Search
  • Follow NativePlanet
Share
» »தலையாறு அருவிக்கு ஒரு சூப்பர் சுற்றுலா செல்வோமா?

தலையாறு அருவிக்கு ஒரு சூப்பர் சுற்றுலா செல்வோமா?

தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையாலும், மலையில் காணப்படும் நீர் ஆதாரங்களினாலும் வளம் பெறுகிறது. தற்போது ஒரு மாதமாக பெய்த மழையால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்கள் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி பகுதிகள் பச்சை ந

By Udhaya

தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையாலும், மலையில் காணப்படும் நீர் ஆதாரங்களினாலும் வளம் பெறுகிறது. தற்போது ஒரு மாதமாக பெய்த மழையால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்கள் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி பகுதிகள் பச்சை நிறத்தில் மாறியுள்ளன. மலையில் நீர் ஆதாரம் அதிகமாகி நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்படி பழநி அருகே இருக்கும் ஒரு அருவியைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூரிலிருந்து எப்படி இந்த அருவியை அடைவது, என்னவெல்லாம் செய்யலாம். எப்படி பொழுதை கழிக்கலாம். அருகில் காணவேண்டிய இடங்கள் எவையெவை என்பன பற்றி இந்த பதிவில் காண்போம்.

எங்கே இருக்கிறது

எங்கே இருக்கிறது

மதுரைக்கு அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி மலைகளில் அமைந்துள்ளது இந்த தலையாறு அருவி. கொடைக்கானல் காட்டுச் சாலையில் டம் டம் பாறையிலிருந்து மேற்கு திசையில் 3.6 கிமீ தொலைவில் பயணிக்க இது கண்களில் தென்படுகிறது.

மொத்த உயரம் - 975 அடி

இந்த அருவிக்கு அவ்வளவு எளிதில் பொதுமக்களால் செல்ல இயலாது.

சென்னையிலிருந்து

சென்னையிலிருந்து


பொதுவாக எல்லா கட்டுரைகளும் சென்னையிலிருந்து அந்தந்த இடங்களுக்கு செல்ல பயண வழிகாட்டியையே கொண்டிருக்கும். அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரிலிருந்து இந்த அருவியை அடையவேண்டுமென்றால் திண்டுக்கல்லுக்கு வந்து அங்கிருந்து தலையாறு நீர்வீழ்ச்சியை அடையவேண்டும்.

சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் ரயில்கள் திண்டுக்கல் வழியாகவே வருகின்றன. மேலும் இங்கிருந்து நிறைய பேருந்துகள் தலையாறு நீர்வீழ்ச்சிக்கு இயக்கப்படுகின்றன.

மேலும் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலியிலிருந்து எப்படி அடைவது என்பதையும் பார்க்கலாம்.

கோயம்புத்தூரிலிருந்து

கோயம்புத்தூரிலிருந்து


கோயம்புத்தூரிலிருந்து தலையாறு நீர்வீழ்ச்சிக்கு வருகை தர மொத்தம் மூன்று வழிகள் இருக்கின்றன. ஒட்டன்சத்திரம் வழியாக 192 கிமீ பயணிக்கு ஒரு வழித்தடம், திருப்பூர், வெள்ளக்கோயில், திண்டுக்கல் வழியாக பயணிக்கும் 250 கிமீ தூரம் கொண்ட இன்னொரு வழித்தடம் மேலும் மூன்றாவதாக 233 கிமீ தொலைவைக் கடக்க வைக்கும் ஒரு வழித்தடமும் இருக்கின்றது.

இதில் கோவை - பல்லடம் - குண்டடம் - ஒட்டன்சத்திரம் - வத்தலகுண்டு வழியாக தலையாறு அருவியை அடையும் வழித்தடமே சிறந்ததாகும்.

மொத்த தூரம் 192கிமீ

பயண நேரம் 4 மணி நேரம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரையிலிருந்து வருபவர்களுக்காக

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரையிலிருந்து வருபவர்களுக்காக

கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகாசி, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமேசுவரம் என தென் தமிழகத்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சரி, கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கும் சரி மதுரை வந்து வருவதே சிறந்த பாதையாக அமையும்.

மொத்த தூரம் 306 கிமீ

பயண நேரம் 4 மணி நேரம்

வத்தலகுண்டு

வத்தலகுண்டு


நீங்கள் தமிழகத்தின் எந்த இடத்திலிருந்து வந்தாலும் இந்த வத்தலகுண்டு பகுதியை தொட்டே தலையாறு அருவிக்கு பயணிக்கமுடியும்.

தலையாறு அருவிக்கு அரசு வாகனங்கள் நேரடியாக இல்லை. வத்தலகுண்டு வரை தாராளமாக வாகனங்களும், பின் இதையடுத்த கொங்குவார்பட்டி சுற்றுவட்டார கிராமங்களுக்கு சில குறிப்பிட்ட இடைவெளியில் வாகனங்களும் இயக்கப்படுகின்றன.


Barbaragailblock

தலையாறு அருவியில் செய்யவேண்டியவை

தலையாறு அருவியில் செய்யவேண்டியவை


அருவிக்கு நடந்து செல்வது

அருவியைக் கண்டு ரசிப்பது

அருவிக்கரையில் புகைப்படமெடுப்பது

சுற்றுப் புறத்தை ரசிப்பது மற்றும் பச்சை வெளியில் புகைப்படமெடுப்பது

மஞ்சளாறு அணைக்கு செல்வது

செல்லும் வழியில் மாஞ்சோலைகள், தோட்டங்களை காண்பது

அம்மா மச்சு எனும் இடத்துக்கு செல்வது

Mprabaharan

தலையாறு அருவி

தலையாறு அருவி

தூரத்திலிருந்து காணும்போது எலியின் சிறிய வால் போன்று காணப்படும் இந்த அருவிக்கு எலி வால் அருவி என்றும் பெயர். கருப்பு பாறையின் பின்னணியில் நீர் வெள்ளை நிறத்தில் வழிந்து ஓடுவது மிகவும் அழகாக இருக்கும்.

இதன் கீழே ஐந்து அடி பாறை ஒன்று உள்ளது. இது நதியாக பாய்ந்து காட்டு வழியில் ஓடுகிறது. மற்ற அருவிகளுக்கு செல்லும்போது தூரத்திலிருந்தே அந்த அருவியின் சத்தத்தை கேட்கமுடியும். ஆனால் தலையாறு அருவி அந்த அளவுக்கு சத்தம் இல்லாமல் காணப்படுகிறது.

Barbara Gail Block

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் மற்றும் சிறப்புகள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் மற்றும் சிறப்புகள்


தலையாறு பகுதியிலிருந்து நடந்து செல்லும் தொலைவிலேயே பண்ணைக்காடு எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது.

தலையாறு அருகிலேயே மஞ்சளாறு அணை உள்ளது.

உலகப் புகழ் பெற்ற கொடைக்கானல் சுற்றுலாத் தளம் இங்கிருந்து 1 மணி நேர பயண தொலைவில் அமைந்துள்ளது.

45 நிமிடம் பயணித்தால் கும்பக்கரை நீர்வீழ்ச்சியை அடையமுடியும்

மூணாறு, வால்ப்பாறை உள்ளிட்ட பகுதிகளும் இங்கிருந்து சில மணி நேர பயண தூரத்திலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Marcus334

Read more about: travel waterfalls
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X