Search
  • Follow NativePlanet
Share
» »சிமிலிபல் தேசிய பூங்காவுக்கு ஒரு சிறகடிக்கும் பயணம் போலாமா?

சிமிலிபல் தேசிய பூங்காவுக்கு ஒரு சிறகடிக்கும் பயணம் போலாமா?

By Udhaya

சிமிலிபல் தேசிய பூங்கா பல தாவர வகைகளுக்கும் விளங்கின வகைகளுக்கும் வாழ்விடமாக விளங்குகிறது. இந்த காட்டில் ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடும் ஓடைகள் பாய்ந்தோடுகின்றன. இந்த பிரம்மாண்டமான காட்டில் சால் மரங்கள் ஓங்கி நிற்கும். மேலும் முடிவில்லா தூரத்திற்கு புல்நிலங்களை காணலாம். அதனால் வனவிலங்குகளை காண்பது கடினமாக இருக்கும். வனவிலங்குகளை கண்டுகளிப்பது மட்டும் நோக்கம் இல்லையென்றால், இங்குள்ள அழகிய நீர்வீழ்ச்சிக்காகவும் இங்கே வரலாம். சரி வாருங்கள் சிமிலிபல்லின் அழகில் மெய்மறக்க பயணத்தை தொடங்குவோம்.

நீர்வீழ்ச்சிகளும் விலங்கினங்களும்

நீர்வீழ்ச்சிகளும் விலங்கினங்களும்

சிமிலிபல் தேசிய பூங்காவில் உள்ள பரேஹிபாணி மற்றும் ஜோரண்டா நீர்வீழ்ச்சிகள் மிகவும் அழகிய தலங்களாகும். இதன் பின்னணியில் வனவிலங்குகளை தேடுவது ஒரு வித மகிழ்வை ஏற்படுத்தும். புலிகள், காட்டெருமைகள் மற்றும் யானைகளின் காலடி தடங்களை கண்டு அதற்கு பின்னால் போவது அலுப்புத் தட்டாத ஒரு செயலாகும்.

Byomakesh07

என்னென்ன விலங்குகள்

என்னென்ன விலங்குகள்

யானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள், கரடிகள், ஒட்டர், எலி போல் உள்ள மான்கள், காட்டு பன்றிகள், கீரிப்பிள்ளைகள், பறக்கும் அணில்கள், சாம்பார் வகை மான்கள் மற்றும் குறைக்கும் வகை மான்கள் போன்ற விளங்கின வகைகளை இந்த காட்டினில் காண நேரிடலாம்.

பறவைகள்

சிவப்பு காட்டு பவுல், மலை மைனா, கிரே ஹார்னிபில், இந்திய ஹார்னிபில், மலபார் ஹார்னிபில் என நிறைய பறவைகள் இருக்கின்றன.

எப்போது செல்லலாம்

நவம்பர் முதல் மே முடிய இருக்கும் எல்லா காலங்களிலும் சிமிலிப்பல் பூங்காவுக்கு செல்லலாம். அக்டோபர் 1 முதல் ஜூன் 15 வரை இந்த பூங்கா திறந்திருக்கும்.

கட்டணம்

இந்தியர்களுக்கு 40ரூ, வெளிநாட்டவருக்கு 1000 ரூ.

மாணவர்களுக்கு சலுகை உண்டு

எப்படி அடையலாம்

புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தா விமான நிலையம் முறையே 270 மற்றும் 240 கிமீ தொலைவில் உள்ளது. அங்கிருந்து நல்ல சாலை வழியில் இந்த பூங்கா இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலசூர் ரயில் நிலையம் 60 கிமீ தொலைவில் உள்ளது. இங்கிருந்தும் சாலை வழி இணைப்பு இருக்கிறது.

அரசு மற்றும் தனியார் வாகனங்களின் மூலமாக எளிதில் பூங்காவை அடையும் வழி செய்யப்பட்டுள்ளது.

எங்கு தங்குவது

குட்குடியா, லுலுங்க், ஜமுரி, துத்ருச்சம்பா ஆகிய இடங்களில் எளிதில் தங்கும் வசதிகள் கிடைக்கின்றன.

Toni Wöhrl

தேவ்குந்த்

தேவ்குந்த்

தேவ்குந்த் என்றழைக்கப்படும் டியோகுந்த்திற்கு தேவ தேவியர்களின் குளியல் தொட்டி என்ற அர்த்தமாகும். பரிபடாவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடம் அதன் பெயரின் அர்த்தத்தை நியாயப்படுத்தும் வகையில் நுட்பமான தகுதிகளை கொண்டுள்ளது.

Wiki GSD

 திருவிழாக்கள்

திருவிழாக்கள்

டியோகுந்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள உடலா என்ற நகரத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களை எதனுடனும் ஒப்பிட முடியாதபடி அவ்வளவு அற்புதமாக இருக்கும். அறுவடை திருவிழாவான மகர சங்கராந்தி ஜனவரி மாதம் கொண்டாடப்படுகிறது. டியோகுந்தை சுற்றிப்பார்ப்பதற்கு இதுவே சிறந்த நேரமாக இருக்கும். இங்கு நடக்கும் திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் சுற்றுலாப் பயணிகளின் மனதிலும் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும்.

Toni Wöhrl

அழகிய காட்சிகள்

அழகிய காட்சிகள்

டியோகுந்தின் உச்சியில் இருந்து நகரத்தின் அழகிய காட்சி பரப்பை கண்டுகளிக்கலாம். அலுப்புத் தட்டும் வாழ்க்கைக்கும் ஆன்மீக அமைதிக்கும் இடையே உள்ள தூரத்தை இந்த இடத்தின் அழகிய காட்சிப்பரப்பு போக்கி அமைதியை உண்டாக்கும்.

நீர்வீழ்ச்சியின் மேல் அமைந்துள்ள டியோகுந்த் அம்பிகை கோவிலில் இருந்து இந்த வட்டாரத்தின் அகலப் பரப்புக் காட்சியை கண்டுகளிக்கலாம். இருப்பினும் இங்கிருந்த அம்பிகை தேவியின் தேளை பரிபடாவில் உள்ள அம்பிகை கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது.

Rahul Paul

 கிச்சிங்

கிச்சிங்

கிச்சிங் என்பது பழங்காலத்தில் இருந்தே ஒரு கோவில் நகரமாக விளங்குகிறது. இந்நகரம் 9 முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை பஞ்ச் அரசாட்சிக்கு தலைநகரமாக விளங்கியது. கலை, மரபு, கட்டடக்கலை மற்றும் பண்பாடு இங்கே காலகாலமாக தொடர்ந்து வருவதால் காலத்தில் தொலைந்த கிச்சிங் நகரத்தின் மனமை நாம் உணரலாம். பஞ்ச் அரசாட்சியை ஆண்டவர்கள் மாதா கிச்சகேஷ்வரியை தீவிர பக்தியுடன் வழிபாட்டு வந்தனர். இந்த கடவுளை கிஜிங்கேஷ்வரி என்றும் அழைப்பார்கள்.

Dishabhagat07

 சிவராத்திரியின் போது செல்லுங்கள்

சிவராத்திரியின் போது செல்லுங்கள்

மாதா கிச்சகேஷ்வரிகாக கட்டப்பட்டுள்ள கோவிலை காண சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மயுர்பஞ்ச்சிற்கு வருவதுண்டு. இக்கோவிலில் தெய்வத்தை வணங்க தலை குனிந்த அரசர்கள் மாண்டு சீக்கரத்திலேயே மறக்கப்பட்டும் விடுவார்கள். இதனை உடைத்தெறிந்தது 1925-ல் பஞ்ச் அரசாட்சியை ஆண்ட பூர்ண சந்திர பஞ்ச் டியோ மற்றும் அவரின் சகோதரரான பிரதாப் சந்திர பஞ்ச் டியோ அவர்களே. கோவிலுக்கு அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் பழங்காலத்தை சேர்ந்த பல கலைப்பொருட்களும் சிலைகளும் உள்ளன. சிவராத்திரியின் போது இங்கே ஏழு நாட்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் இந்நேரத்தில் இங்கு சுற்றுலா வருவது உகந்ததாக இருக்கும்.

Wiki GSD

Read more about: travel temple odisha
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more