Search
  • Follow NativePlanet
Share
» »வருடத்தில் ஓரிருநாள் மட்டும் தங்க மன்னர்கள் கட்டிய கோட்டைகளைப் பாருங்கள்

வருடத்தில் ஓரிருநாள் மட்டும் தங்க மன்னர்கள் கட்டிய கோட்டைகளைப் பாருங்கள்

By Udhaya

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிறைய கோட்டைகள் இருக்கின்றன. அவை மன்னர்கள் பொழுதுபோக்க, ஓரிருநாள்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட கோட்டை என்று நம்பப்பட்டு வருகிறது. அப்படியானால், அந்த காலத்தில் மன்னர்கள் எவ்வளவு செல்வசெழிப்போடு இருந்திருக்கிறார்கள் என்பதை பாருங்கள். சரி வாங்க அந்த கோட்டைகளைப் பற்றி காண்போம்.

மண்டாவர் கா மஹால்

மண்டாவர் கா மஹால்

இங்கிலாந்து நாட்டின் ராணியான விக்டோரியா உருது மொழியின் பேரில் ஆர்வம் கொண்டவராய் இருந்தார். அவர் இந்தியாவிலிருந்து முன்ஷி மஜார் அலி எனும் ஆசிரியரை இங்கிலாந்திற்கு வரவழைத்து உருது மற்றும் பாரசீக மொழிகளை கற்றுக்கொண்டார். பின்னர் இந்த முன்ஷியை கௌரவிக்கும் விதமாக ராணி அவருக்கு ஒரு மாளிகையை மண்டாவர் எனும் இடத்தில் கட்டித்தந்துள்ளார். அதுவே இன்று மண்டாவர் கா மஹால் என்று அழைக்கப்படுகிறது. 1850ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மாளிகை கல்கா தேவி கோயில் எனும் பிரசித்தமான கோயிலிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. அக்கோயிலானது மண்டாவர் - ப்லாவாலி சாலையில் குந்தன்பூர் கிராமத்திற்கு அருகே அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு வழிபடுவதற்காக வந்தபோதுதான் ருக்மணியை கிருஷ்ணர் கவர்ந்து சென்றதாக சொல்லப்படுகிறது. மண்டாவர் கா மஹால் மாளிகையை காண வரும் பயணிகள் இந்த கல்கா தேவி கோயிலுக்கும் தவறாது விஜயம் செய்கின்றனர்.

பாஞ்ச் மகால்

பாஞ்ச் மகால்

ஐந்து மாடிகளுடன் பரந்து விரிந்த பாஞ்ச் மகால் ஓய்வு அரண்மனையாக அக்பரால் கட்டப்பட்டது. பொழுதுபோக்கவும் ,ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் அக்பர் இந்த அரண்மனையை பயன்படுத்தினார். திறந்தவெளி மைதானத்துடன் அமைந்துள்ள இக்கட்டிடத்தின் ஒவ்வொரு மாடியும் முந்தைய மாடியை விட சிறியதாகவும் சீராக இல்லாத தூண்களால் தாங்கப்படும் வண்ணமும் அமைந்துள்ளது. மேலும் அக்பரின் ராணிகளும், இளவரசிகளும் வலம்வரும் வண்ணம் பிரத்யேகமாக இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டுள்ளது. மறைவான திரைச்சீலைகளுக்குப் பின் அமர்ந்து பெண்கள் வேடிக்கை பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய தனித்துவம் வாய்ந்த நீர்த்தொட்டியான அனூப் தலாவிற்கு அருகில் அமைந்திருக்கிறது இந்த அரண்மனை.

ஃபதேபூர் சிக்ரியின் பிரதான கோட்டை

ஃபதேபூர் சிக்ரியின் பிரதான கோட்டை

ஃபதேபூர் சிக்ரியின் பிரதான கோட்டையின் உள்ளே முகலாய பாரம்பரியப்படி அமைந்துள்ள இந்த அரண்மனை அக்பரின் இந்து மனைவியான ஜோதா பாயின் இல்லமாக விளங்கியது. அக்பர் மற்றும் ஜஹாங்கீர் ஆகிய இருவரின் ஆட்சியிலும் அதிகார மையமாக இவ்விடம் விளங்கியது. துருக்கிய சுல்தானா என்றும் அழைக்கப்பட்ட இந்த அரண்மனையின் அக்பரின் இஸ்லாமிய மனைவி வாழ்ந்ததாக சிறிய அளவில் ஒரு மாற்றுக் கருத்தும் நிலவுகிறது. அதன் ஆடம்பரமிக்க அலங்காரங்களுக்காகவும், பழங்கால கட்டமைப்புக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. ஏராளமான செலவில் சிறப்பான வேலையாட்களை வைத்து அக்பர் இக்கட்டிடத்தை கட்டியிருக்கிறார். சுற்றியுள்ள தோட்டங்களும், சுவர்வெட்டுக்களும் மேலும் அழகு சேர்ப்பவைகளாக இருக்கின்றன. வெளியேயும் உள்ளேயும் பூக்கள் மற்றும் வடிவங்களால் ஆன அலாங்காரங்களால் நிரப்பப்பட்டு உள்ளது.

Sauravmitra

கேய்சர்பாக் அரண்மனை

கேய்சர்பாக் அரண்மனை

ஆவாத் நவாப் வாஜித் அலி ஷா என்பவர் இந்த கேய்சர்பாக் அரண்மனையை 1847ம் ஆண்டில் கட்டியுள்ளார். இது அவரது கனவுப்படைப்பாகும். உலகின் எட்டாவது அதிசயமாக திகழவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மாளிகையை அவர் நிர்மாணிக்க துவங்கினார்.

இது சத்தர் மான்சில் எனும் இடத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. தரவாலி கொதி, ரோஷன் உத் தௌலா கொதி மற்றும் சௌலாக்கி கொதி ஆகிய இதர முக்கியமான அம்சங்களும் இந்த கேய்சர்பாக் அரண்மனைக்கு அருகிலேயே அமைந்துள்ளன.

கல்கத்தாவிற்கு நாடுகடத்தப்பட்ட நவாப் வாஜித் அலி ஷாவின் ராணியுடன் மற்ற கலகக்கார நவாப்கள் ஆலோசனை நடத்தும் இடமாக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்த அரண்மனையைக்கருதியதால் அவர்கள் இதன் பெரும்பகுதியை அழித்து விட்டனர்.

சபைக்கூடம், கல்லறை வளாகங்கள் மற்றும் நவாப் மன்னர்களின் வசிப்பிடங்கள் ஆகியவை இதனால் அழிந்துபோய்விட்டன.

கம்பீரமான தூண்கள் மற்றும் அலங்கார ஏணிப்படிகள், ஹிந்து குடை அமைப்புகள், விளக்குத்தூண்கள் மற்றும் மூரிஷ் மினாரெட்டுகள் ஆகியவை இந்த மாளிகை வளாகத்தில் காணப்படுகின்றன.

முகலாய பாணியிலான நிகழ்ச்சிக்கூடங்கள் மகுட அமைப்புகள் மற்றும் சிலைகளோடு இதில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அக்காலத்திய முறைப்படி அரண்மனை மகளிருக்காக தனியே அந்தப்புர வளாகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

12 கதவுகளுடன் வெள்ளைக்கல்லால் கட்டப்பட்டிருக்கும் ஒரு கம்பீர மாளிகை ஒன்றும் இந்த அரண்மனை வளாகத்தின் மையத்தில் அமைந்திருக்கிறது.

அக்பரின் இஸ்லாமிய மனைவி ஒருவரின் அரண்மனையாக கருதப்பட்ட சிறிய கட்டிடமான ஹுஜ்ரா-இ-அனுப் பின்னாளில் அதன் சிறிய வடிவமைப்பால் அங்கு ராணி தங்கியிருக்க மாட்டார் என்ற முடிவுக்கு வரலாற்றியலாளர்களை வரச்செய்தது. எனிமும் இதுபற்றி இன்னும் எந்த முடிவுக்கு வரமுடியவில்லை.

பீர்பால் அரண்மனை

பீர்பால் அரண்மனை

முகலாய அரசின் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக பீர்பால் அரண்மனை கருதப்படுகிறது. வரலாற்று ஆவணங்களின்படி அக்பரின் முக்கியமான ராணிகளாக ருக்காயா பேகம் மற்றும் சலிமா சுல்தானா பேகம் ஆகியோரது இல்லமாகவும் இந்த அரண்மனை விளங்கியது. இந்து மற்றும் இஸ்லாமிய பாரம்பரியங்களை உள்ளடக்கிய கட்டிடமாக இருப்பதால் இரண்டு கலாச்சாரங்கள் சங்கமிக்கும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது. இதை அரண்மனையின் வடிவம், நிறம் மற்றும் செதுக்கல்களில் இருந்து காணலாம். தனது நகைச்சுவைக்காக புகழ்பெற்ற பீர்பால் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக பெரிது அறியப்பட்டார். ஹரம் சாராவின் வடக்கு அரண்மனையாகவும் அறியப்பட்ட பீர்பால் அரண்மனை ஃபதேபூர் சிக்ரியின் முக்கியமான இடமாக கருதப்படுகிறது.

Bahuln89

ராணி மஹால்

ராணி மஹால்

ராணி மஹால், அவ்வாறு வழங்கப்படுவதற்கான காரணம், இது இந்தியாவின் பிரசித்தி பெற்ற போர் வீராங்கனை மஹாராணியான, ஜான்ஸி ராணி என்று பிரபலமாக அறியப்பட்ட ராணி லக்ஷ்மி பாயின் வசிப்பிடமாக இருந்ததே ஆகும்.

இது நவால்கர் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாம் ரகுநாத் அவர்களால் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனை, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்களான ராணி லக்ஷ்மிபாய் மற்றும் மராத்திய தளபதிகளான தந்த்யா தோப் மற்றும் நானா சாகிப் ஆகியோரின் தலைமையின் கீழ், 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்ற நாட்டுப்பற்றுமிக்க படைகள் கூடும் மையமாக இருந்துள்ளது.

தட்டையான கூரைகளுடன் கூடிய இரண்டடுக்குக் கட்டிடமான ராணி மஹால் ஒரு சதுரமான முற்றத்தின் எதிர்ப்புறத்தில் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த முற்றத்தின் ஒரு புறம் கிணறு ஒன்றும் மற்றொரு புறம் நீருற்று ஒன்றும் காணப்படுகின்றன.

இந்த அரண்மனையில், பிரபலமான தர்பார் மண்டபம் உள்ளிட்ட ஆறு மண்டபங்கள் காணப்படுகின்றன. இந்த மண்டபங்கள் அனைத்தும், ஒன்றுக்கொன்று இணைவாகச் செல்லும் தாழ்வாரங்களுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும் சில சிறிய அறைகளும் காணப்படுகின்றன.

தர்பார் மண்டபத்தின் சுவர்கள் அனைத்தும், கண்ணைக் கவரும் வண்ணங்களில் பூவேலைப்பாடுகளோடு, பல்வேறு செடி வகைகள் மற்றும் விலங்கினங்களும் வரையப்பட்டு, அலங்காரமாகக் காட்சியளிக்கின்றன.

இப்பெரிய கட்டிடத்தின் பெரும்பகுதி ஆங்கிலேய பீரங்கிப் படையால் அழிக்கப்பட்டு விட்டது. இந்த அரண்மனை தற்போது சரித்திர அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டது

Krish Dulal

மோடி மஹால்

மோடி மஹால்

மோடி மஹால் அல்லது 'முத்து அரண்மனை', நாவாப் சுஜா-உத்-தெளலாவின் அன்பு மனைவி பஹு பேகமின் குடியிருப்பாக இருந்தது. இந்த அற்புதமான நினைவுச்சின்னம் முகலாய கட்டிடக்கலையின் அற்புதமான உதாரணமாக திகழ்கிறது. இது உத்திரபிரதேசத்தில் உள்ள தனித்தன்மை வாய்ந்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.

ஃபிராங்கி மஹால் எனும் இந்த மாளிகை லக்னோ நகரத்தில் விக்டோரியா ரோடு மற்றும் சௌக் ஆகிய இடங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த கம்பீரமான வரலாற்றுச்சின்னம் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டது என்பதால் ஃபிராங்கி மஹால் என்று அழைக்கப்படுகிறது.

இது நீல் எனும் ஃபிரெஞ்சு வணிகருக்கு சொந்தமானதாக இருந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் காலத்தில் இங்கு வசித்த மற்ற ஃபிரெஞ்சு வணிகர்களோடு அவர் வசித்துள்ளார்.

இருப்பினும் பின்னர் ஔரங்கசீப் மன்னர் இந்த மாளிகையை அன்னியர் வசம் உள்ள சொத்தாக மதிப்பிட்டு அரசாங்கத்துக்கு சொந்தமாக்கிக்கொண்டார். அத்தோடு அம்மாளிகையை இஸ்லாமிய விவகாரங்களில் மன்னருக்கு ஆலோசனை அளித்துவந்த முல்லா ஆசாத் பின் குதப் ஷாஹீத் மற்றும் அவரது சகோதரர் முல்லா ஆஸாத் பின் குத்புதீன் ஷாஹீத் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்.

இந்த இரண்டு சகோதரர்களும் அந்த மாளிகையை ஒரு பெரிய இஸ்லாமிய கல்வி மையமாக மாற்றினர். கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகங்களுக்கு இணையான தரத்துடன் அந்த கல்வி மையம் உருவாக்கப்பட்டது.

மஹாத்மா காந்தி அவர்கள் இந்த ஃபிராங்கி மஹால் மாளிகையில் சில நாட்கள் தங்கியுள்ளார். அவரது நினைவாக அந்த அறை அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்ரவற்றை வளர்க்கும் முயற்சிகளில் இந்த ஃபிராங்கி மஹால் மையம் ஈடுபட்டு வந்துள்ளது.

Read more about: travel fort india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X