Search
  • Follow NativePlanet
Share
» »நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் ராஜ்கிருக்கு ஒரு பயணம் போகலாமா?

நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் ராஜ்கிருக்கு ஒரு பயணம் போகலாமா?

நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் ராஜ்கிருக்கு ஒரு பயணம் போகலாமா?

ராஜ்கிர் நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் நகரம். இது சுற்றுலா வருபவர்களுக்கு அறிவு சார்ந்த அனுபவத்தை ஏற்படுத்தும். அஜட்ஷத்ரு கோட்டை, ஜீவகமீவன் தோட்டம் மற்றும் ஸ்வர்ண பந்தர் போன்றவைகள் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாகும். ராஜ்கிர் சுற்றுலாவின் முக்கிய அம்சமாக விளங்குகிறது பிரம்மகுந்த். பிரம்மகுந்த் என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு வெந்நீர் ஊற்றாகும். இதை காண பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். கௌதம புத்தரும், மஹாவீரும் தங்கள் வாழ்க்கையின் அதிக நாட்களை இங்கே கழித்துள்ளதால் இந்த இடத்தை ஜெயின் மற்றும் புத்த மதங்களை சேர்ந்தவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் ராஜ்கிருக்கு ஒரு பயணம் போகலாமா?

Aryan paswan

ராஜ்கிர் என்றால் ராஜக்ரிஹா என்று அர்த்தமாகும். அதாவது ராஜாவின் வீடு என்று பொருளாகும். இது ஜரசந்தா என்ற பேரரசரின் கதையையும் அவர் பாண்டவர்களிடம் நடத்திய போரை பற்றியும் விளக்கும். மேலும் கௌதம புத்தர் மற்றும் மஹாவீரரின் வாழ்க்கை பயணத்திற்கு சாட்சியாக விளங்குகிறது ராஜ்கிர். ஜெயின் மற்றும் புத்த மதத்தின் வளர்ச்சியை பற்றிய முக்கிய நிகழ்வுகளை வெளிக்காட்டும் அட்டவணையாக விளங்குகிறது ராஜ்கிர் சுற்றுலா. புத்த மதத்தின் அவை முதன் முதலாக கூடியது இங்குள்ள சப்ட்பர்னி குகையில் தான். புத்த மதத்தின் வளர்ச்சியும் புகழும் ராஜ்கிர்ரை புத்தமத செயல்பாடுகளின் மையமாக மாற்றியது. ஒட்டு மொத்த புத்தமத சுற்றுலா மண்டலத்துக்கும் ராஜ்கிர் சுற்றுலா ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுகிறது. மேலும் இதர புத்த மத புனித ஸ்தலங்களுடன் இணைப்பில் உள்ளது. நலந்தாவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராஜ்கிர் நகரம், புத்தமதத்தின் மற்றொரு புனித ஸ்தலமாகும்.

நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் ராஜ்கிருக்கு ஒரு பயணம் போகலாமா?

Photo Dharma

வேணு வனா என்பது ஒரு செயற்கை காடாகும். அமைதியை ரசிக்கவும் தியானம் செய்யவும் உருவாக்கப்பட்ட காப்பிடமாகும். இங்கே புத்தருக்காக பிம்பிசாரா பேரரசர் கட்டிய அழகிய மேடம் ஒன்று உள்ளது.

சோன்பந்தர் குகைக்கு போற்றத்தக்க வரலாறு உள்ளது. மேலும் இங்கே பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது. இந்த குகை இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. ஒரு பிளவு பாதுகாப்பு அறையாகவும் மற்றொரு பிளவு பெட்டக அறையாகவும் விளங்கியது என்று நம்பப்படுகிறது. இந்த குகை வழியாக பிம்பிசாரா அரசரின் பெட்டகத்திற்கு செல்லும் பாதை இன்னமும் கூட அப்படியே இருப்பதாக நம்பப்படுகிறது. புதிர் போடும் வகையில் இந்த குகையில் காணப்படும் கல்வெட்டுகள் பூடகமாக விளங்குகிறது. இந்த குகைக்கு பிம்பிசாரா அரசருடன் வரலாற்று தொடர்புகள் இருப்பதால் சுற்றுலாப்பயணிகளை இந்த இடம் வெகுவாக ஈர்க்கும்.

நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் ராஜ்கிருக்கு ஒரு பயணம் போகலாமா?

Shaashi

பிம்பிசார் சிறைச்சாலையிலிருந்து கிரிட்டகுடா மலை மற்றும் ஜப்பானியர்களின் பகோடாவின் எழில்மிகு தோற்றம் தெரியும். கௌதம புத்தரின் நம்பிக்கையுறுதியான சீடரான பிம்பிசார் அரசரை அவருடைய மகன் அஜட்ஷத்ரு சிறையிலிட முடிவு செய்தார். எந்த இடத்தில் சிறையிட வேண்டும் என்று தன தந்தையிடம் கேட்ட போது, இங்கிருந்து பார்த்தால் புத்தர் கண்ணில் படுவதால் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தார்.

Read more about: travel hills
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X