» »இரவில் மட்டும் பெண்களை அனுமதிக்கும் விநோத கோயில்

இரவில் மட்டும் பெண்களை அனுமதிக்கும் விநோத கோயில்

Written By:

இரவில் மட்டும் பெண்களை அனுமதிக்கும் விசித்திரமான கோயில் கண்ணூர் அருகே அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சென்று வருபவர்களுக்கு பல்வேறு ஆதாயங்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் தெய்வம் மிகுந்த சக்தி வாய்ந்தது எனவும் இரவில் மட்டுமே பெண்களை அனுமதிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக நம்பப்படுகிறது. 

கண்ணூர்

கண்ணூர்

கண்ணூரிலிருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த தலிப்பறம்பா எனும் இடம். இந்த இடத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ராஜராஜேஸ்வரர் கோயில்.

இந்த கோயில் சிவ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இந்த கோயில் ஆரம்பத்தில் சிதைந்து இருந்ததாகவும், அதன் பிறகு பரசுராமரால் இது புணரமைக்கப்பட்டதாகவும் கதைகள் உண்டு. 108 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சக்தியின் உடல் பாகங்கள் சிதறிய இடங்களில் இதுவும் ஒன்றாக நம்பப்படுகிறது.

இங்கு சிவபெருமான் ராஜராஜேஸ்வரர் என்னும் பெயரில் அறியப்படுகிறார். அதாவது இதன் பொருள் அரசர்களுக்கும் அரசர் என்பதாகும். பெரும்திரிக்கோவிலப்பன், பெரும்செல்லூரப்பன் மற்றும் தம்புரான் ஆகியன சிவபெருமானின் வேறு பெயர்களாகும்.

ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக அறியப்படும் இந்த கோயில் லிங்கம், மிகுந்த சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. இங்கு வந்து எதை வேண்டினாலும் அதை அப்படியே செய்து தருவார் இந்த ராஜராஜேஸ்வரர்.

PC: Pradeep717

 எப்படி செல்வது

எப்படி செல்வது

கண்ணூரிலிருந்து தளிப்பிறம்பாவுக்கு 20 முதல் 25 கிமீ தொலைவில் வெவ்வேறு பாதைகளில் செல்லமுடியும்.

கண்ணூர் காசர்கோடு சாலையில், சிரக்கல் வழியாக, வாலப்பட்டணம் ஆற்றைக் கடந்து 25 கிமீ பயணிக்கவேண்டும். பின்னர் தர்மசலா எனும் பகுதியில் பேருந்து நிறுத்தத்தை ஒட்டினாற்போல வரும் வலது சாலையில் திரும்பவேண்டும்.

அது பரசினிக்கடவு - மய்யில் சாலை ஆகும். இந்த சாலையில் தொடர்ந்து செல்ல, அது பரசினிக்கடவு - குருமத்தூர் சாலையில் இணையும். அந்த சாலையில் இடதுபுறம் பயணித்தால், கொஞ்ச நேரத்தில் முய்யம் - பவுபரம்பு சாலை வந்து சேரும். அங்கிருந்து மீண்டும் இடது புறத்தில் திரும்பவேண்டும். இந்த சாலை தலிப்பிறம்பாவை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும்.

PC: Ajeesh.valliyot

முன்னோர்களின் நம்பிக்கை

முன்னோர்களின் நம்பிக்கை

இங்கு வரும் பக்தர்களுக்கு இந்த இறைவன் வேண்டியதை அள்ளிக் கொடுப்பார் எனும் நம்பிக்கை அதிகம். இப்படி ஒரு அருமையான இடம் எதனால் சிதைந்தது என்று நினைத்த பரசுராமர் இந்த கோயிலை திருப்பி கட்ட முடிவு செய்தார் என்கிறார்கள் பக்தர்கள். நாரதரை அழைத்த பரசுராமர், அவரிடம் இந்த கோயிலைப் பற்றிய வரலாற்றை கேட்டு தெரிந்தார்.

சனகா எனும் முனிவர் சூரியனுக்கு பாடம் புகட்ட, தூசுக்களையும், புகை மாசுக்களையும் அதனுடன் கலந்துவிட்டாராம். இதனால் சூரியன் திக்கு தெரியாமல் மூன்றாக உடைந்ததாம். அதிலிருந்து பிரம்மன், பார்வதி, சிவன் ஆகியோர் தோன்றினார்களாம்.

இதிலிருந்து தோன்றிய பார்வதி, தன்னிடமிருந்த சிவ லிங்கத்தை மன்னர்களிடம் கொடுத்து, இதை எவ்வித பாவச் செயல்களும் நடைபெறாத இடத்தில் வைத்து வழிபடுமாறு கொடுக்க, எங்கெங்கோ தேடிய மன்னர்கள் கடைசியில் இந்த இடத்தை கண்டுபிடித்து இங்கு கோயில்களை கட்டினார்களாம்.

PC: Vaikoovery

பரசுராமர் கட்டிய கோயில்

பரசுராமர் கட்டிய கோயில்

இந்த கதையை கேட்டுமுடித்த பரசுராமர் இங்கு கோயில் கட்டமுடிவெடுத்து கோயிலை கட்டத் திட்டமிட்டார். இங்கு எப்போதும் ஒளிர்கிற விளக்கு ஒன்று உள்ளது.

PC: Ajith U

பெண்களுக்கு இரவில் மட்டும் அனுமதி

பெண்களுக்கு இரவில் மட்டும் அனுமதி

7 மணிக்கு மேல் மட்டுமே இந்த கோயிலில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறதாம். பகலில் ஆண்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த கோயிலுக்கு சென்று வரலாம் என்றாலும், பெண்களுக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை.

அதளபூசைக்கு பின் தான் பெண்கள் இந்த கோயிலுக்குள் நுழைகிறார்கள்.

PC: Pranav

தலிப்பறம்பா

தலிப்பறம்பா

தலிப்பறம்பா எனும் இந்த நகரம் தனது அற்புதமான இயற்கை அழகுக்காகவே பிரசித்தி பெற்று விளங்குகிறது. பாம்பு போன்று வளைந்து நெளிந்து காணப்படும் மலைகள் மற்றும் நீண்ட வயல்களால் சூழப்பட்ட இந்த எழில் நகரம் சுற்றுலா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக புகழ் பெற்றுள்ளது. குப்பம் ஆறு மற்றும் வாலபட்டணம் ஆறு இப்பகுதியில் பாய்வதால் செழுமையுடனும் வளத்துடனும் தலிப்பறம்பா நகரம் காட்சியளிக்கிறது.

PC: Pranav

சுற்றுலாத் தளங்கள

சுற்றுலாத் தளங்கள

தலிப்பறம்பா நகரத்தின் முக்கிய சுற்றுலா கவர்ச்சி அம்சங்களாக குட்டியேரி எனும் இடத்திலுள்ள மரத்தொங்கு பாலம் மற்றும் பரசினிக்கடவு எனும் இடத்திலுள்ள முத்தப்பன் கோயில் ஆகியவை பிரசித்தி பெற்றுள்ளன. வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் யாத்திரைஸ்தலமாக இந்த முத்தப்பண் கோயில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், மரத்தொங்கு பாலத்தை சுற்றிலும் பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும் இயற்கைக்காட்சிகள் நிறைந்துள்ளன. அது மட்டுமல்லாமல் கிருஷி விக்யான் கேந்திரா, மிளகு ஆராய்ச்சி மையம் மற்றும் பரியராம் மருத்துவ கல்லூரி ஆகியவை இந்த தலிப்பறம்பா நகரத்தில் அமைந்துள்ளன.

Ajeesh.valliyot

அழகு கோலம்

அழகு கோலம்

மிகப்பழமையான தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் ராஜ ராஜேஸ்வர கோயில் எனப்படும் சிவன் கோயில் மற்றும் கிருஷ்ண பஹவானுக்கான திருச்சம்பாரம் கோயில் ஆகியவை இந்த ஸ்தலத்தின் முக்கிய ஆன்மீக ஸ்தலங்களாக விளங்குகின்றன. இந்த கோயில்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களின் போது தலிப்பரம்பா நகரம் முழுவதுமே எழிற்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது. பலவிதமான கேரள நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை இந்த திருவிழாக்களின் போது கண்டு ரசிக்கும் அனுபவத்திற்காகவே உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்களும் பயணிகளும் ஆர்வத்துடன் இந்நகரில் திரள்கின்றனர்.

Prof tpms

 மீன்குண்ணு பீச்

மீன்குண்ணு பீச்

பய்யம்பலம் கடற்கரையின் தொடர்ச்சியான இந்த மீன்குண்ணு பீச் கண்ணூர் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள ஆழிக்கொடே எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. மீன்மலை எனும் பொருளை தரும்விதத்தில் இந்த கடற்கரைக்கு மீன்குண்ணு என்று பெயரிடப்பட்டுள்ளது. (குண்ணு=மலை)

நீண்ட வெண்மணற்பரப்பையும் ஓரத்தில் தென்னை மரங்களின் அணிவகுப்பையும் கொண்டு காட்சியளிக்கும் இந்த கடற்கரை தன் இயற்கை வனப்பிற்காகவே இயற்கை ரசிகர்களிடையே பிரசித்தி பெற்றுள்ளது. அதிகம் சுற்றுலாப்பயணிகளால் அறியப்படாததால் இதன் மாசுபடா நிசப்தமும் எழிலும் கண்களையும் மனதையும் கவரும் விதத்தில் காட்சியளிக்கிறது.

ஏகாந்தமான இயற்கை எழிற்பிரதேசத்தில் கொஞ்சம் தனிமை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கடற்கரைப்பகுதி மிகவும் ஏற்ற இடமாகும். மணற்பரப்பில் நடந்தபடியே சூரியக்கதிர்களில் நனைவது ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபமாக இருக்கும்.

சுத்தம் மற்றும் பாதுகாப்பான சூழலைக்கொண்டுள்ளதால் குடும்பத்துடனும், ஜோடியாகவும் ஆனந்தமாக பொழுது போக்குவதற்கு ஏற்ற இந்த கடற்கரைக்கு பகலில் எந்த நேரத்திலும் விஜயம் செய்து மகிழலாம்.

ஆசியாவில் உள்ள ஒரே டிரைவ் இன் பீச்

ஆசியாவில் உள்ள ஒரே டிரைவ் இன் பீச்


இந்தியா மற்றும் ஆசியாவில் உள்ள ஒரே டிரைவ் இன் பீச் (அலைகளுக்கு வெகு அருகில் வாகனங்களை ஓட்ட முடியும்) என்ற பெருமையை இந்த முழுப்பிளாங்காட் பீச் பெற்றுள்ளது.

முழுப்பிளாங்காட் கடற்கரை தலசேரி நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. ஒரு நாள் சுற்றுலாவுக்கும் குடும்பத்தினருடன் பிக்னிக் செல்வதற்கும் ஏற்ற இந்த கடற்கரைப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் ஒவ்வொரு வருடமும் விஜயம் செய்கின்றனர்.

5 கி.மீ தூரத்துக்கு அலைகளை ஒட்டியே வாகனங்களில் கடற்கரை மணற்பரப்பின் அழகை ரசித்தபடி பயணம் செய்ய முடிவது இந்த இடத்தில் விசேஷமாகும். ஏப்ரல் மாதத்தில் நடக்கும் பீச் திருவிழாவின் போது இந்த கடற்கரை பகுதியில் ஏராளமான இளைஞர்களும் சாகச பயணிகளும் திரண்டு வந்து கொண்டாடுகின்றனர்.

தர்மதம் தீவு அல்லது பச்ச துருத்து என்று அழைக்கப்படும் ஒரு சிறு தீவுத்திட்டு இந்த கடற்கரையை ஒட்டியே 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.சுற்றுலாப்பயணிகள் கார் அல்லது பைக்'குகள் மூலம் இந்த கடற்கரையை ஒட்டி வாகனப்பயணம் செய்து மகிழலாம்.

கரையில் அசைந்தாடும் தென்னை மரங்களும் ஆங்காங்கு மணலில் புதைந்திருக்கும் கருப்பு பாறைகளும் இக்கடற்கரையின் எழிலைக்கூட்டுகின்றன. வருடத்தின் எல்லா நாட்களிலும் விஜயம் செய்யக்கூடிய சூழலைக்கொண்டுள்ள இக்கடற்கரைப்பகுதிக்கு மழைக்காலத்தில் செல்வதை தவிர்ப்பது அவசியம்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்