Search
  • Follow NativePlanet
Share
» »இப்போது தமிழகத்தின் இந்த முனை எப்படி இருக்கு தெரியுமா?

இப்போது தமிழகத்தின் இந்த முனை எப்படி இருக்கு தெரியுமா?

கஜா புயலை அவ்வளவு எளிதாக நாம் கடந்துவிடமுடியாது. அது விட்டுச் சென்ற பாதிப்புகள் மிக அதிகம். பலரின் மகிழ்ச்சியை கொண்டு சென்றுவிட்டது என்றால் மிகை இல்லை. அதிலும் முக்கியமாக பாதிக்கப்பட்ட வேளாங்கன்னி அருகிலுள்ள இந்த முனை கோடியக் கரை என்று அழைக்கப்படுகிறது. அந்த இடத்தின் சிறப்புகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

கோடியக்கரையானது கோரமண்டல் கடற்கரையோரம் உள்ள கடலை ஊடுறுவிச் செல்லும் தாழ்வான நிலப்பகுதி. வேதாரண்யம் அருகில் அமைந்திருக்கும் கோடியக்கரையில் காணப்படும் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் மிகவும் புகழ்பெற்றவையாகும். வாருங்கள் அதன் பெருமைகளை காண்போம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

 எங்கே உள்ளது

எங்கே உள்ளது

தமிழகத்தின் இந்த முனையானது நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகில் அமைந்துள்ளது. இது தமிழக கடலோரப்பகுதிகளின் நடுமையம் ஆகும். சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பரவி இருக்கும் கடற்கரையின் நடுவில் அமைந்துள்ளது.

PlaneMad

 வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள்

வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள்

கோடியக்கரைக்கு வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் என்று பெயர். இவ்வகை காடுகளில் இவையே கடைசியானதும் இறுதியாக எஞ்சியிருப்பதும் ஆகும்.

Wiki

 சரணாலயங்கள்

சரணாலயங்கள்

கோடியக்கரை வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் இங்கு அமைந்துள்ளது. இந்தியன் பிளாக் பக் , கரண்டி போன்ற அலகுடைய நாரைகள், பூநாரைகள், கிரேட்டர் ஃபிளமிங்கோ எனப்படும் கொக்கு வகைகள் போன்றவை இங்கு காணப்படுகின்றன.

Marcus334

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடம்

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடம்

பலவகையான சமய மற்றும் வரலாற்று தொடர்புடைய இடங்கள் இந்த சரணாலயத்தில் அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை இங்கு அதிகளவில் காணலாம். மேலும் வேதாரண்யம், கடலூர் பகுதியிலிருந்து அதிக அளவில் மக்கள் வருவர்.

PJeganathan

 அமைப்பு

அமைப்பு

இந்த காடுகள் 21.47 சகிமீ அளவு கொண்ட தமிழக அரசுக்குட்பட்ட பாதுகாப்பு காடுகள் வகையைச் சார்ந்தது. இங்கு வாழும் கடல் மற்றும் காடு வாழ் உயிரிகளை பாதுகாக்கவும் அவற்றின் அழிவைத் தடுக்கவும் இது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. 7 சகிமீ அளவுக்குள்ள இதன் ஒரு பகுதி தேசியப் பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளது.

PJeganathan

அமைவிட பெருமை

அமைவிட பெருமை

இந்த இடத்துக்கு புவியியல் ரீதியாக ஒரு பெருமை இருக்கிறது. இது வங்காள விரிகுடா கடலும், பாக் ஜலசந்தி கடலும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. ஏற்கனவே சொன்னதுபோல இது தமிழ்நாட்டின் நடு கடற்கரைப் பகுதி ஆகும்.

Marcus334

அழகிய கடற்கரை

அழகிய கடற்கரை

இந்த கோடியக்கரை கடல் பகுதி மற்ற இடங்களைவிட அழகாக தெரிவதற்கு மிக முக்கிய காரணம் இதன் கடற்கரை அமைவிடம்தான். 90 டிகிரி கோணத்தில் அழகாக காட்சி தரும் இந்த கடற்கரையை ரசிக்காதவர்கள் குறைவு.

Marcus334

உலகின் அதிவேகமாக ஓடும் மான்

உலகின் அதிவேகமாக ஓடும் மான்

உலகிலேயே மிக அதிக வேகத்தில் ஓடும் மான் இனமான வெளிமான் இங்குதான் காணப்படுகிறது. பிளாக்பக் எனப்படும் மான் வகைகள் மற்ற இடங்களிலும் காணப்படுகிறது என்றாலும், பரவலாக இங்கு அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பூங்கா ஆரம்பிக்கும்போது 600 எண்ணிக்கையில் இருந்த மான்கள், இப்போது 1500 வரை இருப்பதாக தெரிகிறது.

Rajesh mpt

 மற்ற விலங்குகள்

மற்ற விலங்குகள்

இங்கு புள்ளிமான்கள், ஜேக்கல், குரங்கு வகை, காட்டுப்பன்றி, சின்ன மூக்கு பழ வவ்வால் உள்ளிட்ட பல விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.

இங்கு சகதிகள், காய்ந்த நிலங்கள், புல்வெளிகள் என அனைத்து வகை நிலங்களும் கலந்து காணப்படுகின்றன.

SWARNA

 இங்கு காணப்படும் இடங்கள்

இங்கு காணப்படும் இடங்கள்

ராமர் பாதம், நவகோடி சித்தர் ஆலயம், சன்னியாசி முனீஸ்வரர் கோவில், மாட்டுமுனியன் கோவில், அவுலைகன்னி தர்க்கா, சேர்வராயன் கோவில், சோழா கலங்கரை விளக்கம், பிரிட்டிஷ் கலங்கரை விளக்கம், கோடியக்கரை கலங்கரை விளக்கம் ஆகியவை இங்கு காணவேண்டிய இடங்களாகும்.

Manojz Kumar

ராமர் பாதம் கோவில்

ராமர் பாதம் கோவில்

ராமர் இங்கு வந்ததாகவும் அவரின் பாதம் இங்கு பதிந்திருப்பதாகவும் ஒரு கோவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது மக்களின் நம்பிக்கை. இங்கு ராமர் வந்தார் என்பதற்கும், தடம் பதித்தார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், இந்த வழியாகவே ராமேஸ்வரத்துக்கு ராமர் சென்றார் என்று நம்பப்படுகிறது.

Arunankapilan

சோழா கலங்கரை விளக்கம்

சோழா கலங்கரை விளக்கம்

சோழர்களால் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் ஒன்று இங்கு அமைந்துள்ளது. 2004 சுனாமி வந்தபோது இது சிதைந்தது என்றாலும், வரலாற்று சின்னமாதலால் இங்கும் மக்கள் வருகை தந்து சுற்றுலாவை கொண்டாடுகிறார்கள்.

Arunankapilan

பறவைகள் காணுதல்

பறவைகள் காணுதல்

இங்கு சுற்றுலா வரும் பயணிகள் செய்யவேண்டிய முக்கியமான பணி யாதெனில் பறவைகளைக் காணுதல்தான்.

பறவைக் காதலர்கள், புகைப்பட பிரியர்கள் இயற்கை ஆர்வலர்கள், காட்டுயிர் வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்படுபவர்கள் என எல்லாரும் வந்து செல்லவேண்டிய இடம் இதுவாகும்.

Marcus334

Read more about: travel beach travel news
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more