» » நம்பினால் நம்புங்கள்! இந்த ஆண்டு முடிவதற்குள் பிரளயம் ஏற்படபோகிறதாம்?

நம்பினால் நம்புங்கள்! இந்த ஆண்டு முடிவதற்குள் பிரளயம் ஏற்படபோகிறதாம்?

Written By: Udhaya

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதி, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கொட்டித்தீர்க்கும். இந்த சமயத்தில் சென்னை உட்பட பல வடமாவட்ட பகுதிகள் பலன்பெரும்.

ஆனால், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் சென்னை வாசிகள் மட்டுமின்றி இந்தியாவில் பெரும்பாலானோரால் மறக்கமுடியாததாகவே இருக்கும். அப்படி ஒரு வெள்ளம். பலர் உடமையிழந்து, சிலர் உயிரையும் உயிராய் நினைத்தவற்றையும் இழந்து பெரும்பாடு பட்டனர். உணவிற்கும், உடமைக்கும், இருப்பிடத்துக்கும் வழியில்லாமல் பரிதாபமான நிலையில் இருந்து கருணையுள்ளம் கொண்டவர்களால் காப்பாற்றப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பினர்.

ஆனால், தற்போது இந்த வருடம் அதைவிட பெரிய அளவிலான மழை பெய்து, பிரளயத்தை உண்டாக்கப்போகிறது என்று செய்திகள் பரவியுள்ளன. அதுகுறித்து பார்க்கலாம்.

பேய் மழை

பேய் மழை

சொல்ல வார்த்தைகளற்ற அளவுக்கதிகமான மழையைத் தான் பேய் மழை என்போம். இந்த வருடம் அப்படி பேய் மழை அக்டோபர் 22ம் தேதி ஆரம்பிக்கவுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. எனினும் இந்த தகவல் குறித்து வானிலை மையம் எந்தவொரு அதிகார்ப்பூர்வமான விளக்கங்களையும் கொடுக்கவில்லை. மேலும், இது பஞ்சாங்கத்தின் அடிப்படையிலான கணிப்பு என்றும், இது அறிவியல் பூர்மாக தெரிவிக்கப்பட்டது இல்லை என்றும், வானிலையை கவனித்து வரும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

NativePlanet

காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்

காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்


மொத்தம் 13 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வங்கக்கடலில் உருவாகும். அவற்றில் 7 பலவீனமாகவும், மற்ற 6 காற்றழத்த தாழ்வு மண்டலங்கள் பலமடைந்து திருவள்ளூர் ,நெல்லூர் ,விசாகபட்டினம், விஜயவாடா, ஒரிசா, அந்தமான், சென்னை, கடலூர், திருவாருர், நாகப்பட்டினம், மாயவரம், கும்பகோணம் என படிப்படியாக வடகடலோர மாவட்டங்களில் பெருமழையைக் கொடுக்கும்.

 அரபிக்கடல்

அரபிக்கடல்

அக்டோபர் 22ம் தேதி அரபிக்கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தின் வடமாவட்ட பகுதிகள் வழியாக கரையை கடக்கும். எனினும் இது மழையைக் கொடுத்தாலும் புயலாக மாறாது என்றும், அதற்குள் வலுவிழக்க வாய்ப்பு அதிகம் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

NativePlanet

 புயல்

புயல்

நவம்பர் 8ம் தேதி உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 1210 கிமீ வேகத்துக்கு காற்று வீசும். இதனால் சென்னை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்பரம், காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய இடங்கள் பாதிக்கப்படவாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது அந்த தகவல்.

சென்னை

சென்னை


ஹாட் சென்னையின் ஹாட்டஸ்ட் படங்கள்!!!

பாதிக்கப்படும் சுற்றுலாத் தளங்கள்

பாதிக்கப்படும் சுற்றுலாத் தளங்கள்

ஒருவேளை இது உண்மையாக நடந்தால், மெரினா கடற்கரை, கபாலீஸ்வரர் கோயில், பெசன்ட் நகர் கடற்கரை, சென்னை முதலை வங்கி, சாந்தோம் ஆலயம் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்கள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

NativePlanet

 இராமேஸ்வரம்

இராமேஸ்வரம்


அதன்பின் நவம்பர் 14ம் தேதி, இராமேஸ்வரம் கிழக்கே மையம் கொள்ளும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று, 1450 கிமீ வேகத்தில் வீசும்.

அந்தமான் நிகோபார்

அந்தமான் நிகோபார்

நவம்பர் 20ம் தேதி அந்தமானில் இன்னொரு புயல் உருவாகும் என்றும் அது புயலாக வீசி தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்றும் கூறுகிறது அந்த தகவல். ஒருவேளை தமிழகத்தில் கரையைக் கடந்தால், ஏற்கனவே புயலால் பாதிக்கப்பட்ட கடலூரின் நிலைதான் உருவாகும் எனத் தெரிகிறது.

 கடலூர்

கடலூர்

நவம்பர் 28ல் கடலூரில் 1550 கிமீ வேகத்தில் புயல் நெருங்கும் எனவும், இதன் பாதிப்பு சென்னை வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. டிசம்பர் 5ம் தேதி சென்னையை உலுக்கும் பிரளயம் ஒன்று ஏற்படப்போவதாகவும், இதனால் வரலாறு காணாத அளவு வெள்ளம் ஏற்படப்போவதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

திருப்பதியில் சோகம்

திருப்பதியில் சோகம்

எதிர்பாராதவிதமான சோகம் ஒன்று திருப்பதியில் நிகழும் என்றும், அடுத்த ஆண்டு தொடக்கம் அவ்வளவு நல்லதாக இருக்காது என்றும் இந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

இருளில் மூழ்கும் சென்னை

இருளில் மூழ்கும் சென்னை

எவ்வளவுதான் கனமழை பெய்தாலும், சென்னையில் பிரளயமே வந்தாலும், அது அழியாது என்றும், ஆனால் தொடர்ந்து பல நாட்கள் சென்னை இருளில் இருக்கும் எனவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. அந்த தகவலின் இறுதியில் இது பஞ்சாங்கத்தின்படி கணிக்கப்பட்ட செய்தி என்றும், இதை கணித்தவர் ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் என்றும் கூறப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வாளர்கள்.

வானிலை ஆய்வாளர்கள்.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையமும் சரி, தற்சார்பு வானியல் கணிப்பாளர்களும் சரி எந்தவித செய்தியையும் வெளியிடவில்லை. இது முழுக்க முழுக்க பஞ்சாங்கத்தின்படியான கணிப்பு என்றும், இது வானிலை அறிவியல் ரீதியான கணிப்பாக இல்லை என்றும், இது வெறும் புரளி என்றும் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனாலும், பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டது கண்டிப்பாக நடக்கும் என்கின்றனர் பஞ்சாங்கத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள். கடந்த 2015ம் ஆண்டும் இப்படி பலர் பஞ்சாங்க கணிப்பு என தகவல்களை வெளியிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 புரளிகளை நம்பவேண்டாம்

புரளிகளை நம்பவேண்டாம்

சமூகத்தில் அன்றாடம் நிகழ்பவற்றை எடுத்துக்கூறிவரும் நமது இணையம் கண்டிப்பாக வானிலை குறித்த உண்மை செய்திகளை வழங்கி வருகிறது. இதனால் திட்டமிட்டு பரப்பப்படும் புரளிகளை நம்பவேண்டாம். எனினும் மழைக்காலங்களில் சுற்றுலா செல்லும் நண்பர்கள் தகுந்த முன்னேற்பாட்டுடன் செல்லுங்கள், தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழ்.