» »நாகலாப்புரம் - வாரக்கடைசியில் சென்னையிலிருந்து சுற்றிபார்க்க ஏற்ற இடம்

நாகலாப்புரம் - வாரக்கடைசியில் சென்னையிலிருந்து சுற்றிபார்க்க ஏற்ற இடம்

Posted By: Gowtham Dhavamani

சென்னையிலிருந்து வாரக்கடைசியில் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற்று உற்சாகப்படுத்திக் கொள்ளவும், சாகசம் செய்யவும் ஆர்வம் உள்ளவர்களும், நாகலாப்புரம் சரியான இடம்

இந்தியா எல்லாவிதமான இடங்களையும் கொண்டதாகும், குறிப்பாக அழகாகவும் பழமையானதாகவும், கிராமிய மைய்யமாகவும் இருக்கும் பல இடங்கள் உள்ளன. உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் சுற்றிப்பார்க்க வெளியே வந்தால், நிச்சயமாக, நீங்கள் சில கவர்ச்சியான இடங்களுக்குப் செல்லலாம். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் இருப்பதை மறுக்க முடியாது. அப்படி ஒரு வாரக் கடைசி விடுமறையை சந்தோஷமாக நீங்கள் கழிக்க விரும்பினால் நாகலாப்புறம் சரியான தேர்வாக இருக்கும்.

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் இருந்து சராசரியாக 213 அடி உயரத்தில் அமைந்துள்ள நாகலாப்புரத்தின் வேதநாராயண கோயில், விஷ்ணுவின் முதல் அவதாரமான மட்சியாவின் வடிவில் வைணவத்தீஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றது. காலப்போக்கில், நாகலாப்புரமானது அதன் இயற்கை அழகு மற்றும் சாகசமான மலைகளின் காரணமாக, மலையேற்றம் மற்றும் பயணிகள் மத்தியில் புகழ் பெற்றது.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் வரலாற்றை இந்த சிறிய கோயில் விவரிக்கும். புராணங்களின் படி, நாகலாப்புரம் தனது தாயான நாகாலா தேவியின் நினைவாக கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. அந்த காலத்தில் கடைப்பிடிக்க பட்ட வளமான கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை இந்த நகரத்தில் கட்டப்பட்ட கோவில்களின் ஆர்வமிக்க கட்டிடக்கலை மற்றும் அற்புத சுவர் வடிவங்கள் பிரதிபலிக்கும்.

இன்று, கோயில்களிலும் அதன் வரலாறுகளும், நாகலாப்புரத்தின் இயற்கை அழகும் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. நாடெங்கிலும் உள்ள மக்கள் இதன் வற்றாத அழகுனால் ஈர்க்கப்பட்டு, அனைத்து விதமான மலையேற்றம், கேம்பர்ஸ் மற்றும் புகைப்படக்காரர்கள் வருகைத்தருகிறார்கள்.

நாகலாப்புரம் செல்ல சரியான நேரம்:

நாகலாப்புரம் செல்ல சரியான நேரம்:

நகரத்தில் நடக்கும் திருவிழாக்கள், கோவில்களின் அலங்காரம் மற்றும் விளக்குகள் ஆகியவற்றை பார்த்து அனுபவிக்க வேண்டும் என்றால், பண்டிகை மாதங்களில் நீங்கள் செல்ல வேண்டும். நீங்கள் நாகலாப்புரத்தின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் அதன் புராணங்களால் ஆச்சரியப்படுவீர்கள்.

இருப்பினும், அற்புதமான மலைகளையும், அற்புதமான இயற்கைச் சூழலையும் அனுபவித்து பார்க்க விரும்பினால், நீங்கள் நாகலாப்புரத்திற்கு வருகை தருவதற்கான சிறந்த நேரம் நவம்பர் முதல் மார்ச் மாத இறுதிவரை ஆகும். இது குளிர்காலம் என்பதால், நீங்கள் மலையேற்றம், முகாம் மற்றும் சாதகமான சூழ்நிலையுடன் சுற்றிப் பார்க்கலாம்.

PC- editor crazyyatra

 நாகலாப்புரம் செல்வது எவ்வாறு:

நாகலாப்புரம் செல்வது எவ்வாறு:


விமான வழி:

நீங்கள் சென்னைக்கு விமான வழியாக பயணித்தால் அப்போது நீங்கள் விமான நிலையத்திலிருந்து நாகலாப்புரத்திற்கு ஒரு வாடகை வண்டியை மூலம் வரலாம். சென்னை விமான நிலையம் நாகலாப்புரத்தில் இருந்து சுமார் 82 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ரயில் பயணம்:

சென்னையில் இருந்து நாகலாப்புரத்திற்கு இடையே நேரடி ரயில்கள் இல்லை. இருப்பினும், சென்னையிலிருந்து கும்முடிப்பூண்டிக்கு ஒரு உள்ளூர் இரயில் மூலம் வந்தடைந்து நாகலாப்புரத்திற்கு ஒரு டாக்ஸியில் நீங்கள் செல்லலாம்.

சாலை வழி பயணம்:

சென்னையில் இருந்து குறைந்தபட்சம் 70 கி.மீ தூரத்தில் உள்ள நாகலாப்புரத்திற்கு சாலை வழியாக எளிதில் சென்றடையலாம். நாகலாப்புரத்திற்கு நேரடியாக தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. அதுவும், அதற்கும் அதிக நேரம் மற்றும் பணத்தை செலவிட வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக ஒரு வாடகை வண்டியை அல்லது உங்கள் சொந்த வாகனத்தை எடுத்துக்கொள்ளுதல் நல்லது.

நீங்கள் சொந்தமாக பயணிக்கிறீர்கள் என்றால், சென்னையிலிருந்து நாகலாப்புரத்திற்கு மூன்று வழிகள் உள்ளன.

வழி 1: சென்னை - புழல் - பெரியப்பாளையம் - நாகலாப்புரம்

வழி 2: சென்னை - வேங்கல் - நாகலாப்புரம்

வழி 3: சென்னை - மதுரவாயில் - திருவள்ளூர் - நாகலாப்புரம்

இருப்பினும், வேகமான மற்றும் சுவாரஸ்யமான வழி 1 ஆகும் , இது அழகிய இயற்கை சூழல் மற்றும் கோவில்களால் நிறைந்திருக்கிறது. இந்த வழியில் செல்வதால், புழல் ஏரியின் இயற்கை அழகை அனுபவிக்க முடியும், மேலும் பெரியப்பாளையத்து பவானி அம்மன் கோவிலையும் பார்க்க முடியும்.

புழல் ஏரி:

புழல் ஏரி:

இது, ரெட்ஹில்ஸ் ஏரி எனவும் அழைக்கப்படும், இது ரெட் ஹில்ஸ்சின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. புழல் ஏரி மாநிலத்தில் உள்ள முக்கிய மழைக்கால நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இது சுற்றியுள்ள நகரங்களுக்கு நீர் வழங்குகின்றது. இது 1876 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது மற்றும் அதன் பின்னர் அது சுற்றியுள்ள நகரங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

நீர்த்தேக்கங்களின் அமைதியான சூழலில் உட்கார்ந்திருக்க உங்களுக்கு பிடிக்குமா? அப்போது நீங்கள் கண்டிப்பாக செல்லவேண்டிய இடம் இது. விடியற்காலை மற்றும் அந்தி நேரம் கண்கவர் காட்சிகள் நிச்சயமாக உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இன்று, இது ஒவ்வொரு இயற்கை விரும்பிகளும் நிச்சயமாக செல்லும் இடம் ஆகும்.

PC - Puzhal2015

ஸ்ரீ பவானி அம்மன் கோவில்:

ஸ்ரீ பவானி அம்மன் கோவில்:

ஸ்ரீ பவானி அம்மன் கோவில், பெரியப்பாலயம் வழியாக பாயும் ஆரணி நதி இருக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. பார்வதி தேவியின் அவதாரமான அம்மன் பவானியின் திரு உருவம் கொண்ட இந்த கோவில் வருகை தரும் அனைவருக்கும் ஒரு முக்கிய மையமாக அமைந்து உள்ளது. கோயில் சுவர்களில் ஓவியங்கள் மற்றும் வண்ணமயமான வடிவங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்து தெய்வங்களின் சிலைகள் இங்கு காணப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி, ஆவணி, தை, ஐப்பசி மற்றும் சித்திரை மாதங்களில் நடக்கும் பண்டிகைகளில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவருகின்றனர். பெரியபாளையத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றி நீங்கள் உணர விரும்பினால், ஸ்ரீ பவானி அம்மன் கோயிலுக்கு வருகைத் தாருங்கள்.

PC- Official website

நாகலாப்புரம்:

நாகலாப்புரம்:

நீங்கள் நாகலாப்புரத்தை அடைந்தவுடன், அதன் அழகு மற்றும் வரலாறு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் மிகச்சிறந்த இடங்களை நீங்கள் பார்த்து ரசிக்க முடியும். வேதநாராயன கோயில் போன்ற வரலாற்று இடங்களிலிருந்து நாகலாப்புரம் ஹில்ஸ் போன்ற இயற்கை அதிசயங்கள் வரை, இந்த சிறு நகரம் பயணிகள் விரும்பும் அனைத்தையும் கொண்டுள்ளது. நாகலாப்புரம் ஹில்ஸ் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு மலையேற்றம் செய்து, இந்த அருமையான நகரத்தின் சமவெளியில் நீங்கள் முகாமிடலாம்.

PC- Santhosh Janardhanan

நாகலாப்புரத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்:

நாகலாப்புரத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்:


வேதநாராயண கோவில்:

நம்பமுடியாத கட்டிடக்கலை கொண்ட இந்த அற்புதமான கோயில் இந்நகருக்கு புகழ் கூட்டுகிறது . பிரம்மோத்ஸவம், சூர்ய பூஜை என்றும் அழைக்கப்படும். வேதநாராயண கோவில் இந்த நேரத்தில் சூரியன் ஒளி நேரடியாக தெய்வ சிலையின் பாதம், தொப்புள், நெற்றி மற்றும் பிரதான சன்னதியில் நேராக விழுமாறு வடிவமைக்க பட்டுள்ளது. இதன்மூலம், இது சிறந்த கட்டிடக்கலைகளில் ஒன்றாக விளங்குகின்றது.

இந்தியாவில் முதன் முதலாக மச்ச வடிவில் விஷ்ணுவின் உருவம் அமைக்க பட்ட கோவில் இதுவாகும். அணைத்து நகரத்தில் இருந்தும், மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் இந்த வரலாற்று சிறப்பு மிக்க விஷ்ணு பகவானை பார்ப்பதற்க்கு வருகிறார்கள்.

PC- Bhaskaranaidu

நாகலாப்புரம் நீர்வீழ்ச்சி:

நாகலாப்புரம் நீர்வீழ்ச்சி:

நாகலாப்புரத்தை சுற்றியுள்ள நீர் படுக்கைகள் அமைதித் தன்மை மற்றும் நல்ல நினைவுகளை கொடுக்கும். பயணிகள் மற்றும் புகைப்படக்காரர்களுக்கும் நாகலாப்புரம் விடுமுறை நாட்களில் பயணம் செய்ய உகந்த இடமாகும். நாகலாப்புரம் நீர்வீழ்ச்சியின் அருமையான தண்ணீருடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, அங்குள்ள பறவைகள் மற்றும் வசீகரமான காற்றைக் கொண்ட இயற்கையின் மெல்லிசை உணர்வை நீங்கள் உணரலாம்.

இந்த நீர்வீழ்ச்சிக்கு கொஞ்சம் மலையேற்றம் செய்ய வேண்டியிருக்கும், இதன் காரணமாக ஒவ்வொரு இடத்திலிருந்தும் பயணியின் சுற்றுலாத்தல பட்டியலில் இந்த இடம் அமைந்திருக்கும். இயற்கையின் அழியாத அழகுக்கு மத்தியில் வார விடுமறை நாட்களை நீங்கள் செலவழிக்க விரும்பினால், நாகலாப்புரம் உங்களுக்கு அழைப்பு விடுகிறது.

PC- Shmilyshy

நாகலாப்புரம் மலை:

நாகலாப்புரம் மலை:

நீங்கள் மலையேற்றம் அல்லது இரவில் முகாமிட்டுக் கொள்ள விரும்பினால் நாகலாப்புரம் அதற்கு உகந்த இடமாகும். நீங்கள் புறநகர்ப்பகுதிகளில் முகாமிட்டாலும் கூட, இந்த மலைகளில் முகாமிட்டுக் கொள்வதற்கு நிகர் ஆகாது. நீங்கள் தளத்தை அடைந்துவிட்டால், முகாமிட சரியான இடத்திற்கு நீங்கள் சென்றடைய ஒரு சில கி.மி நடக்க வேண்டும்.

உள்ளூர் மக்களின் கேலி மற்றும் கலவரத்தின் சில சம்பவங்கள் காரணமாக இரவில் விழிப்புடன் இருப்பது நல்லது. நீங்கள் ஒரு தீவிரமான ட்ரெக்கர் அல்லது கேம்பர் என்றால், இந்த நினைவுகளை புதுப்பித்துக் கொள்ள இங்கு செல்லலாம். இந்த நகரத்தின் வரலாறு மற்றும் அழகு மூலம் உங்கள் மனசை குளிர்விப்பதற்கு இந்த அற்புதமான இடத்திற்க்கு செல்லுங்கள்.

நீங்கள் அழகான புகைப்படங்கள் எடுக்க முடியும். பசுமை நிறைந்த மற்றும் வசதியான சூழல் கொண்ட இந்த இடம் புகைப்படக்காரர்களுக்கு புகலிடம் தருவதாகும்.

PC- Prashant Dobhal

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்