Search
  • Follow NativePlanet
Share
» »குரங்கணி மலையில் இப்படி ஒரு அற்புத இடம் கேள்வி பட்டிருக்கீங்களா?

குரங்கணி மலையில் இப்படி ஒரு அற்புத இடம் கேள்வி பட்டிருக்கீங்களா?

குரங்கணி மலையில் இப்படி ஒரு அற்புத இடம் கேள்வி பட்டிருக்கீங்களா?

By Udhaya

குரங்கணி மலைப்பகுதியில் இப்படி ஒரு இடம் இருப்பதைப் பற்றி பலருக்குத் தெரியாது. தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, தமிழகத்தில் மலையேற்றப்பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் விரைவில் தடை நீக்கப்படும் என்று தெரிகிறது. இந்த இடத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டால், உடனே செல்லத்தூண்டும். இப்போதே திட்டமிடுங்கள்.

நம்ம தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இருக்கும் கொலுக்குமலை என்ற இடம் இன்னும் அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தலமாகவே இருந்து வருகிறது. தூய்மையான இயற்கையின் அழகை ரசிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த கொலுக்குமலை ஒரு சொர்க்கம். உலகத்திலேயே டீ உற்பத்தியாகும் மிக உயரமான இடம் தான் இந்த கொலுக்குமலை. கடல் மட்டத்தில் இருந்து 7500 அடி உயரத்தில் இருக்கும் இந்த இடம் மூணாறில் இருந்து 30 கி.மீ தொலைவில் இன்னும் அதிகமானோர் கேள்விப்பட்டிராத சுற்றுலாதலமாகவே இருந்து வருகிறது. மூணாறைப் போன்றே அற்புதமான இயற்க்கை காட்சிகளை இங்கு பார்த்து ரசிக்கலாம். வாருங்கள் இங்கே என்னனென்ன இடங்கள் இருக்கின்றன, எங்கு தங்கலாம், எப்படி அடைவது என்பதை தெரிந்து கொள்வோம். முக்கியமாக பாதுகாப்பான பயணத்தை தொடர்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

எங்குள்ளது

எங்குள்ளது

இந்த கொலுக்குமலையானது தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் தாலுக்காவில் அமைந்திருக்கும் சிறு மலைக்கிராமமாகும். இந்த இடத்தின் குறிப்பிடும்படியான சிறப்புக்களில் ஒன்று உலகிலேயே 'டீ' பயிரிடப்படும் மிக உயரமான இடம் என்பது தான்.

தேனி மாவட்டத்தில் கேரளா, தமிழ்நாடு மாநில எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது இந்த கொலுக்குமலை. மூணாறு வந்து அங்கிருந்து கிழக்கே 23 கி.மீ தொலைவில் உள்ள சூரிய நெல்லி என்கிற இடத்தை அடைய வேண்டும். அதற்குமேல் காரில் பயணம் செல்வது மிகக்கடினம் என்பதால் இங்குவரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தனியார் ஜீப் ஒன்றை வாடகைக்கு அமர்திக்கொள்கின்றனர்.
.
vinodmurali

சூரிய நெல்லி

சூரிய நெல்லி

சூரிய நெல்லியில் இருந்து கொலுக்குமலை 10 கி.மீ தான் என்றாலும் இதனை சென்றடைய இரண்டு மணி நேரம் ஆகிறது. சுவாசப்பிரச்சனை இருப்பவர்கள், குழந்தைகள் இப்பயணத்தை தவிர்ப்பது நல்லது.

ஆம், இந்த கொலுக்குமலையில் கடல்மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 7,000 அடி உயரத்தில் 'டீ' சாகுபடி செய்யப்படுகிறது. 'டீ' சாகுபடி மட்டுமே இந்த பகுதியில் நடக்கும் ஒரே தொழிலாகும். இங்கு இன்னமும் பழங்கால முறைப்படி செயல்படும் தேயிலை தொழிற்சாலை ஒன்றும் அமைந்திருக்கிறது.

monsieur paradis

இயற்கையின் வர்ணஜாலங்கள்

இயற்கையின் வர்ணஜாலங்கள்

மேலே செல்லச்செல்ல இயற்கையின் வர்ணஜாலம் ஆரம்பிக்கிறது. அற்புதமான இயற்கை காட்சிகள் நம் கண்களுக்கு விருந்து படைகின்றன. அவற்றை கண்டுகொண்டே நீங்கள் உங்களை உணரமுடியும். இயற்கையின் சிறப்பே அதுதானே. கவலை மறந்து இன்பத்தில் திளைத்திருக்கச் செய்யும் இயற்கை அன்னைக்கு இடையூறின்றி பயணம் செய்வதுதான் நல்லது.

Motographer

கொலுக்குமலை - எப்படி அடைவது ?:

கொலுக்குமலை - எப்படி அடைவது ?:

தேனி மாவட்டத்தில் கேரளா, தமிழ்நாடு மாநில எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது இந்த கொலுக்குமலை. மூணாறு வந்து அங்கிருந்து கிழக்கே 23 கி.மீ தொலைவில் உள்ள சூரிய நெல்லி என்கிற இடத்தை அடைய வேண்டும்.

கொலுக்குமலைப்பதை தனியாருக்கு சொந்தமானது என்பதால் நுழைவுக்கட்டணமாக 200 ரூபாய் செலுத்தவேண்டும். இங்கு தங்கவேண்டுமானால் கொலுக்குமலை தேயிலை உற்பத்தி ஆலையால் நடத்தப்படும் 3 படுக்கையறை வசதி கொண்ட தாங்கும் விடுதி ஒன்று மட்டுமே உள்ளது. முன்னரே திட்டமிட்டு முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது.

Prasanth Chandran

ஜீப்பில் பயணம்

ஜீப்பில் பயணம்

அதற்குமேல் காரில் பயணம் செல்வது மிகக்கடினம் என்பதால் இங்குவரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தனியார் ஜீப் ஒன்றை வாடகைக்கு அமர்திக்கொள்கின்றனர். சூரிய உதயம் தான் கொலுக்குமலையின் சிறப்பம்சம் ஆகும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அக்காட்சியை நிச்சயம் தவற விடக்கூடாது.

monsieur paradis

சூரிய உதயம்

சூரிய உதயம்

கொலுக்குமலையில் நாம் கண்டிப்பாக தவற விடக்கூடாத விஷயங்களில் முக்கியமானது இங்கு நிகழும் சூரிய உதயமாகும். அதிகாலையில் பனிவிலகாத பசுந்தேயிலைத் தோட்டத்தின் பின்னணியில் கைக்குழந்தையின் உள்ளங்கை போன்ற இளஞ்சிவப்பு நிறத்தை சூரியன் பரப்பும் காட்சி வார்த்தைகளில் அடங்காதது.

தனியாக கேம்ப் அமைந்து தங்கினால் அது இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இங்கிருக்கும் தேயிலை உற்பத்தி ஆலையில் வெறும் பத்து ரூபாய்க்கு அதிருசியான தேநீர் கிடைக்கிறது.
Prasanth Chandran

 அனுமதிக் கட்டணம்

அனுமதிக் கட்டணம்

கொலுக்குமலைப்பதை தனியாருக்கு சொந்தமானது என்பதால் நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் செலுத்தவேண்டும். இங்கு தங்கவேண்டுமானால் கொலுக்குமலை தேயிலை உற்பத்தி ஆலையால் நடத்தப்படும் 3 படுக்கையறை வசதி கொண்ட தங்கும் விடுதி ஒன்று மட்டுமே உள்ளது. முன்னரே திட்டமிட்டு முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது.

இப்படியொரு அழகான இடத்தை புதுமையாக ரசித்திட வேண்டும் என்று நினைப்பவர்கள் இரவில் கொலுக்குமலையில் 'கேம்ப்' அமைத்து தங்கலாம். இதற்கென்றே பிரத்யேகமான இடங்களும் இங்கே உண்டு.

zachary jean paradis

மலையேற்றம்

மலையேற்றம்

மலையேற்றம் செல்லவும் கொலுக்குமலை நல்லதொரு இடமாகும். கொலுக்குமலையில் இருந்து மீஷபுலிமலை வரை டிரெக்கிங்கில் ஈடுபடலாம். அப்போது இந்த கொளுக்குமலையை சுற்றியிருக்கும் சோலைக் காடுகள்,ஊசியிலைக்காடுகள், பசுமையான மேய்ச்சல் நிலங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.

இங்குள்ள தேயிலை தொழிற்சாலையில் பாரம்பரியமான ஆங்கிலேயே முறைப்படி தயாரிக்கப்படும் நாம் குடிக்கும் தேநீரில் இருந்து வித்தியாசமான சுவையுடைய தேநீரை சுவைத்து மகிழலாம்

மொத்தத்தில் வழக்கமாக செல்லும் சுற்றுலாவில் இருந்து மாறுபட்டு சில நாட்கள் இனிமையாக, இயற்கையுடன் நெருக்கமாக களித்திட விரும்புகிறவர்கள் ஒருமுறைக்கு பலமுறை செல்லவேண்டிய ஓரிடம் இந்த கொளுக்குமலையாகும்.
Earth-Bound Misfit,

Read more about: travel trekking hills
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X