» »டேராடூன் பயணத்தின்போது செல்லக்கூடிய மற்ற இடங்கள் எவை தெரியுமா?

டேராடூன் பயணத்தின்போது செல்லக்கூடிய மற்ற இடங்கள் எவை தெரியுமா?

Posted By: Udhaya

லக்‌ஷ்மண் சித் கோயில், தப்கேஷ்வர் மஹாதேவ் கோயில், சந்தளா தேவி கோயில் மற்றும் தபோவண் ஆகிய கோயில்களைக் கொண்ட டேராடூனுக்கு செல்லும்போது அருகிலிருக்கும் இந்த இடங்களுக்கும் போயிட்டு வாங்க.

தனௌல்டி

தனௌல்டி

டேராடூனிலிருந்து 60கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு 2 மணி நேரத்தில் சென்றடையமுடியும்.

இங்கு காண்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. தேனிலவு சுற்றுலா செல்பவர்கள் இந்த இடத்தை தங்கள் பயணத் திட்டத்தில் கொள்ளுங்கள்.

Alokprasad

வீரதீர செயல்கள்

வீரதீர செயல்கள்

இங்கு வருபவர்கள் தீர விளையாட்டுக்களான மலை ஏறுதல், ஆற்றை கடந்து செல்லுதல் மற்றும் தங்தர் முகாமில் நடை பயணம் போன்றவைகளை மேற்கொள்ளலாம். இந்த முகாம் அடிப்படை வசதிகளுடன் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கும் ஏற்பாடும் செய்து கொடுக்கிறது.

Kiran Jonnalagadda

பயண வசதிகள்

பயண வசதிகள்

டேராடூன் மற்றும் ரிஷிகேஷ் ரயில் நிலையங்கள் தான் தனௌல்டிக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையங்கள். மேலும் தனௌல்டிக்கு அருகில் இருக்கும் நகரங்களான டேராடூன், முசூரி, ஹரித்வார், ரிஷிகேஷ், ரூர்கி மற்றும் நைனிடாலில் இருந்து இங்கு வருவதற்கு பேருந்து வசதிகளும் உண்டு.

Arup1981

முசூரி

முசூரி

இந்த இடத்திலிருந்து மிகவும் அருகில் அதாவது 24கிமீ தொலைவில் அமைந்துள்ளது முசூரி. உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1880மீ உயரத்தில் அமைந்துள்ளது முசூரி. சிவாலிக் மலைகள் மற்றும் டூன் பள்ளத்தாக்கின் எழில்மிகு தோற்றத்தை முசூரியில் இருந்து காணலாம்.

Mohithdotnet

 காணவேண்டிய இடங்கள்

காணவேண்டிய இடங்கள்

இயற்கை எழில் வாய்ந்த இம்மலைப்பகுதி, இங்குள்ள பழங்கால கோவில்கள், நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள், வனவிலங்கு பூங்காக்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்காக புகழ்பெற்று விளங்குகிறது. ஜ்வாலா தேவி கோவில், நாக தேவதை கோவில் மற்றும் பத்ராஜ் கோவில் ஆகியவை இங்குள்ள புகழ்பெற்ற கோவில்களாகும்.

RajatVash

 நீர்வீழ்ச்சிகள்

நீர்வீழ்ச்சிகள்

இங்கு அமைந்திருக்கும் அழகிய நீர்வீழ்ச்சிகளான கெம்ப்டி நீர்வீழ்ச்சி, ஜாரிபானி நீர்வீழ்ச்சி, பட்டா நீர்வீழ்ச்சி மற்றும் மொசி நீர்வீழ்ச்சி ஆகியவை புகழ்பெற்றவைகளாகும்.

KuwarOnline

அல்மோரா

அல்மோரா

உத்தரகண்டின் குமாவோன் பகுதியில் ஒரு குதிரை சேணம் போன்ற வடிவிலான மலைமுகட்டில் அமைந்துள்ள மலைவாழ்விடமான அல்மோரா புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. சுயல் மற்றும் கோசி நதிகளுக்கு இடையே 5 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இடம் அல்மோரா. கடல் மட்டத்திலிருந்து 1651 மீட்டர் மேலே அமைந்துள்ள மலை நகரமான அல்மோரா பசுமையான காடுகள் சூழ அழகுற நம்மை வரவேற்கின்றது.

Travelling Slacker

எப்படி செல்வது

எப்படி செல்வது


முசூரியிலிருந்து 10மணி நேர தூரத்தில் அமைந்துள்ளது அல்மோரா. ஹரித்வார் வழியாக செல்வது சுலபமான வழியாக பார்க்கப்படுகிறது. மொத்தம் 380 கிமீ தொலைவு ஆகும்.

Rajarshi MITRA

சுற்றுலா

சுற்றுலா

இங்கு சுற்றுலா வருபவர்களுக்கு, அழகிய காட்சியான சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் துள்ளியமாக காண வசதி செய்யப்பட்டிருக்கின்றது. சிம்தோலா மற்றும் மர்தோலா சுற்றுலா வருபவர்களுக்கு ஏற்றது. அல்மோராவிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அழகுற காட்சியளிக்கும் மான் பூங்கா பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம். இப்பூங்காவில் மான், சிறுத்தை, மற்றும் இமாலய கருப்புக் கரடிகள் மற்றும் இது போன்ற பல விலங்குகள் உள்ளன.

Travelling Slacker

நைனித்தால்

நைனித்தால்

‘இந்தியாவின் ஏரி மாவட்டம்' என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் வீற்றிருக்கிறது. குமாவூங் என்றழைக்கப்படும் மலைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்நகரம் அற்புதமான ஏரிகளை வாய்க்கப்பெற்றிருக்கிறது

Incorelabs

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

ராஜ் பவன், விலங்கியல் காட்சிக்கூடம், தி ஃப்லாட்ஸ், தி மால், செயிண்ட் ஜான் இன் த வைல்டர்னஸ் சர்ச் மற்றும் பங்கோட் ஆகியவை நைனித்தால் நகரிலுள்ள இதர முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். தண்டி சதக், கர்னி ஹவுஸ், குர்பதால், குவானோ ஹில்ஸ் மற்றும் அரவிந்தர் ஆசிரமம் போன்று இடங்களுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். பார்க்க வேண்டிய இடங்கள் மட்டுமல்லாமல் அனுபவித்து மகிழவும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு நிறைந்திருக்கின்றன. குதிரைச்சவாரி, மலையேற்றம் மற்றும் படகுச்சவாரி போன்றவை இவற்றில் முக்கியமானவை.

Utkarshsingh.1992

தார்சூலா

தார்சூலா

தார்சூலாவிற்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள இடங்களான ஓம் பர்வதம், ஆதி கைலயம், இந்தியா-நேபாள எல்லை, இந்தியா-சீனா எல்லை மற்றும் நாராயண் ஆசிரமம் ஆகியவற்றிற்கும் செல்ல முடியும்.

மாபெரும் இமயமலைகளில் கலாபானி என்ற இடத்திலிருந்து ஓடத்துவங்கும் காளி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் ராஃப்டிங் செய்ய முடியும். அழகான ஏரியுடன் இணைக்கப்பட்டு இந்த ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டிருக்கும் சிர்கிலா அணைக்கட்டு இன்ப சுற்றுலாவிற்கு மிகவும் பிரபலமான இடமாகும்.

Prateek

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்