» »புண்ணியநதிகள் சூழ்ந்துள்ள திருவட்டாறு போகலாமா?

புண்ணியநதிகள் சூழ்ந்துள்ள திருவட்டாறு போகலாமா?

Posted By: Udhaya

திருவட்டாறு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றது. இது 108 திவ்யதரிசனங்களில் ஒன்று என்பதால் இந்து பக்தர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது. மேலும் திருவட்டாறில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் கண்கவரும் வண்ணமாக இருக்கின்றன. பாரலீ மற்றும் கோதை என்னும் இரண்டு ஆறுகள் மூவட்டமுகம் என்னும் இடத்தில் இந்த பட்டணத்தை சுற்றி வளைத்து உள்ளன. இதுவே இந்நகரின் பெயர்க்காரணமாக மாறிவிட்டது.

 பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

‘திரு' என்றால் புனிதம், ‘வட்டம்' என்றால் சுற்றியிருப்பது, ‘ஆறு' என்றால் நதி, எனவே திருவட்டாறு என்றால் புனித நதிகளால் சூழப்பட்ட இடம் என்று பொருள். புனிதமான ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் திருவட்டாறுக்கு தெய்வீக தன்மையை கொடுக்கின்ற, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடம் ஆகும்.

Thirumurugan

சுற்றுலா

சுற்றுலா


மாத்தூர் தொங்கு பாலம், புனித ஜேம்ஸ் தேவாலயம் (100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது), உதயகிரி கோட்டை மற்றும் தீர்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகியவை மற்ற புகழ்பெற்ற இடங்கள் ஆகும். இந்த பட்டணம் இந்துக்களின் புனித ஸ்தலம் என்பதால், சாலை மார்க்கமாக நாட்டின் பிற பகுதிகளோடு நன்கு இணைக்கப்பட்டு இருப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

Infocaster

தொடர்வண்டி நிலையம்

தொடர்வண்டி நிலையம்

கன்னியாகுமரி தொடர்வண்டி நிலையமே இதற்கு அருகாமையில் இருக்கும் தொடர்வண்டி நிலையம் ஆகும். நெருக்கமான விமான தளம் திருவனந்தபுரம் விமான நிலையம். குளிர்க்காலத்தில் வானிலை இனிமையாக இருப்பதால், பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அக்காலத்திலேயே இந்த பட்டணத்திற்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள். கோடையின் சுட்டெரிக்கும் வெயிலும், மழைக்காலத்தில் இங்கு உருவாகும் சூறாவழி புயல் காற்றும் பயணம் செய்வதை கடினமாக்குகின்றன.

Balaji191091

ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில்

ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில்

திருவட்டாறில் இருக்கும் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் 108 திவ்யதரிசனங்களுள் ஒன்று. இதன் காரணமாக பக்தர்கள் தொடர்ந்து இவ்விடத்திற்கு வருகை தருகின்றனர்.

Ilya Mauter

முக்கிய தெய்வங்கள்

முக்கிய தெய்வங்கள்


கோதை, பாரலீ மற்றும் தாமிரபரணி ஆகிய மூன்று நதிகளுக்கு நடுவே எழில்மிகும் நிலப்பரப்பில் இக்கோவில் அமைந்து இருக்கிறது. இக்கோவிலின் முக்கிய தெய்வங்கள் சிவபெருமானும், ஆதிகேசவபெருமாளும் ஆவர்.

Ssriram mt

ஆதிகேசவ சுவாமி

ஆதிகேசவ சுவாமி

புராணத்தின்படி ஆதிகேசவ சுவாமி ஒரு கடுமையான போரில் கேசி என்கிற அரக்கனை கொன்றார். அரக்கனின் மனைவி ஆதிகேசவ ஸ்வாமியை அழிக்கும்படி கங்கை நதியிடம் வேண்டிக்கொண்டார். ஆனால், ஸ்வாமிகளை அவரால் வீழ்த்த முடியவில்லை.

Ssriram mt

கேரள கட்டிடக்கலை

கேரள கட்டிடக்கலை

பெரிய முகப்பு மற்றும் கதவு தூண்கள், மற்றும் மேற்கூரை ஆகியவை கேரள கட்டிடக்கலை முறையில் மரத்தால் கட்டப்பட்டு இருக்கின்றன. மரம் நேர்த்தியாக செதுக்கப்பட்டு பல்வேறு தேவர்களையும், தேவிகளையும் பல்வேறு நிலைகளில் பிரதிபலிக்கின்றன. தூண்களிலும், மேற்கூரையிலும் இந்து இதிகாசங்களில் வரும் முக்கிய காட்சிகள் அழகாக செதுக்கப்பட்டு இருக்கின்றன.

Ssriram mt

மாத்தூர் தொங்கு பாலம்

மாத்தூர் தொங்கு பாலம்

மாத்தூர் தொங்கு பாலம் திருவட்டாறு அருகே இருக்கிறது. உண்மையில் இது நீரை எடுத்துசெல்ல உதவும் ஒரு குழாய். இந்த பாலம் பாரலீ நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது. அருகாமையில் இருக்கும் மாத்தூர் என்னும் சிறிய கிராமத்தின் பெயரை இந்த பாலத்திற்கு சூட்டி இருக்கிறார்கள். திருவட்டாறில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் இந்த பாலம் அமைந்து இருக்கிறது.

Infocaster

 உலக அதிசயம்

உலக அதிசயம்

தெற்கு ஆசியாவிலேயே உயரமான மற்றும் பெரிதான நீர்க்குழாய் என்னும் பெருமை இந்த பாலத்திற்கு உண்டு. 1966 ஆம் ஆண்டு பஞ்சத்தில் அவதிப்பட்டவர்களுக்கு இளைப்பாறுதலை கொடுத்த இந்த நடவடிக்கை, இப்போது ஒரு புகழ்பெற்ற தென்னிந்திய சுற்றுலா தளமாக மாறிவிட்டது.

Infocaster

 சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்


சுற்றுலா பயணிகளின் வரத்தை அதிகரிக்க சுற்றுலா துறை இந்த ஊரில் இருக்கும் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நீர்க்குழாயை சுற்றி இருக்கும் இடங்கள் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணமாக இருப்பதற்காக அவை நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த குழாயின் மையப்பகுதியில் நின்றுகொண்டு பசும்புல் விளைநிலங்களையும், மேற்கத்திய மலைத்தொடர்களையும், மெல்ல அசையும் புல்தரைகளையும் கண்டு ரசிக்கலாம்.

GopalKannan22

 உதயகிரி கோட்டை

உதயகிரி கோட்டை

உதயகிரி கோட்டை திருவட்டாறில் இருந்து 14 கி.மீ. தொலைவில் நாகர்கோவில் பட்டணத்தில் இருக்கிறது. திருவனந்தபுரம்-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால், நிச்சயம் இதை யாரும் பார்க்காமல் இருக்கமாட்டார்கள். இந்த கோட்டை 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, ஆனால் திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா இக்கோட்டையை 18ஆம் நூற்றாண்டில் மறுகட்டுமானம் செய்தார். துப்பாக்கிகளை வைப்பதற்காகவே இந்த கோட்டை கட்டப்பட்டது. இதற்காகவே இங்கு ஒரு படைக்களம் இருக்கின்றது, இன்னும் அது சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. திப்பு சுல்தான் உள்ளிட்ட பல பிரபலமான மனிதர்களை இக்கோட்டையில் கைதியாக வைத்து இருந்தார்கள். காலத்தின் தாக்கம் இந்த கட்டிடத்தில் வெளிப்படுகின்றது. இருப்பினும் இக்கட்டிடம் உயர்ந்து நின்று மகத்துவமாக காட்சியளிக்கிறது. திருவட்டாறின் வீர வரலாற்றை இக்கோட்டை பறைசாற்றுகின்றது

Sugeesh

திற்பரப்பு

திற்பரப்பு


திற்பரப்பு என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். இங்கு இருக்கும் நீர்வீழ்ச்சி புகழ்வாய்ந்தது. திருவட்டாறில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் நீர்வீழ்ச்சி, சுற்றுப்புறத்தை கண்கொள்ளா காட்சியாக மாற்றியமைக்கின்றது. கோதை ஆற்றில் இருந்து இந்த நீர்வீழ்ச்சி உருவாகின்றது. 50 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி, இசையருவியாக 300 அடி நீளத்திற்கு செல்கின்றது. வருடத்தில் நான்கு மாதங்கள் தவிற பிற மாதங்களில் இந்த அருவி வழிந்து ஓடுகின்றது. இந்த அருவியை புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக, சுற்றுலாத் துறை ஒரு குழந்தைகள் நீச்சல்குளத்தையும், ஒப்பணை அறையையும் கட்டி இருக்கிறது. அருவிக்கு அருகாமையில் மஹாதேவர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் இருக்கின்றது. இக்கோவிலை பாதுகாக்க கட்டப்பட்டு இருக்கும் பலமான அரண்களை தாண்டி பல சுற்றுலா பயணிகள் இக்கோவிலை காணச் செல்கின்றனர்.

Infocaster

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்