Search
  • Follow NativePlanet
Share
» »வெறும் ரூ.5,000 இருந்தால் போதும் – புதுச்சேரி to தேக்கடி சூப்பரா சுற்றுலா செல்லலாம்!

வெறும் ரூ.5,000 இருந்தால் போதும் – புதுச்சேரி to தேக்கடி சூப்பரா சுற்றுலா செல்லலாம்!

எப்பொழுதும் வேலை செய்து போர் அடித்து விட்டதா, சின்னதா, ஆனா கம்மி பட்ஜெட்டில் ஒரு குட்டி ட்ரிப் போயிட்டு வந்தா நல்லா இருக்குமென்று தோன்றுகிறதா. இதோ உங்களுக்காகவே புதுச்சேரியில் இருந்து தேக்கடிக்கு வெறும் ரூ.5,000 இல் எப்படி சூப்பரா சுற்றுலா செல்வது என்று நாங்கள் பிளான் கொடுத்துள்ளோம்! இதில் பேருந்து பயணம், உணவு, தங்குமிடம், சுற்றிப்பார்ப்பது போன்ற அனைத்து செலவுகளும் அடங்கும்!

புதுச்சேரி to தேக்கடி பட்ஜெட் சுற்றுலா

அலுவலகத்தில் விடுப்பு ஏதும் சொல்லாமல் உங்களுக்கு விடுமுறையாக வழங்கப்படும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த பட்ஜெட் ட்ரிப்பை நீங்கள் பிளான் பண்ணலாம். குறிப்பாக இந்த சுற்றுலா செல்ல நீங்கள் உங்கள் நண்பர்கள் குழுவை ஒன்று திரட்ட வேண்டும். நீங்கள் குழுவாக 6 அல்லது 7 பேர் சென்றால் செலவை நீங்கள் இன்னமும் கூட மிச்சம் பண்ணலாம் தெரியுமா.

thekkady

புதுச்சேரியிலிருந்து பேருந்து பயணம்

புதுச்சேரியிலிருந்து கம்பத்திற்கும், தேக்கடிக்கும் தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் PKR மற்றும் வெற்றி டிராவல்ஸ் வழக்கமாக செயல்படும் பேருந்துகளாகம். நீங்கள் இந்த பேருந்து டிக்கெட்களை முன்கூட்டியே கூட புக் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. புதுவை பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் இந்த டிராவல்ஸ்களுக்கு உங்கள் ட்ரிப் ஆரம்பிப்பதற்கு 2 நாட்கள் முன்னதாக சென்று நீங்கள் டிக்கெட் புக் செய்தால் குறைந்த கட்டணத்தை பெறுவீர்கள். இதே பேருந்துகளில் நீங்கள் ட்ரிப் முடித்துவிட்டு வீடு திரும்பலாம். புதுச்சேரியிலிருந்து தேக்கடி செல்ல நீங்கள் ஒரு நபருக்கு ரூ.1000 செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ள வேண்டும்

தேக்கடியில் பட்ஜெட் தங்குமிடம்

தேக்கடி மற்றும் குமுளியில் ஏராளமான பட்ஜெட் பிரண்ட்லி ஹோட்டல்களும், ஹோம்ஸ்டேகளும் உள்ளன. அவற்றில் அனீஸ் ஹோம்ஸ்டே, பென் காட்டேஜ், PKN ஹோம்ஸ்டே, கிரீன்லீப் ஹோம்ஸ்டே, சம்மர் காட்டேஜ் உள்ளிட்டவை மிகவும் மலிவான மற்றும் பாதுகாப்பான ஹோம்ஸ்டேகள் ஆகும். ஹோம்ஸ்டே என்றால் அந்த முழு வீடுமே உங்களுக்கு சொந்தமாக இருக்கும். அவற்றில் அறைகள் மற்றும் ஹால், கிட்சன் அனைத்தும் நீங்கள் உபயோகிக்கலாம். இவற்றில் சதாரணமாக ஒரு நாளைக்கு ரூ.4000 முதல் 5000 வரை கிடைக்கிறது. இவற்றை நீங்கள் இரண்டு நாட்களுக்கு எடுக்கும் போது ரூம் வாடகை ஒரு நபருக்கு ரூ.1500 க்கும் குறைவாக வருகிறது.

thekkady

முதல் நாள் சுற்றுலா

நீங்கள் வெள்ளி இரவு புதுச்சேரியில் இருந்து தேக்கடி பயணம் தொடங்குவீர்கள், அதிகாலை 5 மணியளவில் நீங்கள் குமுளியை அடைவீர்கள், அங்கிருந்து ஹோம்ஸ்டே சென்று நீங்கள் இளைப்பாறி தயார் ஆக வேண்டும். அதற்கு முன்னதாக நீங்கள் சென்று வருவதற்கு ஜீப் ஒன்றை புக் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் கூகிளில் கூட தேடலாம், அல்லது நீங்கள் தங்கி இருக்கும் அறை அருகில் இருக்கும் ஜீப்களை கூட அணுகலாம். முதல் நாளில் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்:

1. யானை முகாம் - யானை மீது சவாரி, யானையை குளிப்பாற்றுதல், போட்டோ மற்றும் வீடியோ எடுத்தல்

2. பெரியார் புலிகள் சரணாலயம் - படகு சவாரி, விலங்குகளை கண்டு ரசிப்பது

3. மதிய உணவு மற்றும் இளைப்பாறுதல்

4. மாலை சரியாக 6 மணிக்கு கதக்களி நிகழ்ச்சி காணுதல்

5. 7 மணிக்கு களரி நிகழ்ச்சி காணுதல்

6. இரவு உணவுக்கு பிறகு ஹோம்ஸ்டே

இரண்டாம் நாள் சுற்றுலா

1. இரண்டாவது நாள் அதிகாலையிலேயே நீங்கள் கிளம்பி ஜீப் ரைடு செல்ல வேண்டும்.

2. நதிக்கு நடுவே ஒரு சைட்சீயிங்

3. கரடு முரடான இடங்களில் ஜீப் சவாரி

4. ஜீப்பில் தேக்கடியின் உயரமான இடத்திற்கு மலையேற்றம்

5. காலை உணவு

6. மசாலா கார்டன் சுற்றிப்பார்த்தல்

7. மதிய உணவு

8. திராட்சை தோட்டம் சுற்றிப்பார்த்தல்

9. மசாலா பொருட்கள், சாக்லேட், சிப்ஸ் உள்ளிட்ட பொருட்கள் ஷாப்பிங்கிற்கு பிறகு ஹோம்ஸ்டே

10. 8.15 மணிக்கு தேக்கடி to புதுச்சேரி பயணம்

ஜீப் சவாரி செல்வதற்கும் உணவுக்கும் சேர்த்து ஒரு ஆளுக்கு ரூ.3000 க்கு மேல் கண்டிப்பாக தாண்டாது. நீங்கள் மேலே கூறியவற்றை அப்படியே செய்தால் வெறும் ரூ.5000 இல் தேக்கடிக்கு ஒரு சூப்பர் சுற்றுலா சென்று வரலாம்!

More News

    Read more about: thekkady pondicherry
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+