Search
  • Follow NativePlanet
Share
» »பல்லவர்களின் பெருமிதப் படைப்பு!!!

பல்லவர்களின் பெருமிதப் படைப்பு!!!

By

தமிழ்நாட்டின் கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய கட்டிடங்களாகக் கற் கோயில்களை அமைத்துத் திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக கருதப்படுபவர்கள் பல்லவர்கள்.

அதோடு கட்டிடக்கலையில் வியக்கவைக்கும் சாதனைகளாக திகழும் சோழர்காலக் கட்டிடக்கலை என்பதை பல்லவர்கள் துவக்கி வைத்த பாணியின் தொடர்ச்சியாகவே வரலாற்று ஆய்வாளர்களும், கட்டிடக்கலை நிபுணர்களும் கருதுகிறார்கள்.

அந்த வகையில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பல்லவர்களின் கட்டிடக்கலை சிறப்பை உலகுக்கு எடுத்துச்சொல்லும் சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறது.

படித்துப் பாருங்கள் : சிதம்பர ரகசியம்!!!

வரலாறு

வரலாறு

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டத் தொடங்கப்பட்டதெனினும், அவனுடைய மகனான 3-ஆம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை முடித்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

படம் : Sai Subramanian

தென்திசைக் கைலாயம்

தென்திசைக் கைலாயம்

சென்னையிலிருந்து 71 கி.மீ தொலைவில், பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் கைலாசநாதர் கோயில் தென்திசைக் கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.

படம் : Keshav Mukund Kandhadai

திராவிடக் கட்டிடக்கலையின் திருப்புமுனை

திராவிடக் கட்டிடக்கலையின் திருப்புமுனை

திராவிடக் கட்டிடக்கலையின் ஆரம்ப காலகட்டத்துக்குரிய திருப்புமுனைகளில் ஒன்றாக கைலாசநாதர் கோயில் கருதப்படுகிறது. தொடக்கத்தில் குடைவரைகளையும், பின்னர் ஒற்றைக் கற்றளிகளையும் அமைத்த பல்லவர்கள், தொடர்ந்து கட்டுமானக் கோயில்களை அமைப்பதிலும் முன்னோடிகளாக அமைந்தார்கள். இவற்றில் இறுதியாகக் குறிப்பிடப்பட்ட கட்டுமானக் கோயில்கள் கட்டும் தொழில் நுட்பம், தமிழ் நாட்டில், பல்லவ மன்னனான இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டப்பட்டது தான் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்.

படம் : Sridhar.selvaraj

கோயில் அமைப்பு

கோயில் அமைப்பு

கைலாசநாதர் கோயில் தொடக்கத்தில் விமானத்துடன் கூடிய கருவறையையும், அதற்கு முன்பக்கம் தூண்களுடன் கூடிய ஒரு மண்டபத்தையும் கொண்டிருந்தது. இவ்விரு கட்டிடங்களும் உயர்ந்த சுற்று மதிலால் சூழப்பட்டிருந்தன. இவற்றில் மண்டபம், முன்னர் கோயிலிலிருந்து தனித்து இருந்தாலும் பின்னர் அர்த்தமண்டபத்துடன் சேர்த்து கோயிலுடன் இணைக்கப்பட்டது.

படம் : Sridhar.selvaraj

நரசிம்மவதாரம்

நரசிம்மவதாரம்

ஹிரண்யகசிபுவை வதம் செய்யும் நரசிம்மமூர்த்தி.

படம் :Kesavan Muthuvel

58 சந்நிதிகள்

58 சந்நிதிகள்

58 சிறு சிறு சந்நிதிகளைக் கொண்ட உள்முற்ற சுற்றுப்பாதை.

படம் : R. Mayooranathan

சிங்கங்கள்

சிங்கங்கள்

கோயில் மண்டபத்தின் தூண்களில் காணப்படும் சிங்கங்கள்.

படம் : mckaysavage

சிவலிங்கம்

சிவலிங்கம்

கைலாசநாதர் கோயில் சுற்றுப்பாதை ஒன்றில் அமையப்பெற்றுள்ள சிவலிங்கம்.

படம் : tshrinivasan

சிற்பங்களும், சுற்றுப்பாதைகளும்!

சிற்பங்களும், சுற்றுப்பாதைகளும்!

கைலாசநாதர் கோயிலின் சுற்றுப்பாதைகளில் நடந்து செல்லும்போது எங்கு காணினும் நுணுக்கமான சிற்பங்கள் நிறைந்திருப்பது நம்மை வேறொரு லோகத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்.

படம் : Aaroo4

நந்தி மண்டபம்

நந்தி மண்டபம்

கைலாசநாதர் கோயிலின் நந்தி மண்டபம்.

படம் : Rsp3282

நுழைவாயில்

நுழைவாயில்

கைலாசநாதர் கோயிலின் நுழைவாயில்.

படம் : Senthil-kumar

புகைப்படக்காரர்கள்

புகைப்படக்காரர்கள்

கைலாசநாதர் கோயிலில் எப்போதும் நீங்கள் புகைப்படக்காரர்களின் கூட்டத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

படம் : cprogrammer

நடனமாடும் சிவா

நடனமாடும் சிவா

சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் புன்னகையை வெளிப்படுத்தும் தோற்றத்துடன் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ள சிற்பம்.

படம் : Swaminathan Natarajan

நந்தியின் பார்வையில்!

நந்தியின் பார்வையில்!

நந்தி வீற்றிருக்கும் இடத்திலிருந்து கைலாசநாதர் கோயிலின் தோற்றம்.

படம் : Swaminathan Natarajan

ஹரிஹரன்

ஹரிஹரன்

விஷ்ணுவும் (ஹரி), சிவனும் (ஹரன்) ஒன்றிணைந்து எடுத்த ஹரிஹர அவதாரம்.

படம் : Chandrachoodan Gopalakrishnan

குதூகலப் பெண்கள்

குதூகலப் பெண்கள்

சிவபெருமான் பிச்சமூர்த்தி எனும் ரூபத்தில் தங்கள் நகருக்கு வருவது அறிந்து மகிழ்ச்சியும், குதூகலமுமாக காணப்படும் பெண்கள்.

படம் : Kesavan Muthuvel

தென்கிழக்கு வாயில்

தென்கிழக்கு வாயில்

கைலாசநாதர் கோயிலின் தென்கிழக்கு வாயில்.

படம் : Harish Aluru

வெளிநாட்டு பயணிகள்

வெளிநாட்டு பயணிகள்

கைலாசநாதர் கோயிலில் வெளிநாட்டு பயணிகளின் கூட்டத்தையும் அவ்வப்போது பார்க்க முடியும்.

படம் : tshrinivasan

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+