Search
  • Follow NativePlanet
Share
» »காளகஸ்தியில் கோடி கோடியாய் நகைகள்! மரக் கதவின் பின் ஒளிந்துள்ள மர்மம்!

காளகஸ்தியில் கோடி கோடியாய் நகைகள்! மரக் கதவின் பின் ஒளிந்துள்ள மர்மம்!

காளகஸ்தியில் கோடி கோடியாய் நகைகள்! மரக் கதவின் பின் ஒளிந்துள்ள மர்மம்!

By Udhay

காளகஸ்தி கோவில் ஒன்றில் புணரமைப்பு பணிகளின் போது கண்டறியப்பட்ட கோடிக்கணக்கான நகைகள் இன்றளவும் மர்மமாக இருக்கிறது. இது அந்த கால ராஜாக்களின் பொக்கிஷங்களாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பொக்கிஷங்கள் இருக்கும் காளகஸ்தி கோவிலுக்கு சென்று வரலாம் வாருங்கள்.

 எந்த கோவில்

எந்த கோவில்

காளஹஸ்தி என்றவுடன் காளஹஸ்தீஸ்வரர் கோவில் என்று கருதுவதற்கு வாய்ப்புண்டு. நாம் குறிப்பிட்ட இந்த கோவில் காளஹஸ்தி கோவிலுடன் சேர்ந்ததுதான் என்றாலும், அதற்கு தனி பெயர் இருக்கிறது. அதுதான் பிரசன்ன வரதராஜா சுவாமி கோவில்.

రవిచంద్ర

 தென்னிந்தியாவின் பிரபலமான கோவில்

தென்னிந்தியாவின் பிரபலமான கோவில்

இந்த பிரசன்ன வரதராஜா சுவாமி கோவில் தென்னிந்தியாவில் மிகப் பிரபலமானதாகும். மிகப் பழமையான கோவில் என்ற புகழையும் இந்த கோவில் பெற்றுள்ளது. இது காளஹஸ்தீஸ்வரர் கோவிலின் ஒரு அங்கம் ஆகும்.

Rajachandraa

 கோவிலின் சிறப்புகள்

கோவிலின் சிறப்புகள்

சென்னையிலிருந்து தடா வழியாக திருப்பதி செல்லும்போது, இந்த கோவிலுக்கும் செல்லமுடியும். காளஹஸ்தி எனும் இடத்தில் இருக்கும் இந்த கோவில் வரதராஜ சுவாமி கோவில் ஆகும்.

ஆன்மீகத்தை உணரும் மக்கள் இந்த கோவிலில் மிக அமைதியாக உணருவார்கள். நல்ல மன நிலையுடன் இந்த கோவிலுக்கு சென்று திரும்பி வரலாம்.

நடைதிறப்பு பூசைகள் விவரம்

நடைதிறப்பு பூசைகள் விவரம்


காலை 6 மணிக்கு திறக்கும் நடை இரவு 9 மணி வரை திறந்திருக்கும். இந்த கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வரும் நாட்கள் சனிக்கிழமை.

அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் வாகனங்களில் செல்வோருக்கு பார்க்கிங் பிரச்சனைகள் எழுவதாக சிலர் கூறியுள்ளனர்.

Tarunlesnar

 மரக்கதவின் பின்புறத்தில்

மரக்கதவின் பின்புறத்தில்

சமீபத்தில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றபோது இந்த கோயில் அனைவரது கவனத்தையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதாவது புதுப்பிப்பு பணிகள் நடைபெற்றபோது இங்கிருந்த ஒரு அறையில் ஒரு பெரிய மரக்கதவு கண்டறிப்பட்டது. இந்த கதவைத்திறந்து பார்த்தபோது அங்கு என்ன இருந்தன தெரியுமா?

Santhoshlife91

கோடி கோடியாய் நகைகள்

கோடி கோடியாய் நகைகள்


உள்ளிருந்த இருட்டறைக்குள் பல விலை மதிக்கமுடியாத அரும்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இப்படி புதையல் கண்டெடுக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போன்று பரவவே பொக்கிஷங்களை பார்க்கும் ஆர்வத்தில் பக்தர்கள் கோயிலை முற்றுகை இட்டனர். இருப்பினும் புதையலைப்பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

రవిచంద్ర

என்ன ஆச்சு தெரியவில்லை

என்ன ஆச்சு தெரியவில்லை

இப்போது அந்த புதையல் அங்குதான் இருக்கிறதா இல்லை அந்த புதையலுக்கு என்னதான் ஆச்சு என்பன போன்ற தகவல்கள் தெரியவில்லை. அதிகம் பொக்கிஷங்கள் அரசு கருவூலத்துக்கு சென்றிருக்கவேண்டும். ஆனால் இது போன்ற கோவில்களில் இருக்கும் நகைகள், பொக்கிஷங்களை அரசு எடுப்பதற்கு பெருமளவில் எதிர்ப்பு இருக்கிறது.

రవిచంద్ర

 காளஹஸ்தீஸ்வரர் கோவில்

காளஹஸ்தீஸ்வரர் கோவில்

ஸ்ரீ காளஹஸ்தி நகரத்தில் உள்ள இந்த காளஹஸ்தீஸ்வரர் கோயில் முக்கியமான சைவத்திருத்தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு பரிகாரத்துக்காக பலர் வந்து செல்கின்றனர்.

Balaji101mails

காளஹஸ்தீஸ்வரர்

காளஹஸ்தீஸ்வரர்

திருப்பதியிலிருந்து 36 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும் இந்த கோயில் ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றாகிய ‘வாயு'விற்காக எழுப்பப்பட்டுள்ள லிங்கத்தை கொண்டுள்ளது. இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் சிவனின் வடிவமாக காளஹஸ்தீஸ்வரர் என்ற பெயரில் வணங்கப்படுகிறது.

Balaji101mails

கண்ணப்பரின் அருமை

கண்ணப்பரின் அருமை


புராணக்கதைகளின்படிகண்ணையே அர்ப்பணித்ததாக சொல்லப்படுகிறது. அதாவது இவரது பக்தியை சோதிக்க விரும்பிய சிவனின் பரிட்சையில் இவரது மூர்க்கமான பக்தி நிரூபிக்கப்பட்டதாக இந்த கதை விளக்குகிறது. பின்னர் சிவபெருமான் கண்ணப்பர் முன் பிரத்யட்சமாகி அருளியதாகவும் புராணம் கூறுகிறது.

Polandfrighter

 கட்டிட அமைப்பு

கட்டிட அமைப்பு

இந்த கோயில் இரண்டு அங்கங்களை கொண்டுள்ளது. இதன் உட்புறம் 5ம் நூற்றாண்டிலும், வெளிப்புற அமைப்பு 12ம் நூற்றாண்டிலும் கட்டப்பட்டுள்ளது. நாம் வெளிப்புறத்தில் காணும் எல்லா அமைப்புகளும் சோழ மன்னர்கள் காலத்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழர்களால் கட்டுவிக்கப்பட்டதாகும். எனவே இந்த கோயிலின் கோபுரத்தோற்றம் மற்றும் இதர கட்டமைப்புகள் சோழர்கால கோயிற்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கின்றன.

McKay Savage

 ராகு கேது தோஷம் போக்க

ராகு கேது தோஷம் போக்க


சிவபெருமானை வழிபடுவதற்காக மட்டுமல்லாமல், ராகு மற்றும் கேது தொடர்புடைய ஜாதக தோஷ நிவர்த்திக்காகவும் இங்கு பக்தர்கள் விசேஷ பூஜைகள் செய்ய வருகை தருகின்றனர். பெரும்பாலும் திருப்பதிக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் அனைவருமே காளஹஸ்திக்கும் விஜயம் செய்து இந்த காளஹஸ்தீஸ்வரரை வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

రవిచంద్ర

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X