Search
  • Follow NativePlanet
Share
» »மார்ச் மாதத்தில் கட்டாயம் செல்லவேண்டிய அந்த 7 இடங்கள்!

மார்ச் மாதத்தில் கட்டாயம் செல்லவேண்டிய அந்த 7 இடங்கள்!

மார்ச் மாதத்தில் கட்டாயம் செல்லவேண்டிய அந்த 7 இடங்கள் இவை

இப்பதான் நியூஇயர் கொண்டாடுனமாதிரி இருந்திச்சி. அதுக்குள்ள மாசம் 3 ஆகிடிச்சி. இருக்குற டென்சன்ல நேரம் போகுற போக்கே தெரியலயேனு எல்லாரும் புலம்பிக்கிட்டுருக்குற நேரத்துல ஒரு லீவ போட்டு ஜாலியா என்ஜாய் பண்லாமே.

எப்ப பாரு வேல வேலனு அவ்வை சண்முகி கமல்ஹாசன் மாதிரி இருந்தா உங்க வாழ்க்கைய எப்பத்தான் வாழப் போறீங்க. உங்களுக்கும் சரி உங்க மனைவிக்கும் சரி இப்போ இருக்குற பதற்றமான சூழ்நிலையில் ஒரு சுற்றுலா சென்றுவந்தால் நன்றாக இருக்குமென்றால் உடனடியாக கிளம்புங்கள்.

நாங்கள் வழிகாட்டுகிறோம்....

நீங்கள் இந்த மாதம் சுற்றுலா செல்ல ஏதுவான டாப் 7 இடங்கள் இவைதான்

ஹேவ்லாக் தீவு

ஹேவ்லாக் தீவு

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் வீர் சாவர்கர் விமான நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன

தம்பதிகள் அல்லது காதலர்கள் இணையாக செல்ல ஏற்ற இடம் இதுவாகும்.

PC: Sankara Subramanian

ஊட்டி

ஊட்டி

ஊட்டி நல்ல சாலைகள் வழியாக முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மைசூர், பெங்களூர், கொச்சி மற்றும் கோழிக்கோடு போன்ற நகரங்களில் இருந்து எளிதில் அணுக முடியும்.

சிறந்த பொழுதுபோக்குத் தளமான இது கோடைக்காலங்களில் குதூகலிக்க சிறந்த இடமாகும்.


PC:
Sankara Subramanian

ரண்தம்போர்

ரண்தம்போர்


ரண்தம்போர் சுற்றுலாத்தலமானது ராஜஸ்தான் நகரங்களுடனும் வெளி மாநில நகரங்களுடனும் பேருந்து சேவைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, ஆக்ரா மற்றும் டெல்லி போன்ற நகரங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுற்றுலாப்பயணிகள் ரணதம்போர் சுற்றுலாத்தலத்துக்கு வருகை தரலாம்.


PC: Bjoern

சிக்கிம்

சிக்கிம்

இமயமலைகளுக்கிடையே இயற்கையின் ஆசீர்வாதத்துடன் அமைந்திருக்கிறது சிக்கிம் மாநிலம். சிக்கிம் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்த்தே ஆகவேண்டிய அளவிற்கு அழகு நிறைந்தவை. சிக்கிம் மாநிலம் பெருமைப்படத்தக்க பல தனிச்சிறப்புகளை உடையதாகும்.

PC:Virtous One

தவாங்

தவாங்

தவாங் மலைநகரத்திற்கு குவஹாத்தி மற்றும் தேஜ்பூரிலிருந்து பேருந்து போக்குவரத்து சேவைகள் உள்ளன.

தவாங் நகரத்தின் அருகாமை ரயில் நிலையமாக ரங்கபுரா அறியப்படுகிறது.

இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த தெய்வீக மலை எழிற்பிரதேசம் அமைந்திருக்கிறது.

Pc: rajkumar1220

மௌண்ட் அபு

மௌண்ட் அபு

ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ள மௌண்ட் அபு ஒரு பிரசித்தமான மலைவாசஸ்தலம் எனும் புகழை பெற்றுள்ளது. இயற்கை எழிலுடன் கூடிய இனிமையான சீதோஷ்ணநிலை, பசுமையான மலைகள், சாந்தம் தவழும் ஏரிகள், கலையம்சம் கொண்ட கோயில்கள் மற்றும் பல ஆன்மீக யாத்ரீக ஸ்தலங்கள் போன்றவை இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

PC:
Koshy Koshy

கஜுராஹோ

கஜுராஹோ

கஜுராஹோ கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் உலகில் வேறெங்கும் காணமுடியாத தனித்துவத்துடன் மனித நாகரிகத்தின் ஒரு முக்கியமான வரலாற்று ஆவணங்களாக, காலச்சுவடுகளாக காட்சியளிக்கின்றன.

PC: Liji Jinaraj

Read more about: travel பயணம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X