Search
  • Follow NativePlanet
Share
» » புதுச்சேரி ரயில் நிலையத்தில் அறிமுகபடுத்தப்படும் வாடகை மின்சார பைக்குகள் – சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

புதுச்சேரி ரயில் நிலையத்தில் அறிமுகபடுத்தப்படும் வாடகை மின்சார பைக்குகள் – சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

நம் எல்லோருக்கும் மிகவும் பிடித்த சுற்றுலாப் தலம், சென்னைக்கு மிக அருகில் இருக்கும் அழகிய வார இறுதி சுற்றுலாத் தலம், மினி கோவா என்றெல்லாம் அழைக்கப்படும் துடிப்பான புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் புதுவை ரயில் நிலையத்தில் வாடகை மின்சார பைக்குகள் சேவை தொடங்கப்படவுள்ளது. விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் இந்த இ-பைக் சேவையை புதுச்சேரி மக்களும் சுற்றுலாப் பயணிகளும் வரவேற்றுள்ளனர்.

tourists using e-bikes

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் இ-பைக்குகள்

இ-பைக்குகள் (Electronic Bikes) உலகம் முழுவதும் பிரபலமாகி வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் அருகிலுள்ள இடங்களுக்கு தங்கள் போக்குவரத்து முறையாக இதைப் பயன்படுத்துகின்றனர். இப்போது புதுச்சேரி மக்கள் விரைவில் இந்த இ-பைக்குகளை வாடகைக்கு எடுத்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியும். திருச்சி ரயில் நிலையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இ-பைக் வாடகை வசதி விரைவில் பல ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.

e-bike rentals in Puducherry, Puducherry

திருச்சியில் முதலில் துவங்கப்பட்ட சேவை

திருச்சி ரயில் நிலையம் இந்த இ-பைக் வாடகை வசதியை டிசம்பர் 2021 இல் தொடங்கியது, அது அன்றிலிருந்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்போது திருச்சி ரயில்வே கோட்டம் ஒரு நிறுவனத்துடன் இணைந்து புதுச்சேரி ரயில் நிலையத்தில் அடுத்த இரண்டு மாதங்களில் இ-பைக்குகளை அறிமுகப்படுத்த உள்ளது. மற்ற ரயில் நிலையங்களிலும் இ-பைக் வாடகை வசதிகளைத் தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.

bikerentalsinpuducherrypuducherry

இ-பைக் சேவையை பெரிதும் வரவேற்கும் மக்கள்

பத்து நாட்களுக்கு ஒருமுறை திருச்சிக்கு வருகை தரும் தனியார் நிறுவனத்தின் விற்பனை அதிகாரி ஒருவர், "இ-பைக் வாடகை வசதி எனக்கு நல்ல பணத்தை மிச்சப்படுத்த உதவியது. நான் நாள் முழுவதும் எனது வாடிக்கையாளர்களைச் சந்திக்க வேண்டும், நான் ஆட்டோரிக்ஷாவில் சென்றால், ஒரு நாளைக்கு சுமார் 1,250 ரூபாய் செலவழிக்க வேண்டும், ஆனால் இ-பைக் வாடகை வசதியுடன், எனது செலவு 500 ரூபாயாக குறைந்துள்ளது" என்றார். இந்த சேவையை மேலும் பல ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தினால், பயணிகள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் அவர்கூறினார்.

bikerentalsinpuducherrypuducherry

புதுவையில் விரைவில் இ-பைக்குகள்

பாண்டிச்சேரி ரயில் நிலையத்திற்கு இந்த இ-பைக்குகளை அவுட்சோர்ஸ் செய்ய ஒரு தனியார் நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளதாக ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் பகிர்ந்து கொண்டார். இந்த வசதிகள் மிக விரைவில், அனேகமாக அடுத்த சில மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி ரயில் நிலையத்தில் இ-பைக் வாடகை சேவைகள் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தினமும் ஏராளமானோர் பயன்படுத்துவதால், புதுச்சேரி ரயில் நிலையத்திலும் இ-பைக்குகளை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

bikerentalsinpuducherrypuducherry

அடுத்தடுத்து பல ஊர்களில் இந்த சேவை

இ-பைக் வாடகை வசதிகளை கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் போன்ற மற்ற ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரி மேலும் தெரிவித்தார். மற்ற நிலையங்களிலும் உள்ள பல ஆபரேட்டர்களுடன் இணைக்க அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

bikerentalsinpuducherrypuducherry

சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் இ-பைக் சேவை

திருச்சி ரயில் நிலையத்திற்கு வரும்போது, ஒவ்வொரு இ-பைக் பயனரும் ரூ.1,000 டெபாசிட் செலுத்த வேண்டும். வைப்புத்தொகையுடன், ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத்தின் நகலை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் வெவ்வேறு நபர்களுக்கு, அவர்கள் வசதியைப் பயன்படுத்தும் நேரத்தின் அடிப்படையில் வேறுபட்டது. இதே போன்று தான் புதுவை மக்களும், புதுவைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் இனி இ-பைக்குகளை பயன்படுத்தலாம். இந்த செய்தியை புதுவை வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+