சுரங்கங்கள் நீண்டுக் கோட்டைக்கு அடியில் செல்ல, அதுப் பல மர்மத்தின் சுவாரஷ்யத்தினை நம் மனதில் உண்டாக்குகிறது.

மயில்களால் பொறிக்கப்பட்ட இந்தக் கோட்டை கட்டிடக் கலைகள், பிஜாப்பூர் பாணியில் கட்டப்பட்ட ஒன்று என்பது நமக்குத் தெள்ளத் தெளிவாய் விளக்குகிறது. மேலும் சில இடங்களில் தாமரைப் பொறிக்கப்பட்டிருக்க, அது இரண்டாம் போஜாவின் ஆட்சியில் அமைக்கப்பட்டக் கட்டிடக் கலை என்பதனை நமக்கு விளக்குகிறது.


PC: avinash

அந்தர் பாவாடி:

அந்தர் பாவாடி:

ஆதில் ஷாஹி என்பவரால் மூன்று மாடிகளைப் போன்றதொரு அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒன்று தான் இந்த அந்தர் பாவாடி ஆகும். இந்த மூன்று மாடிகளும் ஒன்றுக்கு ஒன்று மறைக்கப்பட்டுக் காண்பதற்குக் கடினமாய் இருக்கும் ஒரு அமைப்பினைக் கொண்டது. இங்கேக் காணப்படும் படிக்கட்டுகளின் வழியே நாம் செல்ல, நம்மால் ஒருக் கிணற்றினையும், அதில் அந்தக் கோட்டைக்குப் பயன்படச் சேமித்து வைக்கப்படிருக்கும் நீரினையும் பார்க்க முடிகிறது.

இந்தப் பாவாடியில் கோட்டையிலிருந்து வீரர்கள் தப்பித்துச் செல்வதற்கு ஏதுவான, மறைவிடங்களில் அமைந்திருக்கும் வழிகளும் நிறையவேக் காணப்படுகிறது. மேலும் இந்த அந்தர் பாவாடியின் உள்ளே, அவசரக் கால நிலைகளில் தங்குவதற்கு ஏதுவான உறைவிடங்களும், கோட்டையின் உள்ளே மற்றுமொரு கோட்டையும் அமைந்து இருக்கிறது.

PC: Ankur

கலவன்டிச்சா மஹால்:

கலவன்டிச்சா மஹால்:

இந்தக் கட்டிடம், அரசவையில் பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஒருத் தங்குமிடமாகும். ஆனாலும் இந்த இடம் இப்பொழுது முற்றிலும் சிதறியபடிக் காணப்படுகிறது. இந்தக் கோட்டையின் உள்ளே சில வரலாற்றுத் தடயங்களும் காணப்படுகிறது. இந்தக் கட்டிடத்தை "நாயகினி சஜ்ஜா" என்றும் அழைப்பர். அதாவதுப் பணிப்பெண்களுக்காக, மொட்டை மாடியில் அமைந்திருக்கும் ஒரு அறை என்பது இதன் பொருளாகும்.

PC: Ankur

அம்பர்கானா:

அம்பர்கானா:

பிஜாப்பூர் பாணியில் காணும் மூன்று களஞ்சியங்களைத் தான் நாம் "அம்பர்கானா" என்று அழைக்கிறோம். இந்த இடம், கொண்டுவரப்படும் தானியங்கள் முதலியவற்றைத் தேக்கிவைத்துக்கொள்ளப் பயன்படும் ஒரு இடமாக இருந்தது. இங்கிருக்கும் மூன்றுக் களஞ்சியங்களைக் கங்கா, யமுனா, சரஸ்வதி கோதிகள் என்றும் அழைப்பர். இவற்றுள் மிகப்பெரியக் கோதியாக கருதப்படுவது கங்காக் கோதி ஆகும்.

இந்த அம்பர்கானாவின் இரண்டுப் பக்கத்திலும் மாடிப்படிகள் அமைந்து, நம்மைக் கட்டிடத்தின் மேல்பகுதியினை நோக்கி அழைத்துச் செல்ல அவை உதவுகிறது. இங்குக் கொண்டு வரப்படும் தானியங்கள், மேலே நாம் காணும் இடைவெளியின் வழியேக் கொட்டப்பட்டுப் பாதுகாக்க படுகிறது. இந்த மூன்றுக் களஞ்சியங்களுக்கும் அப்பால்பட்ட அடுத்தக் களஞ்சியமாகத் தர்மக் கோதி விளங்குகிறது.

இங்குக் கொட்டப்படும் தானியங்களை ஏழை மக்களுக்கும், தேவை என்று வருவோர்க்கும் வாரி வாரி வழங்கும் களஞ்சியமாக இந்த தர்மக்கோதிப் பெருமையுடன் அமைந்து இந்தக் கோட்டையின் புகழை ஒங்கிக் காக்கிறது.

Ankur P

சஜ்ஜா கோதி:

சஜ்ஜா கோதி:


இந்தக் கோட்டையின் மற்றுமொருச் சிறப்பம்சமாக விளங்குவது இந்தச் சஜ்ஜாக் கோதியாகும். இப்ராஹிம் ஆதில் ஷாஹி என்பவரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, காட்சி அரங்கமாக அமைக்கப்பட்டதுடன், சிவாஜி மகன் சாம்பாஜிக்குச் சிறையின் மூலம் சேவை செய்த ஒரு இடமாகவும் விளங்கியது என்றும் வரலாறு கூறுகிறது.

Ankur P

டீன் டர்வாஷா:

டீன் டர்வாஷா:

அந்தர் பாவாடியின் வடக்கே அமைந்திருக்கும் இந்தக் கோட்டையின் பிரம்மாண்ட நுழைவாயில்கள் மிகவும் கலை நயத்துடன் அலங்கார கலைக் கொண்டு அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு கதவுகளைக் கொண்ட கட்டிடக் கலை, அதற்கு இடையில், மேலே சேர்ந்து காணப்படும் அழகுப்படுத்தப்பட்ட அறை என கைவினைஞர்களின் கைவண்ணத்தினால் அவ்வளவு அழகாக அக்காலத்திலே நிறுவப்பட்ட அந்த இடம் நம் மனதினைப் பிரமிக்க வைக்கிறது.
இந்தக் கோட்டையின் உள்புறக்கதவுகளில் மிகவும் கடினமளிக்கக் கூடிய சிற்பங்களும், கலைத்துறையின் திறமைகளும், பாரசீக கல்வெட்டுக்களும் என அமைந்து நம் கண்களை அதிசயங்களால் கவர்கிறது. மேலும், கதவின் உள்புறத்தில் அமைந்துள்ள கணேஷ பெருமானின் சிற்பக்கரு மிகவும் அழகானக் காட்சியினைப் பிரபதிலித்துக் கொண்டிருக்கிறது. இரண்டுப் பக்கங்களிலும் இருக்கும் பாரசீகக் கல்வெட்டுக்களின் மூலம் இந்தக் கோட்டையின் கதவுகள், முதலாம் இப்ராஹிம் ஆதில் ஷாவால் கட்டப்பட்டது என்பதும் நமக்குத் தெரிகிறது.

ராஜ்டின்டி பாஸ்சன்:

ராஜ்டின்டி பாஸ்சன்:

கோட்டையிலிருந்து வெளியேறுவதற்கு மறைமுகமாக அமைக்கப்பட்ட ஒரு வழி தான் இந்த ராஜ்டின்டி பாஸ்சன் எனப்படுவதாகும். இந்த வெளியேற்றம் வழியாகத்தான் பவன் கின்ட் போரின் போது சிவாஜி மஹாராஜ், விஷால்கத்துக்குத் தப்பித்துச் சென்றார் என்றும் வரலாறுக் கூறுகிறது.

PC: Avinash

பன்ஹாலா வில் இருக்கும் ஏனைய ஈர்ப்புகள் தான் என்ன:

பன்ஹாலா வில் இருக்கும் ஏனைய ஈர்ப்புகள் தான் என்ன:

பரஷர் குகைகள், ஜோதிராவ் ஆலயம், தாவரவியல் பூங்கா, பைரவநாத் மந்திர் எனப் பார்ப்பதற்குப் பரவச நிலையைத் தரும் இடங்களும் இந்தப் பன்ஹாலாவில் உள்ளது.

இத்தகையப் பிரசித்திப் பெற்ற பன்ஹாலாக் கோட்டையை நாம் அடைவது எப்படி:
கோலாப்பூரிலிருந்து 22.7 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒருக் கோட்டை தான் இந்தப் பன்ஹாலாக் கோட்டை ஆகும். இந்த 22.7 கிலோமீட்டரை நாம் கடக்க சுமார் 43 நிமிடங்கள் நமக்குத் தேவைப்படுகிறது.


Ankur P

Read more about: travel, fort