» »பூனே, ஒரு குட்டி Summary!

பூனே, ஒரு குட்டி Summary!

Written By: Staff

பூனே மகாராஷ்ட்ராவின் இரண்டாவது பெரிய நகரம். மும்பை நிதி நகரம் என்றால் பூனே தொழில் நகரம்.

FC

Fergusson கல்லூரி - பூனே

Photo Courtesy : Mukul2u

பூனே நகரத்தை இரு பகுதிகளாய்ப் பிரித்து மாநகராட்சி நிர்வகிக்கிறது : பிம்ப்ரி-சின்ச்வட் (Pimpri-Chinchwad) பகுதி மற்றும் பூனே நகர்ப் பகுதி.

பிம்ப்ரி-சின்ச்வட் இரண்டுமே புனேயின் புற நகர் பகுதிகள். இந்த பிம்ப்ரி-சின்ச்வட் மாநகராட்சியின் கீழ் இன்னும் பல பகுதிகள் வருகிறது. இவை எல்லாம் சேர்ந்துதான் பூனே புற நகர் பகுதி.

இந்த புற நகர்ப் பகுதியில்தான் ஏராளமான இயந்திர தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த தொழிற்சாலைகள் மட்டும் 100'ஐ தொடுகின்றன. பெங்களூர் ஐடி நகரம் என்றால் பூனே மெக்கானிக்கல் நகரம். மெக்கானிக்கல் பொறியியல் படித்தோர், பாலிடெக்னிக் படித்தோர் பலரும் வேலை தேடி வரும் ஒரு முக்கிய நகரம்.

Pataleshwar

பாதலேஷ்வர் குகைகள் - பூனே

இதனால் பூனே புற நகர்ப் பகுதி ரியல் எஸ்டேட் துறையில் படு வேகமாக முன்னேறி வருகிறது. எக்கச்சக்க எடுக்குமாடி குடியிருப்புக‌ள் பெருகிவிட்டன. கரும்புத் தோட்டங்களுக்கு நடுவில் அப்பார்ட்மென்டுகள் இருப்பது சர்வ சாதாரணம். நிறைய விளை நிலங்கள்ரியல் எஸ்டேட்டுகளாகவிட்டன.

apt

பூனே புற நகர் அடுக்குமாடி குடியிருப்புகள்

Photo Courtesy : Kailash Kumbhkar

ஐடி கம்பெனிகள் சுற்றியிருக்கும் ஹிஞ்சவாடி மலைப் பகுதியை பாதி காலி செய்துவிட்டனர். இன்னும் 10 வருடங்களில் ஹிஞ்சவாடியில் மலை இருந்தது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

கூடுதலாக, கடந்த பத்து வருடங்களாக மென்பொருள் துறையில் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நகரம் பூனே. சென்னை வெள்ளத்திற்குப் பிறகு பலர் இங்கு கம்பெனிகளைத் துவங்க ப்ரியப்படுகிறார்கள். அத்தனை முன்னணி மென்பொருள் நிறுவனங்களும் பூனேயில் இருக்கின்றன.

Aga

ஆகா கான் அரண்மனை - பூனே

சுதந்திர போராட்ட காலங்களிலேயே பூனே ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். கிறிஸ்த்துவ மிஷனரிகள் இங்கு தொடங்கப்பட்டன. மராட்டிய மன்னர்கள் பேஷ்வா சாம்ராஜ்யத்தில், பூனே ஒரு முக்கிய நகரம்.

பூனே நகரத்திற்குள் வந்தால் பெங்களூர், சென்னை போன்று பிரமாண்ட கட்டிடங்கள், மால்களைப் பார்க்க முடியாது. ஆனால், பழங்காலத்து கோட்டைகள், மலை மேல் கோவில்கள், ப்ரிட்டிஷ் காலத்து கட்டிடங்கள், ராணுவ குடியிருப்புகள், அழுக்குப் படிந்த அதிக பசுமையில்லாத மரங்கள் என்று இருக்கும் ஒரு நகரம்.

Murugan

முருகன் கோவில் - தேகு சாலை(Dehu Road), பூனே

குளிர் காலத்தில் அதிக பனியும், வெயில் காலங்கள் சென்னையளவிற்கு இல்லையென்றாலும் ஒரளவிற்கு அதிக வெப்பம் நிலவும் ஊர்.