Search
  • Follow NativePlanet
Share
» »கலைஞர் பெயர் சொல்லும் கட்டாயம் காணவேண்டிய இடங்கள் இவை

கலைஞர் பெயர் சொல்லும் கட்டாயம் காணவேண்டிய இடங்கள் இவை

கலைஞர். ஐந்து முறை தமிழகத்தை ஆண்டவர் உடன் தமிழையும் சேர்த்தே ஆண்டார் என்றால் நிச்சயம் மிகையாகாது. கட்சி வேறுபாடு மறந்து அவரின் தமிழைக் கொண்டாட இங்கே ஒரு கூட்டம் நிச்சயம் இருக்கிறது. இவரின் நண்பர்கள் ப

By Udhaya

கலைஞர். ஐந்து முறை தமிழகத்தை ஆண்டவர் உடன் தமிழையும் சேர்த்தே ஆண்டார் என்றால் நிச்சயம் மிகையாகாது. கட்சி வேறுபாடு மறந்து அவரின் தமிழைக் கொண்டாட இங்கே ஒரு கூட்டம் நிச்சயம் இருக்கிறது. இவரின் நண்பர்கள் பட்டியலைத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு தலையே சுற்றி விடும் அந்த அளவுக்கு நண்பர்கள் பட்டாளத்தை கொண்டவர் கலைஞர். அவர் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் இந்த இடங்கள் இன்னும் நூறு வருடங்களானாலும் அவரின் பெயரை சொல்லும். அவை எந்தெந்த இடங்கள் தெரியுமா?

சென்னை செம்மொழி பூங்கா

சென்னை செம்மொழி பூங்கா

சென்னை மாநகரின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா 2010ம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதை கொண்டு வந்தவர் கருணாநிதி.

தமிழின் செம்மொழி தகுதியை உலகறியச் செய்ததுபோல செம்மொழி பூங்காவும் சென்னைக்கு வருகை தரும் ஒவ்வொருவருக்கும் தமிழகத்தின் பெருமையை நினைவு கூறச் செய்யும்.

அது மட்டுமா இதைத் தந்த கலைஞரின் நினைவையும் நாம் கூர்ந்துகொள்ள வேண்டுமே.

Balajijagadesh

 அமைப்பு

அமைப்பு

இந்த பூங்கா தென்னிந்தியாவுக்கே புதிதான செங்குத்து தோட்டத்தை நுழைவாகக் கொண்டுள்ளது. சிங்கோனியம், பிலோடென்ரான், மணிபிளான்ட், பெரணி என முப்பது விதமான அழகிய தாவங்களைக் கொண்டு இந்த தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இருபுறமும் இந்தியாவுக்கே புதியதான கொரிய புல் தோட்டம் இருக்கும். ரோஜா, மல்லிகை, செண்பகம், பாரிஜாதம், பவளமல்லிகளை போன்ற வாசனை மிக்க மலர்களைத் தரும் தாவரங்கள், துளசி, வசம்பு, குப்பை மேனி, இன்சுலின் செடிகள் முதலிய மூலிகைகள், ஆல், அரசு, மா, மாதுளை, கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, எலுமிச்சை போன்ற போன்சாய் மரங்களாக வளர்க்கப்பட்ட மரங்கள், மஞ்சள் பூங்கா, மூங்கில் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா என நீங்கள் பார்ப்பதற்கு அத்தனை விசயங்கள் அடங்கியிருக்கின்றன. இதெல்லாம் தமிழின் பெருமையை சொல்லும் கலைஞரை நினைவுகூரச் செய்யும் இடமாக இந்த பூங்காவை மாற்றியுள்ளது.

Eashchand

 அண்ணா மேம்பாலம்

அண்ணா மேம்பாலம்

சென்னையில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இந்த அண்ணா மேம்பாலத்தை தெரிந்திருக்கும். ஆனால் இதன் பெருமைகளை தெரிந்து வைத்திருப்பவர்கள் குறைவானவர்களே. இது கலைஞர் கருணாநிதியால் 1973ம் ஆண்டு கட்டப்பட்டது. அவரது பாசமிகு உடன்பிறவா சகோதரர் அண்ணாவின் பெயரிலேயே இது அழைக்கப்படுகிறது. இங்கு ஜெமினி ஸ்டுடியோ அமைந்திருக்கிறது. இதனால் இந்த இடம் ஜெமினி சர்க்கிள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் செல்லும் போதும் நிச்சயம் கலைஞரை நினைவு கூர வேண்டும்.

 பெருமைகள்

பெருமைகள்


சென்னையில் அமைக்கப்பட்ட முதல் மேம்பாலம் இது

இந்தியாவின் மூன்றாவது மேம்பாலம் இது

இந்தியாவின் மிக நீளமான பாலமாக இது கட்டப்பட்டது.

ஆசியாவின் முதல் சாலை பிரிப்பு மேம்பாலம் இது

இது 1973ல் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது.

Balasubramanian G Velu

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (மருத்துவமனையாக மாற்றப்பட்டது)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (மருத்துவமனையாக மாற்றப்பட்டது)

புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து நடைபெற்று வந்த சட்டமன்றத்துக்கு புதியதாக ஒரு கட்டுமானத்தை கட்டி, அதில் இடம்பெயரச் செய்தார் கலைஞர்.

80 ஆயிரம் சதுர அடி அலுவலகப் பரப்பளவு கொண்ட இந்த கட்டிடம் 425 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த வளாகத்தில் 2000 இருக்கைகளும் 500 வாகனங்கள் நிறுத்தும் வசதியும் செய்யப்பட்டது. ஆனால் பின்னாளில் இது பல்தொழில்நுட்ப மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

12afser12

 வள்ளுவர் கோட்டம்

வள்ளுவர் கோட்டம்

தமிழின் ஒட்டுமொத்த பெருமையையும் உலகறியச் செய்தவர்களுள் மூத்தவராகிய திருவள்ளுவருக்கு நினைவுச் சின்னம் அமைக்க 1970 களிலேயே திட்டமிட்டவர் கலைஞர். அவரது திட்டத்தால் வள்ளுவர் கோட்டம் சென்னை கோடம்பாக்கம் அருகே 1973ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

திருவாரூர் கோயில் தேரின் வடிவில் அமைக்கப்பட்ட இந்த வள்ளுவர் கோட்ட சிற்பத் தேர் மிகச் சிறப்பானதாகும்.

wiki

அமைப்பு

அமைப்பு


7.5க்கு 7.5 மீ அளவில் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட இந்த தேரை இரு யானைகள் இழுப்பது போன்ற வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. 128 அடி உயரம் கொண்டது. இருபக்கத்திலும் நான்கு சக்கரங்கள் அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன.

தேரில் வள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. திருக்குறள் கருத்துகளை பிரதிபலிக்கும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.

Mayooranathan

அரங்கம்

அரங்கம்

220 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்ட இந்த அரங்கம் 4000 மக்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 20 அடி தாழ்வாரங்கள் இரண்டு வெளிப்புறத்திலும் அமைந்துள்ளது. திருக்குறளில் இருக்கும் 1330 குறள்களையும் செதுக்கி கற்பலகைகளை பார்வைக்கு வைத்துள்ளனர்.

இன்னும் எத்தனையோ இடங்கள் கலைஞரின் எண்ணத்தில் உருவானவை. அவற்றின் சுற்றுலா அம்சங்களைக் குறித்து தெரிந்திருந்தால் கமண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

Mayooranathan

பூம்புகார்

பூம்புகார்


தமிழர்களின் நாகரிக சிறப்பின் அடையாளமாக விளங்கிய பூம்புகார் பல்வேறு கடற்கோள்களால் அழிந்து போனது.

பூம்புகாரின் மாதிரியைக் கொண்டு முடிந்த வரை சிறப்பான ஒரு நகரத்தை உருவாக்கும் முயற்சியில் கலைஞர் கருணாநிதி அரசு இறங்கியது.


அதன்படி, 1973-ல் தற்போதைய பூம்புகாரில் பழந்தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டை யும் விளக்கும் நினைவுச் சின்னங்களை உரு வாக்கினார். எழு நிலை மாடம், நெடுங்கல் மன்றம், மகர தோரணவாயில், இலஞ்சி மன்றம், கொற்றப்பந்தல், பாவை மன்றம் என இலக்கி யங்கள் காட்டும் பூம்புகாரை கண் முன் கொண்டுவந்தனர் பூம்புகாரை உருவாக்கிய குழுவினர்.

பண்பாட்டு- நாகரிகச் சின்னமாக பூம்புகார் கலைக் கூடம் விளங்குகிறது. கலைஞரின் பெருமுயற்சி, இன்றைய தலை முறையினருக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் நாகரிகத்தைப் புரிய வைக்கிறது.

Destination8infinity

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை

1990ம் ஆண்டு திட்டமிடப்பட்டு பத்து வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டது கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலை.

கலைஞர் அவர்களால் திறக்கப்பட்ட இந்த திருவள்ளுவர் சிலை, 133 அடி உயரம் கொண்டது. இதனுள் 130 அடி வரை வெற்றிடமே உள்ளது.

பீடத்தின் உயரம் 38 அடி அறத்துப்பாலையும், 95 அடி சிலை மீதி இரண்டு பாலையும் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.செந்தில் குமார்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X