Search
  • Follow NativePlanet
Share
» »இராமர் குடிகொண்ட நாகந்தூர்..! கிரக தோஷம் நீக்கும் திருத்தலம்..! #Teavel2Temple 11

இராமர் குடிகொண்ட நாகந்தூர்..! கிரக தோஷம் நீக்கும் திருத்தலம்..! #Teavel2Temple 11

இந்து இதிகாசங்களின்படி, திருமாலின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர் இராமர். பொதுவாக இராமர் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திரேத யுகத்தில் பிறந்தார் என்று புராணங்களின் வாயிலாக அறிய முடிகிறது. வால்மீகி எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இராமாயண வரலாற்றின் முக்கிய மாந்தராகவும் இவர் உள்ளார். இந்துக்கள் பெரும்பாலும் வழிபடக்கூடிய, பல்வேறு பெருமைகளைக் கொண்டுள்ள இராமர் விருப்பப்பட்டு தமிழகத்தில் குடியேறிய திருத்தலம் ஏதுவென்று தெரியுமா ?. கிரக தோஷத்தில் விடபட முடியாதவர்கள் நிச்சயம் சென்றுவர வேண்டிய அந்தக் கோவிலுக்கு வாருங்கள், சென்று வருவோம்.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

விழுப்புரத்தில் இருந்து சுமார் 34 கிலோ மீட்டர் தொலைவில் திருவம்பட்டு கிராமத்திற்கு அருகே உள்ளது நாகந்தூர். திண்டிவனத்தில் இருந்து தீவனூர் வழியாக சுமார் 29 கிலோ மீட்டர் பணித்தாலும் நாகந்தூரை அடையலாம்.

rajaraman sundaram

திருத்தலச் சிறப்பு

திருத்தலச் சிறப்பு

நமது ஊரில் இராமருக்கு என ஏராளமான கோவில்கள் காணப்பட்டாலும் நாகந்தூரில் அமைந்துள்ள இத்தலத்தையே அவர் விருப்பப்பட்டுத் தேர்வு செய்து குடியேறியதாக நம்பப்படுகிறது. மேலும், வேறெங்கும் இல்லாதவாறு இராமர், லட்சுமணன் வில்லில் மணி வடிவமைக்கப்பட்டுள்ளது இத்தலத்தின் கூடுதல் சிறப்பாக உள்ளது.

Thaejas

திருவிழா

திருவிழா

இராமருக்கு ஏற்ற நாட்களான ராம நவமி அன்று மாபெரும் அளவிலான விழா கொண்டாடப்படுகிறது. பங்குனி அமாவாசையை முன்னிட்டு 10 நாட்கள் இங்கே பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.

Joshri

நடைதிறப்பு

நடைதிறப்பு

அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோவிலின் நடை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டு சென்றால் தீபாராதனை உள்ளிட்ட அபிஷேக பூஜைகளை கண்டு பயனடையலாம்.

MADHURANTHAKAN JAGADEESAN

வழிபாடு

வழிபாடு

இக்கோவிலின் முக்கிய சிறப்பாக இருப்பது கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இங்கே வந்து வழிபட ஓரிரு வாரங்களிலேயே தோஷம் நீங்கி செழிப்படைவர். பித்திரு தோஷம், சர்ப்ப தோஷம், திருமணத் தடை, வியாபாரத்தில் நஷ்டம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோரும் இக்கோவிலில் வழிபட முன்னேற்றம் காணலாம்.

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

வேண்டிய யாவும் நிறைவேறியபின் மூலவரான பட்டாபிராமருக்கும், சன்னதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவியாருக்கு சிறப்பு பூஜைகள் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைப் பக்தர்கள் செலுத்துகின்றனர்.

Byakudan2009

புராணக் கதை

புராணக் கதை

இராமர் தனது ராவண வதத்தை முடித்துக்கொண்டு சீதாவுடன் அயோத்தி நோக்கித் திரும்புகையில் பல பகுதிகளில் திருப்பாதைகளை பதித்தார். அப்படி அவர் கால் பதித்த தடங்களில் ஒன்றே நாகந்தூர். எங்கு காணிணும் பசுமைத் தோட்டங்கள், குளத்தில் பூத்துக் குலுங்கிய தாமரையும் அல்லியும், நிழல் தரும் உயர்ந்த மரம் உள்ளிட்டவற்றைக் கண்டவுடன் சற்று இளைப்பாறியபோது இந்த ஊரே நான் உகந்த ஊர் என மனமகிழச் சீதாவிடம் தெரிவித்தார். இப்படி இராமர் வைத்த நான் உகந்த ஊரே பின்னாளில் நாகந்தூர் என மாறியது.

Sounderya

சிறப்பு

சிறப்பு

வைணவத்திற்கு உரிய திவ்ய தேசங்களுக்கு இணையாக பல கோவில்கள் இருந்தாலும் அக்கோவில்களுக்கு ஈடாக இக்கோவிலும் உள்ளது. இக்கோவிலில் மர்மம் நிறைந்த விசயம் என்னவென்றால் இத்திருத்தலத்தில் உள்ள உற்சவர் கீழுள்ள செப்பு படிமத்தினாலான மூலராமர் திருவிழா நாட்களில் கூட வெளியே தென்படுவதில்லை.

Sengai Podhuvan

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

சென்னையில் இருந்து சுமார் 151 கிலோ மீட்டர் தொலைவில் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்டுள்ளது நாகத்தூர். விழுப்புரத்தில் இருந்து குறிஞ்சிபடி, விக்கிரவாண்டி, பேரணி வழியாக சுமார் 31 கிலோ மீட்டர் பயணித்தால் நாகத்தூரில் உள்ள பட்டாபிராமர் கோவிலை அடையலாம்.

திண்டிவனம் - நாகந்தூர்

திண்டிவனம் - நாகந்தூர்

திண்டிவணத்தில் இருந்து நாகந்தூரை அடைய இரண்டு வழிகள் உள்ளன. தீவனூர், பெரமண்டூர், ரெட்டனை வழியாக 29 கிலோ மீட்டர் பயணித்தால் இதனை அடையலாம். அல்லது திருச்சி சாலை வழியாக முப்புளி, ரெட்டனை வழியாக 23 கிலோ மீட்டர் பயணித்து அம்மன்குளத்துமேடு சென்றும் ராமர் கோவிலை அடையலாம். இச்சாலையில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில், பெரியமாரியம்மன் கோவில், ரெட்டனை பெருமாள் கோவில், கங்கை அம்மன் கோவில் என பல ஆன்மீகத் தலங்கள் உள்ளன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more