» »6 ஊர் அட்டகாச உலா : திருவண்ணாமலை அருகில் நீங்கள் பார்க்கவேண்டிய இடங்கள்!

6 ஊர் அட்டகாச உலா : திருவண்ணாமலை அருகில் நீங்கள் பார்க்கவேண்டிய இடங்கள்!

Posted By: Udhaya

சுற்றுலா என்பது பொழுதுபோக்காகவும், புது அனுபவமாகவும் இருக்கும் என்பதால் அதை நாம் அனைவரும் விரும்புவோம். ஊர் சுற்றுதல் என்பதே ஒரு புதிய அனுபவத்துக்கான தேடல்தானே. அதைப் போல கடவுளர்களின் சன்னிதிகளைத் தேடி செல்லும் சுற்றுலாப் பயணிகளும் இருக்கின்றனர். அதை ஆன்மீகச் சுற்றுலா என்கிறோம். ஒருவேளை நீங்கள் திருவண்ணாமலை கோயிலுக்கு செல்கிறீர்கள் என்றால் அருகிலுள்ள சுற்றுலா பகுதிகள் குறித்து உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே. அப்படி ஒரு பெரிய இடத்துக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு அருகிலுள்ள இடங்களையும் தெரியப்படுத்துவதே இந்த கட்டுரை. வாருங்கள் இன்று திருவண்ணாமலை அருகே இருக்கும் இடங்களுக்கு செல்வோம்.

 கடலூர் - திருவண்ணாமலை - தின்டிவனம்

கடலூர் - திருவண்ணாமலை - தின்டிவனம்

இந்த வழித்தடத்தை மூன்றாக பிரிக்கலாம்

1 கடலூர் - திருவண்ணாமலை

2 திருவண்ணாமலை - திண்டிவனம்

3 திண்டிவனம் - கடலூர்

கடலூர் - திருவண்ணாமலை

கடலூர் - திருவண்ணாமலை

கடலூரிலிருந்து திருவண்ணாமலை 107கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த வழியில் 2.30மணி நேரம் வரை பயணிக்க நேரிடும். அந்த வகையில் இந்த வழித்தடத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன எங்கெல்லாம் செல்லலாம் என்று காண்போம்.

பண்ருட்டி

பண்ருட்டி

பண்ருட்டி எனும் நகரம் பலாப்பழத்திற்கு பெயர் பெற்றதாகும். மேலும் இங்கு சரநாராயணபெருமாள் கோயில், ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயில், காந்தி பூங்கா, எல்லை காளியம்மன் கோயில், ஐயப்பன் கோயில், அங்காலம்மன் கோயில் என பல கோயில்கள் தொடர்ந்து வருகின்றன.

Vijayganesh.s1996

 திருக்கோவிலூர்

திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திருக்கோயிலூர் பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது. இங்கு உலகளந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இது 108 வைணவத் தலங்களுள் ஒன்றாகும்.

 பல்லுயிர்க்காடுகள்

பல்லுயிர்க்காடுகள்

மேலும் இந்த வழியில் திப்புக்காடு மற்றும் வள்ளிமலை பாதுகாக்கப்பட்ட காடுகள் வருகின்றன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

ஆணைமலை அடிவாரத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரா கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதால், சைவர்களுக்கு இது ஒரு முக்கிய வழிபாட்டு ஸ்தலம் ஆகும்.

சிவபெருமானை சித்தரிக்கும் ஒரு லிங்கம் இந்த கோவிலில் வைக்கப்பட்டு இருக்கிறது. உண்ணாமலையம்மனாக சிவபெருமானின் துணைவியாரான பார்வதியோடு, சிவபெருமானும் இங்கு வழிபடப்படுகின்றார். இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார்.

திருவண்ணாமலை - திண்டிவனம்

திருவண்ணாமலை - திண்டிவனம்


திருவண்ணாமலையிலிருந்து 1 மணி நேர பயணத்தில் அமைந்துள்ளது திண்டிவனம். இதற்கிடையில் பல முக்கிய இடங்கள் பார்க்கத்தகுந்தவாறு அமைந்துள்ளன.

செஞ்சிக்கோட்டை

செஞ்சிக்கோட்டை


தமிழகத்தின் மிகச் சில கோட்டைகளுள் ஒன்று செஞ்சிக்கோட்டை. இது திருவண்ணாமலையிலிருந்து திண்டிவனம் செல்லும் வழியில் அமைந்துள்ள இடமாகும்.

wiki

 திண்டிவனம் - கடலூர்

திண்டிவனம் - கடலூர்

திண்டிவனத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் காண்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன.

63கிமீ தொலைவில், 1.30மணி நேர பயணத்தில் அமைந்துள்ளது கடலூர்.

 புதுச்சேரி

புதுச்சேரி

திண்டிவனம் - கடலூர் செல்லும் வழியில் புதுச்சேரி அமைந்துள்ளது. இங்கும் காண்பதற்கேற்ற பல இடங்கள் அமைந்துள்ளன.

கடலூர் - திருவண்ணாமலை - திண்டிவனம் : காண்பதற்கேற்ற இடங்கள்

கடலூர் - திருவண்ணாமலை - திண்டிவனம் : காண்பதற்கேற்ற இடங்கள்

கடலூரில் நிலக்கரி சுரங்கங்கள். கடல் துறைமுகம், தேவநாதசுவாமி கோயில், பூவராக சுவாமி கோயில், பிச்சாவரம் காடுகள், பிச்சாவரம் ஏரி, பாடலீஸ்வரர் கோயில், செயிண்ட் டேவிட் கோட்டை, சில்வர் பீச் ஆகியன உள்ளன.

பாண்டிச்சேரியில் அரிக்கமேடு, அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில்லே நகரம், ராஜ் நிவாஸ், தாவரவியல் பூங்கா, பிரெஞ்சுப் போர் நினைவுச் சின்னம், அருங்காட்சியகம், பாண்டி பீச் என நிறைய இடங்கள் உள்ளன.