» »தங்கத்தால் வரையப் பட்ட ஓவியம் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த அரண்மனை

தங்கத்தால் வரையப் பட்ட ஓவியம் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த அரண்மனை

Written By:

மகாராஷ்டிர மாநிலத்தின் தனித்தன்மையே அதன் வியக்கத்தகு வேற்றுமையில் தான் அடங்கியிருக்கிறது. அதன் பனி படர்ந்த மலைகளும், பசுமையான அடர்வனங்களும், பிரம்மாண்டமான கோட்டைகளும், மதச் சிறப்புகளும் அதற்கே உரிய சிறப்பியல்புகள். மகாராஷ்டிராவில் உள்ள 350 கோட்டைகளும் மராட்டிய மன்னர்களின் வீரத்தை உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது. இதில் ஏறக்குறைய 13 கோட்டைகள் சத்ரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோட்டைகளிலேயே இரட்டை கோட்டைகளாக அறியப்படும் விஜயதுர்க் மற்றும் சிந்துதுர்க் கோட்டைகளே மகாராஷ்டிராவின் மிகச் சிறந்த கடற்கோட்டைகளாக கருதப்படுகின்றன.மேலும், புனேவிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷிவ்னேரி கோட்டை, சிவாஜியின் பிறப்பிடம் என்பதால் பிரசித்தமாக அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், சிவாஜிக்கும், அஃப்சல் கானுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போரின் நினைவுகளை வீரகாவியமாய் நமக்கு சொல்வது போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது பிரதாப்காட் கோட்டை. இவை தவிர அஜின்க்யதாரா கோட்டை, முருட் ஜஞ்சிரா கோட்டை, ஹரிஷ்சந்திரகாட் கோட்டை, லோஹாகாட் மற்றும் விஸாப்பூர் கோட்டைகளும் சரித்திர சிறப்பு வாய்ந்த கோட்டைகள். இதன் மாளிகைகளை ஒரு தடவை பார்த்துவிட்டு வருபவர்கள் அதை நினைத்துக்கொண்டே இருப்பார்கள். அந்த அளவுக்கு பிரம்மாண்ட மாளிகைகளை கொண்டது மகராஷ்டிர மாநிலம்.

நவ்கொண்டா அரண்மனை

நவ்கொண்டா அரண்மனை

நவ்கொண்டா அரண்மனை தற்சமயம் சிதிலமடைந்து காணப்படுகிறது. இருப்பினும் நிஜாம் அலி கான் இந்த அரண்மனையில் வசித்தபோது இதில் 5 ஜனனாக்கள்(அந்தப்புரங்கள்), ஒரு தீவான்-இ-ஆம்(மக்கள் சந்திப்பு அறை), ஒரு தீவான-இ-கா(முக்கியஸ்தர் சந்திப்பு அறை), ஒரு மஸ்ஜித்(தொழுகை முற்றம்) மற்றும் ஒரு கச்சேரி(சபை) ஆகியவை இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே ஒரு பூந்தோட்டமும், ஒரு நீர் தடாகமும் அமைந்திருந்தது என்றால் வரலாற்று காலத்தில் இந்த அரண்மனை எப்படி விளங்கியிருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளலாம்.இந்த அரண்மனையின் மையப்பகுதி அதற்கான குளியலறை பகுதியுடன் இன்றும் சேதமடையாமல் உள்ளது. இருப்பினும் அவற்றின் மர வேலைப்பாடுகளும் அலங்கார பூச்சுகளும் அழிந்து விட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.

Ramnath Bhat

சுன்ஹேரி மஹால்

சுன்ஹேரி மஹால்

சுன்ஹேரி மஹால் என்ற பெயர் இந்த அரண்மனை தங்கத்தால் வரையப்பட்டிருந்த ஓவியங்களை கொண்டிருந்த தால் ஏற்பட்டது. இந்த அரண்மனை தக்காணத்தில் ஔரங்கசீப் ஆளுகை செலுத்த உதவியாக இருந்த தளபதி பந்தல்கண்ட் என்பவரால கட்டப் பட்டதாகும்.ஔரங்காபாத் நகரத்துக்கு வெளியில் பஹர்சிங்புரா எனும் இட்த்தில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. இதன் கட்டமைப்பு கற்கள் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது. இந்த மஹாலில் ஒரு உயரமான மேடை ஒன்று இருந்தது. அது தற்சமயம் சிதிலமடைந்து காணப்படுகிறது.இந்த மஹாலை பார்ப்பதற்கு இந்தியர்களுக்கு பத்து ரூபாயும் வெளி நாட்டவர்க்கு நூறு ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை இந்த மஹால் திறக்கப்படுகிறது.

 கில்லா அரக் அரண்மனை

கில்லா அரக் அரண்மனை

ஔரங்காபாத் நகரில் மற்றொரு சுவாரசியமான இடம் இந்த கில்லா அரக் அரண்மனை ஆகும். இந்த அரண்மனை ஔரங்கசீப் மன்னர் காலத்தில் அவரது ஆணைப்படி கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. தற்சமயம் இடிபாடடைந்து காணப்படும் இந்த அரண்மனையில் புகழ் வரலாற்றுக் காலத்தில் டில்லியிலிருந்து மெக்கா வரையில் பரவி இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.கில்லா அரக் அரண்மனை நான்கு வாயில்களை கொண்டுள்ளது. அரண்மனையின் மற்ற பகுதிகள் சிதைந்து விட்டதால் ஔரங்கசீப்பின் கம்பீரமான அரியணை அறை மட்டுமே அரண்மனை தோட்டத்தின் அருகில் காணப்படுகிறது. இங்குள்ள மஸ்ஜித்தை ஒட்டி ஒரு வித்தைகளுக்கான சிறு மைதானமும் உள்ளது. இந்த மைதானத்தின் வாசலுக்கருகில் உள்ள கல்வெட்டில் 1659 வருடத்தை குறிப்பிடும்படியாக சில குறிப்புகள் உள்ளன.

Amol Bakshi

 ஆகா கான் கோட்டை

ஆகா கான் கோட்டை


இந்திய சுதந்திர போராட்டப் பின்னணியை கொண்டுள்ளதால் இந்த ஆகா கான் கோட்டை விசேட சிறப்பை பெறுகிறது. புனே மாவட்டத்தில் காணப்படும் இந்த கோட்டை சுல்தான் முகமது ஷா மூன்றாம் ஆகா கான் என்ற மன்னரால் கட்டப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியின்போது பல சுதந்திர போராட்ட வீர்ர்களையும் புரட்சியாளர்களையும் இங்குதான் சிறை வைத்திருந்தனர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தேசப் பிதா காந்தி 1942ல் நடத்தியபோது அவரும் கஸ்தூரிபா காந்தியும் இங்கு சிறை வைக்கப் பட்டிருந்தனர். சுதந்திர போராட்ட வீர்ர்கள் மற்றும் தியாகிகளில் நினைவாக மியூலா ஆற்றின் அருகாமையில் இக்கோட்டைக்குள் நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Khushroo Cooper

ராஜ் பரி

ராஜ் பரி


ஜவஹரில் அமைந்துள்ள இந்த அரண்மனை பழங்குடி ராஜ வம்சமான முங்கே பரம்பரை வசித்த இடமாகும். ஜவஹர் என்றும் அறியப்படும் இந்த அரண்மனை பழங்குடி வம்ச அரசரான யஷ்வன்ராவ் முகானே என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இது ராஜ் பரி என்றும் அழைக்கப்படுகிறது. புதுமையான கட்டிடக்கலை அம்சம் மற்றும் தொன்மையான அம்சங்களைக்கொண்டிருக்கும் இந்த அரண்மனை சுற்றிலும் பசுமையான அடர்த்தியான காடுகள் சூழ ஒரு உயரமான பாறை மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனையிலிருந்து பார்த்தால் சுற்றிலும் உள்ள தொடுவானம் வரை பார்க்க முடிவதால் அந்த அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கும் ஒன்றாகும். 80 அறைகளைக்கொண்டிருக்கும் இந்த அரண்மனையில் காணப்படும் இருக்கைகளும் அலங்காரங்களும் நமக்கு அக்காலத்தைய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துகின்றன. பதப்படுத்தப்பட்ட புலி உருவங்களையும் ஒரு பெரிய ஆடம்பரமான வரவேற்பு மண்டபத்தையும் இங்கு பார்க்கலாம். இந்த அரண்மனையை சுற்றிலும் முந்திரி தோப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. மிக முக்கியமான சுற்றுலா அம்சமான ஜய் விலாஸ் அரண்மனை தானே மாவட்டத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

Viraat Kothare

தி ராயல் பேலஸ்

தி ராயல் பேலஸ்


தி ராயல் பேலஸ், கேம் சாவந்த் போன்ஸ்லே மூன்றாம் மன்னரின் ஆட்சியில், 1755 மற்றும் 1803-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டது. இந்த அரண்மனை முழுக்க முழுக்க செங்கற்களால் எழுப்பப்பட்டிருக்கும் கலாச்சார சின்னமாகும். மேலும் இதன் உட்சுவர்களில் வரிசையாக காணப்படும் அரசர் கால பழைய புகைப்படங்கள் பற்பல கதைகளை நமக்கு சொல்லும். அதோடு இந்த அரண்மனையின் அழகிய வேலைப்பாடுகளை உடைய அறைகளும், போராயுதங்களும், கலைப்பொருட்களும் நம்மை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அழைத்துச் சென்று விடும்.

ஃபரியா பாக் அரண்மனை

ஃபரியா பாக் அரண்மனை

அஹமத்நகர் ஸ்தாபகர் அஹமத் நிஜாம் ஷா'வின் மகனான பர்ஹான் ஷா'வுக்காக இந்த அற்புதமான நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு வயது மட்டுமே ஆகியிருந்த இளம் வயதில் 1508ம் ஆண்டு தன் தந்தையின் மரணத்தின் காரணமாக இவர் அரியணை ஏறியுள்ளார். தன் தந்தையின் எதிரியான விஜயநகர மன்னர்களுடன் பர்ஹான் ஷா கூட்டு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்ட காரணத்தால் ஆச்சரியப் பிரசித்தமாக வரலாற்றில் அறியப்படுகின்றார். இவர் தன் ஆட்சியின்போது பல போர்களை பிஜாப்பூர் மன்னர்களுடனும் முகலாயர்களுடனும் நிகழ்த்தியுள்ளார். ஃபரியா பாக் அரண்மனை எண்கோண வடிவில் அமைக்கப்பட்டு ஒரு குமிழ் கோபுரம் போன்று காணப்படும் பிரம்மாண்ட கூடத்தை கொண்டுள்ளது. பாறாங்கற்களுடன் சாந்து கலந்து பூசி இது கட்டப்பட்டுள்ளது. நிஜாம் ஷாஹி அரசர்கள் இந்த அரண்மனையை பொழுதுபோக்கு ஸ்தலமாக சதுரங்கம் ஆடுவதற்கும், அருகிலிருந்த ஏரிகளில் நீராடுவதற்கும் பயன்படுத்தியுள்ளனர்.

Henry Cousen

 சனிவார் வாடா

சனிவார் வாடா

பேஷ்வா ராஜ வம்சம் ஆட்சி செய்த அரண்மனையான சனிவார் வாடாவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த - பார்க்க வேண்டிய இடமாகும். சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் 1730ம் ஆண்டு பாஜி ராவ் மன்னரால் இது கட்டப்பட்டது. 1827ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் இந்த அரண்மனை நாசமடைந்து தற்போது இடிபாடுகளுடன் மட்டுமே காணப்படுகிறது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகளுக்காக இங்கு ஒரு ஒலி ஒளி காட்சி விவரண வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இது அவசியம் பயணிகள் பார்க்க வேண்டிய ஒன்று. மராத்திய ராஜ வம்ச நாகரிகத்திற்கு சான்றாக விளங்கும் இந்தக் கோட்டை இன்றும் காணப்படும் மராத்திய கட்டிடக் கலையையும் முகலாய கட்டிடக்கலையையும் ஒன்று சேர்த்த கலவையான இயல்பை கொண்டுள்ளது.
wikipedia.org

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்