Search
  • Follow NativePlanet
Share
» »வந்தாச்சு வீக்கென்ட்... இந்த வார சுற்றுலாவுக்கு எங்க போகலாம் ?

வந்தாச்சு வீக்கென்ட்... இந்த வார சுற்றுலாவுக்கு எங்க போகலாம் ?

By Sabarish

வார விடுமுறை வந்தாலே ஓடியாடி வேலை செய்த களைப்பை போக்க சின்னதா எங்கையேனும் சுற்றுலா சென்று வருவது பலரது வாடிக்கையாக இருக்கும். இது மாதத் தொடக்க வார விடுமுறை வேறு. பட்ஜெட்டுக்கும் பிரச்சனையில்லை. ஆனா, எங்க பாஸ் போரது, வெளியில வந்தாலே வெயில் வாட்டி எடுக்குதேன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்குறவங்களுக்காகவ ஜிலு ஜிலுன்னு ஜாலியான டூருக்கு ஒரு ஏரியா இருக்குதுங்க. வாங்க, கொட்டும் அருவிலும், பசுமைக் காட்டிலும் சுற்றித் திரிய பயணிப்போம்.

ஹூப்ளி - எல்லாபூர்

ஹூப்ளி - எல்லாபூர்

ஹூப்ளியில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எல்லாபூர் என்னும் அழகிய மலைச் சுற்றுலாத் தலம். இப்பகுதி குறைந்த மக்கள் தொகையுடன் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். கர்நாடக மாநிலத்திலேயே அழகு மிகுந்த அருவியான சத்தோடி நீர்வீழ்ச்சி இப்பகுதியில் தான் அமைந்துள்ளது. நுங்கள் இருசக்கரம் அல்லது காரில் பயணிக்கிறீர்கள் என்றால் வழி நெடுகிலும் பல பசுமை நிறைந்த காடுகளை ரசித்தபடியே செல்லலாம்.

 தட்டிஹல்லா அணை

தட்டிஹல்லா அணை

ஹூப்ளியில் இருந்து எல்லாபூர் செல்லும் சாலையில் சுமார் 48 கிலோ மீட்டர் தொலைவில் முதலில் உங்களை வரவேற்கும் சுற்றுலா அம்சம் தட்டிஹல்லா அணை. மேற்குத் தொடர்ச்சி மலையில் பல சிற்றாறுகளும், காளி நதியும் இணைந்து உருவாகும் இந்த அணை மலைகள் சூழ்ந்த சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. காளி நதி உத்தர கன்னடா மாவட்டம் டிகி என்னும் கிராமத்தின் வழியாக சென்று சுமார் 4 லட்சம் மக்களின் நீராதாரமாக உள்ளது. காளி ஆற்றின் குறுக்கே சுபா அணை என்னும் மற்றுமொறு பெரிய அணையும் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 கவி ரேகா குளம்

கவி ரேகா குளம்

எல்லாபூர் காட்டின் மையத்தில் அமைந்திருக்கும் கவி கேரே என்பது பசுமை வனக் காடுகள் சூழ்ந்த ஓர் குளமாகும். நீங்கள் உங்களது காதலியுடன் இப்பகுதிக்குச் சென்றுள்ளீர்கள் என்றால் இக்குளத்தின் அமைதியும், சுற்றுவட்டார அழகும் நிச்சயம் உங்களது மனதை கொள்ளை கொள்ளும்.

சத்தோடி அருவி

சத்தோடி அருவி

எல்லாபூர் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தவறவிடக் கூடாத அம்சம்தான் சத்தோடி நீர்வீழ்ச்சி. எல்லாபூரில் இருந்து சுமார் 27 கிலோ மீட்டர் மலையேற்றத்தில் கொடசல்லி என்னும் பெரிய அணையின் அங்கமாக அமைந்துள்ளது இந்த சத்தோடி அருவி. உள்ளூர் மக்களால் சின்ன நயாகரா என்றழைக்கப்படும் இந்நீர்வீழ்ச்சி 50 அடி உயரத்தில் இருந்து காடுகளுக்கு நடுவில் வில் பாய்ச்சியதைப் போல பாயும் அழகே தனி தான். அருவியில் இருந்து நீரோடையாக மாறி கொடசல்லி அணையின் முகத்துவாரத்தில் சென்று அணையுடன் இணைகிறது.

Rohan Dhule

சாகச விரும்பிகளுக்காக...

சாகச விரும்பிகளுக்காக...

நீங்கள் மலையேற்ற சாகச விரும்பியாக இருந்தால் இப்பகுதி உங்களுக்கு மாபெரும் அணுபவத்தை அள்ளித் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. புதுமனத் தம்பதியர்களுக்கு ஏற்ற ரம்மியமான காட்சிகள், படகுச் சவாரி, வண்ணமயமான பறவைகள் என எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் இங்கே நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, மழைக் காலத்தில் இப்பகுதிக்கு செல்வதை விட தற்போதைய சூழ்நிலையில் நவம்பர் மாதம் வரை இப்பகுதிக்கு சுற்றுலா சென்று வரலாம்.

 மகோத் நீர்வீழ்ச்சி

மகோத் நீர்வீழ்ச்சி

சத்தோடி அருவிக்கு நேர் எதிராக அமைந்துள்ள மற்றொரு நீர்வீழ்ச்சிதான் மகோத் நீர்வீழ்ச்சி. எல்லாபூரில் இருந்து 17 கிலோ மிட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. பெத்தி காட்டாறானது மகோத் என்னும் மலைப் பகுதியில் சுமார் 600 அடிக்கும் கூடுதலான உயரத்தில் இருந்து பிரம்மாண்டக் காட்சியுடன் கொட்டும் அழகு காண்போரை கட்டாயம் பிரம்மிக்கச் செய்திடும். மேலும், இந்நீர்வீழ்ச்சி ஜேனுகல்லுகுட்டா மற்றும் காட்சி முனைப் பகுதிக்கு அருகிலேயே உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் தவறாது இதனையும் கண்டு ரசிக்கலாம்.

Prad.gk

Read more about: travel tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X