» »கொங்கனுக்கு ஒரு பைக் டூர்... ஜாலியா போகலாம் வாங்க!

கொங்கனுக்கு ஒரு பைக் டூர்... ஜாலியா போகலாம் வாங்க!

Posted By: Balakarthik Balasubramanian

இந்தக் கட்டுரையின் மூலம் நான்கு நாட்கள் பைக் பயணமாக கொங்கனை சுற்றிப் பார்ப்பதற்கு ஏதுவான இடங்கள் யாவை என்பதனை நாம் தெரிந்துக் கொள்ளப்போகிறோம். ஆம், இந்த ஆச்சரியமூட்டும் சாலைப் பயணத்தின் வாயிலாக பூனேயிலிருந்துப் புறப்பட்டு, நாம் சுமார் 836.8 கிலோமீட்டர்களைத் தேசிய நெடுஞ்சாலை 48இன் வழியாக கடந்து செல்லப் போகிறோம் என்பதனை மகிழ்ச்சியுடன் இந்த இடத்தில் பதிவு செய்துக் கொள்கிறேன்.

கொங்கனை அபராண்டா என்றும் அழைப்பர். இந்த இடம் சஹ்யாத்ரி மலைக்கும் அரபிக் கடலுக்கும் நடுவில் காணப்படுகிறது. இந்த இடத்தின் சமவெளி, தோராயமாகச் சுமார் 760 கிலோமீட்டர்கள் காணப்படுகிறது. கொங்கன் என்ற ஒரு வார்த்தை, இரண்டு மராத்திய வார்த்தைகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும். ஆம், "கோண" என்ற வார்த்தை மராத்தியில் மூலைப் என்பதனைக் குறிக்கும். "கனா" என்றதொரு வார்த்தை ஒருத் துண்டு என்பதனைக் குறிக்கும்.

கொங்கனை காண ஏதுவான ஒரு காலம்:

கொங்கனை காண ஏதுவான ஒரு காலம்:

பருவமழைக் காலங்களில் இந்தப் பசுமையான அழகியக் கொங்கனைக் காணும் நம் மனம், இன்பத்தின் எல்லைக்கேச் செல்லும் என்றுக் கூறலாம். கொங்கனில் காணப்படும் குக்கிராமங்களின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நாம் பார்க்கும் சிறியதோர் நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளின் நேரத்தினை இன்பமாகச் செலவிட உதவுகிறது.

PC: Nochalp

பார்ப்பதற்கு ஏதுவான உச்சப் பருவத்தின் கால நிலை:

பார்ப்பதற்கு ஏதுவான உச்சப் பருவத்தின் கால நிலை:

நவம்பர் முதல் மார்ச் வரை
இந்த நான்கு நாட்கள் பயணத்தில் பூனேவிலிருந்து கொங்கன் செல்லும் நாம், எந்த இடங்களை எல்லாம் கண்டு ரசிக்கலாம் :
இந்த நான்கு நாட்கள் பயணத் திட்டத்தின் பட்டியலில் எத்தகைய இடங்கள் எல்லாம் இடம்பெற்று நம் மனதினை வருடப்போகிறது என்பதனைக் கீழ்க்காணும் பத்தியில் நாம் பார்க்கலாம்.

திவ்யேகர்:

திவ்யேகர்:

ராய்கர் மாவட்டத்தில் தெள்ள தெளிவாக காணப்படும் ஒரு இடம் தான் இந்த திவ்யேகர். இங்குக் காணப்படும் கூட்ட நெரிசல் என்பது மிகக் குறைவு என்று தான் கூறவேண்டும். இந்தக் கடற்கரைப் பகுதி சுமார் 6 கிலோமீட்டர் தூரத்துக்குப் பரந்து விரிந்துக் காணப்படுவதுடன் நம் கண்களைக் குளிரூட்டவும் செய்கிறது. பூனேவிலிருந்துச் சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இந்த இடத்தினை அடைய நமக்குத் தோராயமாக 4 மணி நேரம் தேவைப்படுகிறது.

கடற்கரை

கடற்கரை

கடற்கரையின் ஒரு எல்லைமுடிவில் மீன்பிடித்தீர்வும் மற்றும் ஒரு எல்லைமுடிவில், ஆயிரக்கணக்கான, இடம்பெயர்ந்து வரும் கடற்பறவைகளுக்கானச் சரணாலயமாகவும் இது விளங்குகிறது. மேலும் விநாயகப் பெருமானுக்காக அர்பணிக்கப்பட்டப் பிரசித்திப்பெற்ற சுவர்ன கணேஷ ஆலயமும் பார்ப்பவர்கள் கண்களை கொள்ளைக் கொள்ளச் செய்து மனதினை அமைதிப்படுத்துகிறது.

PC: Pankaj

மீன்பிடிக்கூடாரங்கள்

மீன்பிடிக்கூடாரங்கள்

இங்குள்ள மீன்பிடிக்கூடாரங்களுக்கு நாம் செல்ல, உள்ளூர் மீனவர்களை நம்மால் காணமுடிகிறது.

அவர்களிடம் நாம் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்வதன் மூலம் அவர்களோடு சேர்ந்து சென்று, மீன்பிடிப் பயணத்தினையும் நாம் ரசிக்கலாம். பாராகிளைடிங் போன்ற நீர்விளையாட்டுக்களின் வருகையால் பலரும் இந்தக் கடற்கரையில் சாகசம் புரிய, நாமும் அதனுள் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு இன்பமான ஒரு உணர்வை ஆகாயத்தில் அடையலாம். முருத் ஜஞ்ஜிரா என அழைக்கப்படும் கடலுக்கு நடுவில் காணப்படும் கோட்டையின் அழகு, நம் பயணித்தில் ஒரு முக்கியமானப் பங்கினை வகிக்கிறது. ஆம், திவ்யேகரிலிருந்துப் புறப்பட்டு ஒரு மணி நேரப் பயணமாக நாம் செல்ல, இந்தக் கோட்டை நம் கண்களுக்கு விருந்துப் படைக்கும் நோக்கத்துடன் கடலுக்கு நடுவில் அமைந்து மனதினை இதமாக்குகிறது.

ஸ்ரீவர்தன் மற்றும் ஹரிஹரேஷ்வர்:

ஸ்ரீவர்தன் மற்றும் ஹரிஹரேஷ்வர்:

திவ்யேகரிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு இடம் தான் ஸ்ரீவர்தன் ஆகும். ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு அமைதியான நகரம் தான் இந்த ஸ்ரீவர்தன். இந்த இடத்தில் காணப்படும் அமைதியான ஒரு சூழல், நம் மனதினை அமைதிக்கொள்ள செய்து இயற்கை அன்னையின் மடியில் தாலாட்டுப் பாடி தூங்கவைக்கிறது. சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சோம்ஜெய் ஆலயம் இங்குப் பிரசித்திப்பெற்ற ஒன்றாகும்.

பைக் சவாரி

பைக் சவாரி

பைக் சவாரி உங்களுக்கு சலிப்பூட்டும் பட்சத்தில், ஸ்ரீவர்தனிலிருந்து ஹரிஹரேஷ்வருக்கு இயக்கப்படும் படகுசேவை உங்கள் மனதினை பட்டாம்பூச்சியாக மாற்றி வானில் பறக்கச் செய்கிறது.

அதேபோல், ஹரிஹரேஷ்வரில் காணப்படும் ஆலயங்களும், கடற்கரைகளும் தென்னிந்தியாவின் காசி என்றும் அழைக்கப்படுகிறது. நம் மனதினை இன்பக்காற்றால் சுழல செய்யும் இந்த இடம், மூன்று மலைகளான ஹரிஹரேஷ்வர், ஹர்சினாச்சல், மற்றும் புஷ்பத்திரியால் சூழ்ந்துக் காணப்படுகிறது.

ஹரிஹரேஷ்வர் ஆலயம்

ஹரிஹரேஷ்வர் ஆலயம்

இந்த ஹரிஹரேஷ்வர் ஆலயம் சிவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று என்றும் கூறப்படுவதனால், பலரும் தவிர்க்காமல் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இந்த ஆலயமும் கடற்கரையும் ஒன்றுக்கு ஒன்று நேராக அமைந்துக் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் காணப்படும் மூன்று லிங்கங்கள்., சிவன், விஷ்னு மற்றும் பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டவை என்ற ஒருப் புராணமும் உண்டு.

PC:Omkar

அஞ்சார்லே:

அஞ்சார்லே:

ஹரிஹரேஷ்வரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு இடம் தான் அஞ்சார்லே ஆகும். மகாராஷ்டிரா மாநிலத்தின் ரத்தினகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடம் கொங்கனுக்கு பெயர் பெற்றுத் தந்த ஒரு பிரசித்திப் பெற்ற இடமாகும். ஜோக் ஆற்று வாயின் அருகில் அமைந்துள்ள ஒரு சிறியத் துறைமுகம் தான் இந்த அஞ்சார்லே.

Apoorva Karlekar

டபோலித்

டபோலித்

டபோலித் தாலுகாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு இடம் தான் இந்த அஞ்சார்லே. கத்யாவார்சா கணபதி ஆலயம், இந்த இடத்தில் காணப்படும் ஒருப் புகழ்பெற்ற ஆலயமாகும். பனை மரங்களும், தென்னை மரங்களும் சூழ்ந்துக் காணப்படும் இந்த அழகியக் கடற்கரை நம்மை இயற்கை நோக்கி அழைத்து சென்று அவள் மடியில் உறங்க வைக்கிறது. மலை உச்சியில் காணப்படும் கணேஷரின் தரிசனம் பெற்று திரும்பும் நம் கால்கள், பனை மரத்தினால் சூழ்ந்த கடற்கரையான பாம் பீச்சில் வெகு நேரம் உலா வந்து, எதனையோ நம் மனம் அங்கேயே தேடிச்சுற்றுகிறது என்று தான் கூறவேண்டும்.

அஞ்சர்லேயிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் கெல்ஷிக் கடற்கரையை ஒருபோதும் காணத்தவறாதீர்கள். இந்தச் சாலைகள் அங்குள்ள கடற்கரைக்கு இணையாகக் காணப்பட, நம் பைக் சவாரியின் வருகையை வந்து எட்டி பார்க்கும் அந்த கடல் அலைகளை நம் கண்கள், காணாத ஒருக் காட்சியினைக் கண்டதுபோல் ஆர்வத்துடன் பார்க்கிறது.

முருத் மற்றும் கார்தே:

முருத் மற்றும் கார்தே:

அஞ்சர்லேவிலிருந்து ராய்காட் மாவட்டத்தின் 20 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு தாலுகா நகரம் தான் இந்த முருத் ஆகும். SNDT எனப்படும் இந்தியாவில் முதன்முதலில் பெண்களுக்கென்றேப் பிரத்தியமாகப் பல்கலைக்கழகம் நிறுவியப் பாரத ரத்னா மஹாரிஷி கர்வேயின் பெருமைக்குறியப் பிறப்பிடம் தான் இந்த முருத் ஆகும்.

தண்ணீரில் விளையாடும் ஆர்வலர்களுக்கான அனைத்து விதமான அம்சங்களும் இங்குள்ள முருத் கடற்கரையில் காணப்படுகிறது. சேற்றையும் சகதிகளையும் அலட்சியப்படுத்தி விரைந்து புறப்படும் பைக் பயணம், ஆகாயத்தில் பறந்துக்கொண்டு நிலத்தின் அழகை ரசித்து ஆர்ப்பரிக்கும் பாராசைலிங்க் பயணம், எனப் பற்பல அம்சங்கள் நம் மனதினை ஆரவாரம் செய்ய வைத்துவிடுகிறது.

PC: gayathri priyadharshini

துர்கா ஆலயம்

துர்கா ஆலயம்

இங்கு அமைந்திருக்கும் துர்கா ஆலயம், ஒரு தவிர்க்கப்படகூடாதப் பிரசித்திப்பெற்ற ஆலயமாகும். டச்சு மற்றும் பிரிட்டிஷ் தாக்குதலின் போதுக் கூட அவர்களின் பலத்தினை எதிர்த்து போராடி வெற்றிப்பெற்ற வலிமை வாய்ந்த முருத் ஜஞ்சிரா கோட்டை இங்குள்ள இந்திய மேற்குக் கடற்கரைப் பகுதியில் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பருவமழைக் காலங்களில் முளைக்கும் காளான்கள் படைச் சூழ, காணப்படும் நிறைய நீர்வீழ்ச்சிகளிலிருந்து விழும் நீர்கள் நம் கண்களை ஆச்சரியத்துடன் அன்னாந்துப் பார்க்க வைக்கிறது.


கார்தேயின் சிறப்பம்சமாகக் கருதப்படுவது கார்தேக் கடற்கரை தான். இதன் அமைப்பு, ஒன்றன் பின் ஒன்றாக பரவிக் காணப்படுகிறது. ஆறு கிலோமீட்டர் நீண்ட நெடியதொரு நடைப்பயணமாக நாம் செல்ல இந்தக் கார்தே கடற்கரையினை அடைகிறோம். கார்தே கடற்கரையும் வழக்கமான டபோலி கடற்கரையினைபோல் மெல்லிய படலம் கொண்ட வெள்ளை மணல், அடித்தளம் அமைந்த கருநிற மணல்களால் சூழ, அது காண்போர் கண்களின் முன் வலையினை வீசி, அவர்களை தன் மீது காதல் வயப்படவும் வைத்துவிடுகிறது.

கடற்கரை

கடற்கரை

இந்தக் கடற்கரையில் எழும் சிறிய அலைகள், நம்மை நோக்கி வந்து வந்து செல்ல, ஆர்வத்துடன் நம்முடையப் பைக்கினை ஓட்ட முயற்சி செய்ய, அலையின் தாக்கம் குறைவாக இருக்கவே, நம்மால் மகிழ்ச்சியுடன் ஓட்டிச்செல்லவும் முடிகிறது. இங்கு சுவர்னத் துர்க்கை என அழைக்கப்படும் தங்கக் கோட்டையையும் நம்மால் காணமுடிகிறது.

இந்தக் கோட்டை மராட்டிய கடற்படைப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட ஒன்றாகும். இங்குக் காணப்படும் கனகத் துர்க்கை எனப்படும் நீர் நிலக்கோட்டையும், சுவர்ன துர்க்கை என அழைக்கப்படும் கடல் கோட்டையும் ஒரு சுரங்கப் பாதையின் வாயிலாக இணைக்கப்பட்டு நம்மை ஆச்சரியத்தின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது. ஆனாலும், சிலக் காரணங்களால் அந்த சுரங்கப்பாதை செயழிலந்து இப்பொழுது இருக்க, அது மேலும் நம் எதிர்ப்பார்ப்பினை அதிகரித்துவிட்டது என்றே கூறவேண்டும். ஆம், இந்த சுரங்கப்பாதையினைப் பாதுகாப்பு சின்னமாக கருதிப் பேணிக் காக்க, இந்த அதிசயத்தினை காண, இன்று நமக்குப் படகு மட்டுமே உதவி செய்து வருகிறது.

Vishaltomar ifm

https://commons.wikimedia.org/wiki/File:Sea_beach1_Murud_Janjira_Fort,_Raigad,_Maharashtra.JPG

இந்தியாவின் 50 மிகச்சிறந்த பயண புகைப்படங்கள்!!!

இந்த கோடையில் மனைவி (அ) காதலியுடன் செல்ல ஏற்ற 'அந்த' இடங்கள்!

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

விலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா?

ஏன் இந்த அக்கப்போரு .. வெள்ளயங்கிரி மலையில அப்டி என்னதான் இருக்கு?

Read more about: travel