சத்தீஸ்கர் மாநிலத்தின் பழமையான பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் அகழ்வுச்சான்றுகள் இங்கு நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வராய்ச்சிகளில் ஏராளமாக கிடைத்திருக்கின்றன. இயற்கை எழில் அம்சங்களை பொறுத்தவரை இம்மாநிலத்தில் இல்லாததே இல்லை எனும் அளவுக்கு அனைத்தும் நிரம்பியுள்ளன. காட்டுயிர்வளம், வனப்பகுதி, மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என்று இயற்கை ரசிகர்களை வசப்படுத்தும் சுற்றுலா அம்சங்களை இம்மாநிலம் தன்னுள் கொண்டிருக்கிறது. அவற்றைப் பற்றி இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.

நீர்வீழ்ச்சி
இங்குள்ள சில முக்கியமான நீர்வீழ்ச்சிகளாக சிதிரகொடே நீர்வீழ்ச்சி, திரத்கர் நீர்வீழ்ச்சி, தம்ரா கூமர் நீர்வீழ்ச்சி, மண்டவா நீர்வீழ்ச்சி, கங்கேர் தாரா, அகுரி நலா, கவர் காட் நீர்வீழ்ச்சி மற்றும் ராம்தாஹா நீர்வீழ்ச்சி போன்றவற்றை சொல்லலாம்.
Ksh85

பாரம்பரியம்
புராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய பின்னணி கொண்ட கோயில்கள் போன்றவற்றையும் சட்டிஸ்கர் மாநிலம் உள்ளடக்கியுள்ளது. அவ்வளவாக வெளியுலகிற்கு தெரியவராத பல்வேறு இடங்கள் இந்த மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகளுக்காக காத்திருக்கின்றன. மல்ஹார், ரத்தன்பூர், சிர்பூர் மற்றும் சர்குஜா போன்ற ஸ்தலங்கள் இங்கு முக்கியமான புராதன தொல்லியல் ஸ்தலங்களாக அமைந்திருக்கின்றன.
Pankaj Oudhia

அழகு நிறைந்த இயற்கை காட்சிகள்
இங்குள்ள பஸ்தார் ஸ்தலம் இயற்கை ரசிகர்கள் விரும்பக்கூடிய ஒரு அழகுப்பிரதேசமாகும். வெந்நீர் ஊற்றுகள் மற்றும் குகைகள் போன்ற சுவாரசியமான அம்சங்கள் இந்த ஸ்தலத்தில் காணக்கிடைக்கின்றன. இவை தவிர இம்மாநிலத்தில் காட்டுயிர் சரணாலயங்களும் அதிகம் அமைந்திருக்கின்றன.
ஜக்தல்பூரில் உள்ள இந்திரவதி தேசியப்பூங்கா மற்றும் கங்கேர்காடி தேசியப்பூங்கா, ராய்கரில் உள்ள கோமர்தா பாதுகாப்பு வனச்சரகம், பிலாஸ்பூரில் உள்ள பர்ணவபாரா காட்டுயிர் சரணாலயம் மற்றும் அசனக்மர் காட்டுயிர் சரணாலயம், தம்தரியில் உள்ள சீதாநதி காட்டுயிர் சரணாலயம் போன்றவை சட்டிஸ்கர் மாநிலத்திலுள்ள முக்கியான சரணாலயங்கள் மற்றும் இயற்கைப்பூங்காக்கள் ஆகும்.
Bdmshiva

காடும் குகையும் வழிபாட்டுத் தளங்களும்
மேலும், கொடும்ஸர் குகைகள், கடியா மலை, கைலாஷ் குகைகள் மற்றும் இதர குகை அமைப்புகள் போன்றவை புராதன சான்றுகள் மற்றும் ஆன்மிக யாத்திரை அம்சங்களுக்காக புகழ் பெற்றுள்ளன. காவர்தா எனும் இடத்திலுள்ள போரம்தேவ் கோயில், ராய்பூரிலுள்ள சம்பரண், ஜாங்கிர் சம்பா எனும் இடத்தில் உள்ள தமுதாரா, தண்டேவாடாவில் உள்ள தண்டேஷ்வர் கோயில், மஹாமயா கோயில் போன்றவை இம்மாநிலத்தில் உள்ள பிரசித்தமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்களாகும்.
Theasg sap

வழிபாட்டு ஸ்தலங்களுக்கு
வருடம் முழுக்க ஏராளமான பக்தர்கள் மற்றும் பயணிகள் இந்த வழிபாட்டு ஸ்தலங்களுக்கு பயணம் செய்கின்றனர். ஜக்தல்பூரில் உள்ல மானுடவியல் அருங்காட்சியகம் ஒன்றில் பஸ்தார் இனத்தாரின் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை விளக்கும் அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள பஸ்தார் அரண்மனை மற்றொரு முக்கியமான வரலாற்று கவர்ச்சி அம்சமாகும். இந்த ஜக்தல்பூர் அரண்மனை ஒரு காலத்தில் பஸ்தார் வம்சத்தின் ஆட்சிப்பீடமாக இருந்திருக்கிறது. தற்போது இது அரசாங்க பாதுகாப்பில் பராமரிக்கப்படுகிறது. இப்படி பல்வேறு சுற்றுலா அம்சங்கள் சத்தீஸ்கர் மாநிலம் முழுக்க நிரம்பியுள்ளன.
Ms Sarah Welch

பண்பாடு மற்றும் திருவிழாக்கள்!
ஹிந்தி பரவலாம இம்மாநிலத்தில் பேசப்பட்டாலும் சத்தீஸ்ஹர்ஹி எனும் ஹிந்தி துணை மொழியும் இங்கு வசிக்கும் கிராமப்பகுதி மக்களால் பேசப்படுகிறது. கோசாலி, ஒரியா மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளும் இம்மாநிலத்தில் பேசப்படுகின்றன. இம்மாநிலத்தின் பெண்கள் கிராமப்பகுதியினராக இருந்தபோதிலும் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களாகவும், வெளிப்படையான கருத்துப்பரிமாற்ற திறன் மிக்கவர்களாகவும் உள்ளனர். இங்குள்ள பல கோயில்களில் கூட பெண் தெய்வங்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
கிராமப்புற மக்களின் ஒரு பிரிவினர் மாயா மாந்தீரிகம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். பல்வேறு இனப்பிரிவுகளை சேர்ந்த மக்கள் இம்மாநிலத்தில் வசிக்கின்றனர். இங்குள்ள சம்பரண் எனும் இடம் வல்லபச்சாரியார் எனும் குரு அவதரித்த இடம் என்பதால் குஜராத்திகளிடையே பிரசித்தமடைந்துள்ளது.
ஒரிஸாவை ஒட்டி அமைந்துள்ளதால் அதனை ஒட்டிய எல்லைப்பகுதிகளில் இங்கு ஒரியா கலாச்சாரமும் சிறிதளவு கலந்துள்ளது. இம்மாநிலத்தில் தயாராகும் கோசா பட்டுப்புடவைகள் மற்றும் சல்வார் உடைகள் இந்தியா முழுமைக்கும் புகழ் பெற்றுள்ளன. பந்தி, ரவாத் நச்சா, கர்மா, பண்ட்வாணி, சைத்ரா, கக்சர் போன்ற நாட்டுப்புற நடன வடிவங்களை சத்தீஸ்கர் மாநிலம் பெற்றிருக்கிறது. நாடகக்கலை வடிவங்களிலும் இம்மாநில மக்கள் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக உள்ளனர்.
‘மத்திய இந்தியாவின் அரிசிக்கிண்ணம்' என்ற சிறப்புப்பெயருடன் அறியப்படும் இந்த மாநிலத்தின் சமையல் தயாரிப்புகளில் அரிசி மற்றும் அரிசி மாவு ஆகிய இரண்டும் முக்கியமாக இடம் பெறுகிறது. இம்மாநிலத்தில் தயாராகும் இனிப்புகள் மற்றும் கள் வகைகளும் தனித்தன்மையானதாக அறியப்படுகின்றன.
சத்தீஸ்கர் மாநிலத்தின் நகரச்சமூகம் பல்வேறு தொழில்துறை சார்ந்த செயல்பாடுகளின் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. மின்னுற்பத்தி, இரும்புத்தொழில், அலுமினியத்தொழில், கனிமத்தாது உற்பத்தி போன்ற துறைகள் இந்த மாநிலத்தின் வாழ்வாதாரங்களாக இயங்குகின்றன. கல்வித்துறையிலும் இம்மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பல்வேறு பிரசித்தமான கல்வி நிறுவனங்கள் இம்மாநிலம் முழுதும் விரவி அமைந்திருக்கின்றன.
Paalappoo