Search
  • Follow NativePlanet
Share
» »ஆதி தமிழ்க்குடிகள் வாழ்ந்த அழகிய கடற்கரை மாவட்டம் நாகப்பட்டினம்

ஆதி தமிழ்க்குடிகள் வாழ்ந்த அழகிய கடற்கரை மாவட்டம் நாகப்பட்டினம்

ஆதி தமிழ்க்குடிகள் வாழ்ந்த அழகிய கடற்கரை மாவட்டம் நாகப்பட்டினம்

By IamUD

நாகப்பட்டினம் நகரம் சென்னையிலிருந்து 270 கிலோமீட்டர் தூரத்தில் தஞ்சாவூருக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் வாழ்ந்த நாகர் இன மக்களைக் குறிக்கும் சொல்லான நாகர் என்ற சொல்லும், நகரம் என்று பொருள்படும், பட்டினம் என்ற சொல்லும், இணைந்து இந்த நகருக்கு நாகப்பட்டினம் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

வரலாற்றில், இந்நகருக்கான பெயர்கள் பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளன. சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில், சோழகுல வள்ளிப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட நாகப்பட்டினத்தை, தலெமி என்னும் வரலாற்றாசிரியர், நிகாம் என்ற பெயரில் தன்னுடைய குறிப்புகளில் அழைக்கிறார். போர்த்துக்கீசியர்கள், கோரமண்டலத்தின் நகரம் என்று குறித்துள்ளனர்.

நாகப்பட்டினம் அதன் சிறந்த வரலாறு மற்றும் பண்பாட்டினால் மிகவும் புகழ் பெற்ற நகரம் ஆகும். இங்குள்ள துறைமுகம், நாட்டிலுள்ள சிறந்த துறைமுகங்களுள் ஒன்று. இங்கு அமைந்துள்ள கோவில்கள் புனித யாத்திரை மேற்கொள்வோரால், மிகவும் கவரப்பட்டவை ஆகும். வாருங்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தின் அழகிய சுற்றுலாத் தளங்களை கண்டுகளிக்கலாம்.

 எப்படி செல்வது

எப்படி செல்வது


நாகப்பட்டினத்திலிருந்து 141 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி விமான நிலையம் மிக அருகாமையில் உள்ள விமான நிலையம் ஆகும். சென்னையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம், உள் வெளி நாட்டின், பல நகரங்களிலிருந்தும் இந்நகரத்தை இணக்கிறது. நாகப்பட்டினம் ரயில் நிலையம், தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களை இணைக்கிறது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் பல நகரங்களிலிருந்தும் தினசரி பேருந்துகள் நாகப்பட்டினத்திற்கு இயக்கப்படுகின்றன.

எப்போது செல்வது

அக்டோபர் முதல், மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலநிலை, நாகப்பட்டினத்திற்கு சுற்றுலா செல்ல சிறந்த காலநிலையாகும். இருப்பினும், ஆண்டின் அனைத்து மாதங்களிலும், பெருமளவு சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் புனித யாத்திரைக்கு ஏற்ற மாதங்கள் ஆகும். மழைக்காலமான ஜூன் முதல், செப்டம்பர் மாதங்களில், சுற்றுலாத் தலங்கள், மிக அழகாகவும், புதியதாகவும் காட்சியளிக்கின்றன.

Nileshantony92

 நாகப்பட்டினத்தின் ஆன்மீகச் சுற்றுலா

நாகப்பட்டினத்தின் ஆன்மீகச் சுற்றுலா

சௌந்தர்யராஜ பெருமாள் கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், காயாரோகணசுவாமி கோவில், ஆறுமுகசுவாமி கோவில், போன்ற புகழ்பெற்ற கோவில்களைக் கொண்ட நகரமாக இது விளங்குகிறது.

வேதாரண்யம் என்ற ஊரில் அமைந்திருக்கும் வேதாரண்யேஸ்வரர் கோவில், பழமை வாய்ந்த நாகூர் தர்கா, வேளங்கண்ணிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயம் என இந்து, இஸ்லாம், கிறித்தவம், பௌத்தம் ஆகிய நான்கு வகை மதங்களை ஒன்றிணைக்கும் நகரமாக இந்நகரம் விளங்குகிறது.

Sukumaran sundar

 கோடியக்கரை

கோடியக்கரை

நாகப்பட்டினத்திற்கு அருகில், ஒரு சதுப்பு நிலம் காணப்படுகிறது. இச்சதுப்பு நிலமானது, பல்லுயிர் வசிப்பிடத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதுதவிர நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள, கோடியக்கரை என்ற ஊரில், காட்டு விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. வரலாறு சோழ மன்னர்கள் காலத்தில் நாகப்பட்டினம், தலை சிறந்த துறைமுகமாகவும், வர்த்தக மையமாகவும் சிறப்புற்று விளங்கியது.

Marcus334

கோடியக்கரை பற்றி தெரிந்து கொள்ள சொடுக்கவும்

சென்னையிலிருந்து கோடியக்கரை எப்படி செல்வது, பயணத்திட்டம் உள்ளிட்ட தகவல்களுக்குசென்னையிலிருந்து கோடியக்கரை எப்படி செல்வது, பயணத்திட்டம் உள்ளிட்ட தகவல்களுக்கு

நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்

நெல்லுக்கடை மாரியம்மன் கோவில்

தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுள் நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். ஒரு அரிசி வியாபாரியின் கனவில்வந்த அம்மனின் விருப்பத்தை ஏற்று இக்கோவில் கட்டப்பட்டதாகும். ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கூடி வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

நடை திறக்கும் நேரம்

காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்

சிறப்புகள்

நெல்லுக்கடை மாரியம்மனிடம் இந்த பகுதி விவசாயிகள் நெல்மணிகளையும் விதை நெல்லையும் வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால் விளைச்சல் செழிக்கும் லாபம் கொழிக்கும் என்று நம்புகின்றனர்.

ஆண்டுக்கு ஒரு முறை அம்மனுக்கு தைலக் காப்பு சாத்தப்படுகிறது.

உமாபதி

ஆறுமுகச் சுவாமி கோவில்

ஆறுமுகச் சுவாமி கோவில்

நாகப்பட்டினத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சுப்ரமணியசுவாமிக்காகக் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் மயிலுக்கு அருகில் சுவாமி நிற்பது போன்ற மிக அழகிய சிலை உள்ளது.

இந்த சிலையைச் செதுக்கிய சிற்பியைப் பாராட்டி, அரசன் பொன்னும் பொருளும் பரிசளித்ததாகவும், அதே நேரத்தில் இதுபோன்ற சிலையை அந்த சிற்பி செதுக்கவே கூடாது என்று அவரது கட்டைவிரலை துண்டித்துவிட்டதாகவும், செவி வழி வந்த செய்திகள் கூறுகின்றன.

Venkat

காயாரோகணேஸ்வரர் கோவில்

காயாரோகணேஸ்வரர் கோவில்

காயாரோகணேஸ்வரர் கோவிலானது, நீலாயதாட்சியம்மன் கோவில் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. மிகப்பழமைவாய்ந்த இக்கோவில், ஒரு சிவன் கோவில் ஆகும். இங்கு உள்ள அம்மனின் பெயர் நீலாயதாட்சியம்மன் ஆகும். கோவில் வளாகத்தினுள் சிவபெருமான் மற்றும் நீலாயதாட்சியம்மனின் விக்ரகங்கள் காணப்படுகின்றன. புண்டரீக முனிவருக்கு சிவபெருமான் அருள்புரிந்து அவருக்கு முக்தி அளித்ததாகக் கூறப்படுகிறது.

Ssriram mt

 வேதாரண்யம்

வேதாரண்யம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஊர் இதுவாகும். இங்குள்ள புகழ்பெற்ற வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தினால்தான் இவ்வூருக்கு இப்பெயர் அமைந்தது. பராந்தக சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் ஒரு சிவன் கோவிலாகும். இங்குள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண், ஆயுர்வேத மூலிகைக்காடு, வரலாற்றுப் புகழ்வாய்ந்த கலங்கரை விளக்கம், இராமர் பாதம், எட்டுக்குடி முருகன் கோவில், போன்ற இடங்களும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடங்களாகும்.

Arunankapilan

தரங்கம்பாடி

தரங்கம்பாடி

கடலையொட்டி அமைந்துள்ள தரங்கம்பாடி நகரத்தில், இன்று அதன் அலைகளின் கீதங்களும் கூட குறைவாகவே ஒலிக்கின்றது. இன்னமும் யாரும் கிளராத இடமாகவே உள்ள தரங்கம்பாடி, தமிழக கடற்பகுதிகளில் மிகவும் குறைவாகவே ஆராய்ந்து பார்க்கப்பட்ட இடமாக உள்ளது.

தரங்கம்பாடிக்கு வருவதற்கு மற்றும் ஒரு முக்கிய காரணமாக அங்குள்ள டேனிஷ் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைச் சொல்லலாம். இந்தியாவில் வேறெங்கும் எளிதில் கிடைக்காத டேனிஷ் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ள டேன்ஸ்போர்க் (டேனிஷ் கோட்டை) இதில் முக்கியமான ஒன்றாகும்.

Priasai

எப்படி செல்வது

நல்ல போக்குவரத்து வசதியை உடைய தரங்கம்பாடி நகரம், சென்னைக்கு அருகிலேயே உள்ளது.

எப்போது செல்வது

தரங்கம்பாடியின் பருவநிலை தமிழ்நாட்டின் பிற பகுதிகளைப் போலவே வெப்பமாகவும், அனலாகவும் வருடத்தின் பெரும்பாலன நாட்கள் இருந்தாலும், மழைக்காலங்களில் சற்று நல்ல சீதோஷ்ணத்துடன் காணப்படும்.

தரங்கம்பாடி பற்றிய முழுத்தகவல்களுக்கு

தரங்கம்பாடியில் என்னென்ன காண்பதுதரங்கம்பாடியில் என்னென்ன காண்பது

டச்சுக் கோட்டை

டச்சுக் கோட்டை

டச்சுக்கோட்டையானது, நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள தரங்கம்பாடி என்ற ஊரில் அமைந்துள்ளது. 1620 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை, டச்சுக்கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த சான்றாகும். இக்கோட்டை நுண்ணியக் கட்டிடக்கலைக்கு இன்றளவும், புகழ்பெற்று விளங்குகிறது. காலனி ஆதிக்கம் குறித்த வரலாறு மற்றும் கட்டிடக்கலை தொடர்பான ஆர்வம் உள்ளவர்கள் இக்கோட்டையைக் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும்.

Abhinav Sigatia

 டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

டச்சுக் கோட்டைக்கு உள் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறை

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

அருங்காட்சியகத்தில் இருக்கும் பொருள்கள்

Mukulfaiz

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்

டச்சுக்கோட்டையின் அழகிய புகைப்படங்கள்All photos above are taken from

PC: Wiki Commons

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X