Search
  • Follow NativePlanet
Share
» »ஆடி வெள்ளி அள்ளித் தரும் செல்வ வளம்!

ஆடி வெள்ளி அள்ளித் தரும் செல்வ வளம்!

இந்த ஆண்டு ஆடியில் நான்கு வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. இதில், எந்தக் கோவில்களுக்குச் சென்று வழிபட்டால் செல்வ வளம் அள்ளிக் கிடைக்கும் என தெரியுமா ?

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு சிறப்பான மாதம். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களை கட்டும். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தினை வரவேற்பதுபோல் அம்மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையை பண்டிகையாக கொண்டாடுவது வழக்கம். ஆடிவெள்ளி அம்மனுக்கு சிறப்பான தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடியில் நான்கு வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது நம்பிக்கை. இம்மாதத்தில் ஆடிச் செவ்வாயும் முக்கியத்துவம் பெறுகின்றன. இம்மாதத்தில் எல்லா மாரியம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இதில், உங்கள் பகுதியில் உள்ள எந்த அம்மன் தலத்திற்குச் சென்று வழிபட்டால் செல்வ வளம் அள்ளிக் கிடைக்கும் என பார்க்கலாம் வாங்க.

ஆடி பிறப்பு

ஆடி பிறப்பு


தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் அம்மனை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது. காரணம் சந்திரன் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும்.

Bernard Spragg. NZ

ஆடி வெள்ளி

ஆடி வெள்ளி


ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபடுவது மிகச் சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்பது நம்பிக்கை. அதுவும் அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் அம்மன் குளிர்ந்த மனதோடு கேட்கும் வரங்களை கொடுப்பாள் என்று நம்பிக்கை உள்ளதால் இந்த நாட்களில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இந்த ஆடி வெள்ளி சிறப்பு வழிபாட்டில் பெண்கள் அதிக பக்தியுடன் பங்கேற்று தங்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட அம்மனை வழிபடுகின்றனர்.

எஸ்ஸார்

தஞ்சாவூர் வடபத்ரகாளி

தஞ்சாவூர் வடபத்ரகாளி


தஞ்சை, பூமால் ராவுத்தர் கோவில் தெருவில், வடபத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சும்பன், நிசும்பன் எனும் அசுரர்களின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத தேவர்கள் தேவியை நோக்கி முறையிட்டனர். தேவி காளியாக கௌசீகி எனும் பெயரோடு அவதரித்து அசுரர்களை வதைத்தாள். அதனாலேயே நிசும்பசூதனி என்றும் இத்தல அம்மன் அழைக்கப்படுகிறாள். பில்லி, சூனியம், தோஷம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல மண்ணை மிதித்தாலே போதும் தெளிவு பெறுவது நிச்சயம்.

Bruce Durling

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


திருச்சி, மதுரை, சேலம், கோயமுத்தூர், பாண்டிச்சேரி போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து மிக எளிதாக பேருந்துகள் மூலம் தஞ்சாவூர் நகருக்கு வரலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 63 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

சமயபுரம் மாரியம்மன்

சமயபுரம் மாரியம்மன்


சமயபுரம் மாரியம்மன் கோவில், தமிழகத்தின் முக்கிய சக்திவாய்ந்த தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கோவிலில் எப்போதும் பக்தர் நிறைந்திருப்பர். மாவிளக்கு வைத்தல், மொட்டையடித்தல், உடல் உறுப்புகள் உரு காணிக்கை செலுத்துதல் என்று பலவித பிரார்த்தனைகளைகள் இங்கே நிறைவேற்றப்படுகிறது. சமயபுரத்து மாரியம்மன் பேரருளும், பேரழகும் பொலிய வீற்றிருக்கும் மகாசக்தியாவாள். கைகூப்பி மனதில் நினைத்த கணத்திலேயே வரங்களை வாரிவழங்கும் அம்மனாக உள்ளார்.

TRYPPN

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


திருச்சி வழி செல்லும் பேருந்துகள் மூலம், சாலை வழியாக ஸ்ரீரங்கத்தை அடையலாம். சென்னை, கன்னியாக்குமரி, பெங்களூரு, கோயம்புத்தூர், மைசூர், தஞ்சாவூர், மதுரை என எப்பகுதியில் இருந்தும் ஏராளமான பேருந்து சேவைகள் உள்ளன. சென்னையிலிருந்து, சென்னை- கன்னியாக்குமரி தடத்தில் செல்லும் இரயில்கள் அனைத்தும் ஸ்ரீரங்கத்தில் நிற்கும்.

TRYPPN

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி


பிரம்மனின் கர்வத்தை அடக்குவதற்காக அவனுடைய ஐந்தாவது தலையைக் கொய்து எறிந்தார் ஈசன். பிரம்மனின் தலையைக் கொய்த பாவமும் சரஸ்வதியின் சாபமும் ஈசனைச் சேர்ந்தது. இத்தலத்தில்தான் புற்றுருவாக பார்வதி எழுந்தருளி பிரம்ம கபாலத்தை ஈசனிடமிருந்து பறித்து சாப நிவர்த்தி அளித்தாள். எளிமையான மக்களிடையே, அவர்களுக்குள் ஒருவளாக அங்காளம்மன் புற்றுக்கு பின்னால் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். ஒவ்வொரு அமாவாசையன்றும் பல லட்சம் பக்தர்கள் இங்கு கூடி வழிபடுவது வழக்கம். ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு இன்னும் பிரசிதிபெற்றது.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


அங்காளபரமேசுவரி அம்மன் கோவில், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட மேல்மலையனூரில் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து மாநில நெடுஞ்சாலை 4-யில் சிட்டம்பூண்டி, செஞ்சி, வளத்தி கடந்தால் மலையனூருக்கு அடுத்து அமைந்துள்ளது இத்தலம்.

வீரபாண்டி கௌமாரி

வீரபாண்டி கௌமாரி


தேனி மாவட்டத்தில் முல்லையாறு பாய்ந்தோடும் பகுதியான வீரபாண்டியில் வீற்றிருக்கிறாள், கௌமாரி அம்மன். ஒரு காலத்தில் மதுரையை ஆண்ட மன்னர் வீரபாண்டியனுக்கு இரு கண்களும் பாதிப்படைந்தன. அரசன் பார்வை பெறவேண்டி ஈசனை நோக்கி தவமிருந்தார். ஈசனும் புள்ளைநல்லூரில் கண்ணுடைய தேவி தவமிருக்கிறாள். அவளுக்காக கோவில் எழுப்பு'' என்று ஆணையிட்டார். மன்னனும் அதை ஏற்று கோவில் கட்டினார், கண் பார்வை பெற்றான். அmன்று முதல் வீரபாண்டி கௌமாரி என்ற பெயரைப் பெற்றுள்ளது இக்கோவில். இன்றும் பார்வைக் கோளாறு உள்ளவர்கள் இத்தலத்தை நோக்கி வந்து நலம் பெறுகிறார்கள்.

Lakshmichandrakanth

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


தேனி நகரம் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுடன் சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள நகரங்களிலிருந்து தேனிக்கு பேருந்துகள் வழியாக எளிதில் செல்ல முடியும். தமிழ் நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும், உள்ளூர் பயணத்திற்கும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன. தேனியிலிருந்து, தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Lakshmichandrakanth

நத்தம் மாரியம்மன்

நத்தம் மாரியம்மன்


மதுரை ஆட்சி செய்த சிற்றரசர்களில் ஒருவரான சொக்கலிங்க நாயக்கரின் அரச பீடத்தை அலங்கரித்த தெய்வமே நத்தம் மாரியம்மன். அரண்மனைக்கு பால் அளக்கும் ஒருவன், பக்கத்து சிற்றூரிலிருந்து குடத்தில் பால் கொணர்வான். பாலைக் கறந்து குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விட்டுத் திரும்பிப் பார்க்க பால் குடம் தானாக காலியாகி இருந்தது. இதனையறிந்த அரசன் அந்த இடத்தை தோண்டச் சொன்னார். அங்கே தெட்பட்ட அம்மனுக்கு கோவில் கட்டி வழிபாடும் நடைபெற்றது. அன்று முதல் இன்று வரை வேண்டிய வரத்தை கொட்டித் துர்ப்பவளாக இந்த அம்மன் திகழ்கிறாள்.

tnhrce

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


மாநிலத்தின் எந்த மூளையில் இருந்தும் மதுரையை எளிதில் அடையும் வகையில் போக்குவரத்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளான NH7, NH 45B, NH 49 மற்றும் NH 20 ஆகியவை மதுரை மாநகரை பல்வேறு திசைகளில் உள்ள நகரங்களுடன் இணைக்கின்றன. மதுரை ரயில் சந்திப்பு தென்னிந்தியாவில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும். மதுரை விமான நிலையம் நகரமையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

tnhrce

மதுரை மீனாட்சி

மதுரை மீனாட்சி


சக்தி பீடங்களில் முக்கியத் தலமான மதுரையின் ஆன்மிக அரசி, அன்னை மீனாட்சி. மீன் தன் கண்களால் பார்த்தே தன் முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கச் செய்யும். இதை ஞானிகள் மத்ஸ்ய தீட்சை என்றும் நயன தீட்சை என்று கூறுவர். அப்படிப்பட்ட தீட்சையை உடையதால் இந்த அன்னைக்கு மீனாட்சி என்று பெயர். மீனாட்சி அரசியாக இருப்பதால் அம்மனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகு தரிசிக்கலாம். ஆதிசங்கரர், மீனாட்சி பஞ்சரத்னம், மீனாட்சி அஷ்டக ஸ்தோத்திரம் பாடியிருக்கிறார். தன்னை தரிசிப்போரின் பிறவித் தளையை போக்கும் பேரரசி இவள்.

Surajram

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிலும், விமான நிலையத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது மீனாட்சி அம்மன் கோவில். மாநிலத்தில் எந்தப் பகுதியில் இருந்தும் இக்கோவிலுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Ashwin Kumar

கன்னியாகுமரி பகவதி அம்மன்

கன்னியாகுமரி பகவதி அம்மன்


கன்னியாகுமரி, வலக்கையில் ருத்ராட்ச மாலை கொண்டும் இடது கையை தொடை மீது வைத்தும் நின்றவாறு தவக்கோலத்தில் அருள்பவாலிக்கிறாள் பகவதி அம்மன். தலை கிரீடத்தில் பிறை சந்திரனும் மூக்கில் வைரமூக்குத்தியும் ஜொலிக்கும் காட்சி காணக் கோடி புன்னியம். பகன், முகன் எனும் அசுரர்களை அழித்த காளி, கொல்கத்தாவிலும், கன்னியாகுமரியிலும் நிலைபெற்று பாரதத்தின் இரு எல்லைகளையும் காப்பதாக தொன்நம்பிக்கை உள்ளது.

Parvathisri

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


கன்னியாகுமரி வந்தடைய இந்தியாவிலுள்ள பல பெருந்நகரங்களுடன் தேசிய நெடுஞ்சாலைகளின் இணைப்பு நன்றாக செயல்படுகின்றன. அதே போல் தெற்கிந்திய நகரங்களான மதுரை, திருவனந்தபுரம், ராமேஸ்வரம், திருச்செந்தூர், கொடைக்கானல், கோயம்புத்தூர், பழனி, கொச்சி, தேக்கடி, ஊட்டி, திருநேல்வெல்லி, நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் குற்றாலம் அகியவையுடன் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் பேருந்து அல்லது வாடகைக் கார் மூலம் இக்கோவிலை சென்றடையலாம்.

Kainjock

கோவை சௌடாம்பிகை அம்மன்

கோவை சௌடாம்பிகை அம்மன்


ஈசனின் ஆணைப்படி தேவலன் எனும் முனிவர் திருமாலை நோக்கி தவமிருந்தார். ஆனால், அசுரர்களோ அவரைத் தொந்தரவு செய்தவாறே இருந்தனர். அவர்களின் தொல்லையை திருமாலின் சக்ராயுதம் தடுத்தது. அதையும் தாண்டி ஒரு அம்பு தேவலனை துளைத்தது. அப்போதுதான் அம்பாள் சௌடாம்பிகை எனும் திருநாமத்தோடு எழுந்தருளி முனிவரைக் காத்தாள். உங்களது வாழ்நாளில் பிறறால் ஏற்படும் தீமைகளில் இருந்து காத்திட சௌடாம்பினை அம்மனை குடும்படுத்துடன் வழிபடுவது ஏற்றது.

Richard Mortel

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரத்தில் இருந்து சுக்கிரவார்பேட்டை செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. அங்கே ரங்கே கவுண்டர் வீதியில் அருள்பாலிக்கிறார் சௌடாம்பிகை அம்மன். தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் கோவையை அடைய எளிய முறையில் போக்குவரத்து வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

திருநறையூர் ஆகாசமாரி

திருநறையூர் ஆகாசமாரி


முன்னொரு காலத்தில் வளையல் வியாபாரிகள் சிலர் சமயபுரத்திற்கு வியாபாரம் செய்ய சென்றிருந்தனர். அப்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் வியாபாரி ஒருவரின் கனவில் தோன்றிய சமயபுர அம்மன் வளையல் அணிவிக்கச் சொன்னாள். அவரும் வளையல் அணிவிக்க முயன்று ஒவ்வொரு வளையலும் உடைந்தாவாறே இருந்துள்ளது. உடனே தூக்கத்தில் இருந்து எழுந்து பார்க்கையில் வியாபாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து வளையல்களும் உடைந்திருந்தது. ஒன்றுமே புரியாமல் குழம்பியிருந்தபோது, ஆகாயத்தில் காட்சி தந்த அம்மன் வெள்ளிக்கிழமை சமயபுரத்தில் அருள்பாலிக்கும் தனக்கு வளையல் அணிவித்து வழிபட அறிவுறுத்தினாள். அதன்படியே வியாபாரிகளும் செய்தனர். அன்று முதல் இன்று வரை ஆடி வெள்ளியன்று இத்தலம் வரும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வளையல்கள் வழங்கப்படுகிறது.

Nsmohan

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


கும்பகோணத்தில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது திருநறையூர். கும்பகோனத்தில் இருந்து கங்கை கொண்ட சோழபுரம், காட்டுமன்னார் கோவில், லால்பேட்டை வழியாக இத்தலத்தை அடையலாம்.

உளுந்தாண்டார்கோவில்

உளுந்தாண்டார்கோவில்


இலுப்பைக் காடான உளுந்தாண்டார்கோவில் தலத்தில் செங்குட்டுவ மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்கள் இந்த துர்க்கையை பிரதிஷ்டை செய்ததாக சான்றுகள் கூறுகின்றன. கோவிலின் யாக மண்டபத்தில், சதுரக் கல்லில் புடைப்புச் சிற்பமாக துர்க்கை அம்மன் கம்பீரத்தோடு காட்சி தருகிறாள்.

Richard Mortel

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் மாவட்டத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து தியாகதுர்கம் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் பயணித்தால் இக்கோவிலை அடையலாம். கள்ளக்குறிச்சியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும், விருதாச்சலத்தில் இருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலும் இத்தலம் உள்ளது.

TRYPPN

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X