Search
  • Follow NativePlanet
Share
» »நெடுங்காயம் பகுதியில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

நெடுங்காயம் பகுதியில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

நீலம்பூர் நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நெடுங்காயம் பிரதேசம் இதன் அடர்த்தியான மழைக்காடுகளுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. இயற்கை அழகுடன் ஜொலிக்கும் இந்த வனப்பகுதியில் ஏராளமான தாவரவகைகளும்

By Udhaya

நீலம்பூர் நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நெடுங்காயம் பிரதேசம் இதன் அடர்த்தியான மழைக்காடுகளுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. இயற்கை அழகுடன் ஜொலிக்கும் இந்த வனப்பகுதியில் ஏராளமான தாவரவகைகளும் காட்டுயிர் அம்சங்களும் நிறைந்துள்ளன. காலனிய ஆட்சியின் போது கட்டப்பட்ட மரவீடு ஒன்று இந்த நெடுங்காயம் காட்டுப்பகுதியின் சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த மரவீட்டிலிருந்து சுற்றிலுமுள்ள இயற்கைக்காட்சிகளையும் காட்டு உயிரினங்களின் நடமாட்டங்களையும் நன்கு பார்த்து ரசிக்கலாம்.

பொதுத் தகவல்கள்

பொதுத் தகவல்கள்

வானிலை : 25 டிகிரி செல்சியஸ்

செலவிடும் நேரம் : அதிகபட்சம் 2-3 மணி நேரம்

திறந்திருக்கும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

நுழைவு கட்டணம் : 10 ரூ பெரியவர்களுக்கு

5ரூ - சிறியவர்களுக்கு

Vengolis

 விலங்குகள்

விலங்குகள்

இந்த இடத்தில் நீங்கள் நிறைய விலங்குகளைக் காணமுடியும். குறிப்பாக

1 காட்டு யானை

2 புலிகள்

3 குரங்குகள்

4 மான்கள் உட்பட மற்ற பாலூட்டிகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. இவற்றை தவிர வேறு சில விலங்குகளும் இங்கு காணமுடியும். உங்களுக்கு இந்த சுற்றுலா சிறப்பாக அமையும்.

Dhruvaraj S

சிறந்த காலம்

சிறந்த காலம்

எந்த ஒரு சுற்றுலாத் தளத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு நேரம் காலம் பார்த்துவிட்டுதான் செல்லவேண்டும். மழைக்காலத்தில் அங்கு செல்லமுடியுமா என்பதை தெரிந்து கொண்டு செல்வது நல்லது. நெடுங்காயமும் அப்படித்தான் மழைக்காலத்தில் செல்வது சிரமமானது. இதனால் கோடைக்காலத்தில் செல்லலாம்.

மார்ச் - ஜூன் முடிய எப்போது வேண்டுமானாலும் உங்கள் பயணத்தை திட்டமிடுங்கள்.

Jaseem Hamza

 எப்படி அடையலாம்

எப்படி அடையலாம்

நீலாம்பூரிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நெடுங்குளம்

மாவட்ட தலைநகரான மலப்புரம் இந்த நெடுங்குளம் பகுதியிலிருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

மாநிலத்தின் மற்ற பகுதிகளான கோழிக்கோடு, திருச்சூர், கண்ணூர், கொச்சி உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் போக்குவரத்து வசதிகள் உள்ளன.

இந்த பகுதியிலிருந்து கோழிக்கோடு 75 கிமீ தூரத் திலும், திருச்சூர் 113 கிமீ தூரத்திலும், கண்ணூர் 160 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

ரயில் நிலையம்

நீலாம்பூரில் ரயில் நிலையம் உள்ளது. இஙஅகு எர்ணாகுளம், பாலக்காடு, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய நகரங்களிலிருந்தும் மற்ற வெளி மாநில நகரங்களிலிருந்தும் ரயில் போக்கு வரத்து வசதி கள் உள்ளன.

Muhammed unais k

 பயனுள்ள டிப்ஸ்

பயனுள்ள டிப்ஸ்

1. காட்டுக்குள் நுழைய முன் அனுமதி பெற வேண்டும். இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

2. பயணச் சீட்டு வன அலுவலகத்தில் கொடுக்கப்படும்.

3.காடுகளில் குப்பைகளை போடக்கூடாது. அது சட்டப்படி நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.

Vengolis

நீலாம்பூரில் செய்யவேண்டியவை

நீலாம்பூரில் செய்யவேண்டியவை

1 அட்யான்பாறை நீர்வீழ்ச்சி

2 எலெம்பலை குன்று

3 நெடுங்காயம்

4 தேக்கு அருங்காட்சியகம்

5 வலம்தோட்ட நீர்வீழ்ச்சி

6 படகு சவாரி

Vengolis

நெடுங்காயம் பற்றிய முழு விவரங்கள்

நெடுங்காயம் பற்றிய முழு விவரங்கள்

பசுமையாக காட்சியளிக்கும் இந்த நெடுங்காயம் வனப்பகுதியில் யானைகள், காட்டெடுருமைகள், புலி, முயல், நீலக்குரங்கு, கரடி, காட்டுப்பூனை மற்றும் மான் போன்ற விலங்குகள் வசிக்கின்றன. பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால், வனத்துறையினரின் முன் அனுமதி பெற்றுத்தான் இந்த காட்டினுள் பயணிகள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நெடுங்காயத்தில் உள்ள யானைப்பயிற்சி முகாம் ஒன்று ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பயணிகளை ஈர்த்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த நெடுங்காயம் வனப்பகுதியானது ‘நீலகிரி உயிர்ச்சூழல் பாதுகாப்பு மண்டல'த்தின் ஒரு அங்கமாகவும் விளங்குகிறது. கேரள அரசாங்கம் தனது இரண்டாவது ‘சூழல்மாசுபடா சுற்றுலாத்திட்ட'த்திற்கான மையமாக இந்த காட்டுப்பகுதியை அங்கீகரித்துள்ளது. ஏராளமான ஒற்றையடிப்பாதைகளை கொண்டுள்ளதால் சாகச விரும்பிகள் இங்கு மலையேற்றத்திலும் ஈடுபடலாம்.

Vengolis

Read more about: travel kerala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X