Search
  • Follow NativePlanet
Share
» »மணிப்பூரின் நதிகளும், ஏரிகளும்

மணிப்பூரின் நதிகளும், ஏரிகளும்

தௌபலில் பல ஏரிகளும் நதிகளும் உள்ளன. அவைகளில் மிக முக்கியமானவை இம்பால் மற்றும் தௌபல் நதிகள். இந்த நதிகளின் நீர் தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பயன்படுத்துகின்றன. இந்த நதிக

By Udhaya

தௌபலில் பல ஏரிகளும் நதிகளும் உள்ளன. அவைகளில் மிக முக்கியமானவை இம்பால் மற்றும் தௌபல் நதிகள். இந்த நதிகளின் நீர் தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பயன்படுத்துகின்றன. இந்த நதிகளும் ஏரிகளும் மிகத் தூய்மையானவை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் எப்படி வாழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த மணிப்பூர் மாநிலத்தின் ஏரிப் பகுதியில் வாழும் மக்கள்தான். வளர்ச்சி முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கையை அழித்து செயற்கையாக வாழக்கூடாது என்பதை எடுத்துக்கூறும் இந்த நதிகளுக்கு பயணிக்கலாம் வாருங்கள்.

 முக்கியமான ஏரிகள்

முக்கியமான ஏரிகள்


லோப் ஏரி, லௌசி ஏரி, பும்லென் ஏரி மற்றும் வைதௌ ஏரி ஆகியவைகள் தான் இங்கு உள்ள ஏரிகளில் மிக முக்கியமானவைகளாகும். லோப் ஏரியைச் சுற்றி இயற்கை அழகு கொட்டிக் கிடப்பதால் சுற்றுலாப் பயணிகளிடம் இந்த இடம் புகழ் பெற்று திகழ்கிறது. மேலும் உயரமான இடத்தில் இருக்கும் இந்த இடத்தில் அடிக்கும் குளிர்ந்த தென்றல் காற்று மேலும் ஈர்ப்பை உண்டாக்கும். லௌசி ஏரி 18 சதுர கி.மீ. பரப்பளவில் புவியியல் வல்லுநர்களிடம் புகழ் பெற்று விளங்குளிறது. இந்த ஏரியின் தண்ணீரை உள்ளூர் மக்கள் குடிக்கவும் பயன்படுத்துகின்றனர். பும்லென் பட் என்றழைக்கப்படும் பும்லென் ஏரி, தௌபலிலுள்ள தூய்மையான தண்ணீரைக் கொண்ட ஏரி. இங்குள்ள முக்கிய ஈர்ப்பு பும்டிஸ் எனப்படும் மிதக்கும் சிதைந்த செடிகள்.
PP Yoonus

கங்கபோக்

கங்கபோக்


மணிப்பூரில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று தான் கங்கபோக். மாநிலத்தின் பெரிய கிராமமான இது தௌபல் மாநகராட்சியின் அதிகார எல்லைக்குள் உள்ளது. இந்த கிராமத்தில் வாழும் மக்களை மெய்டேய்ஸ் என்று அழைப்பர். மெய்டேய்லோன் அல்லது மணிப்பூரி ஆகிய மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.

கங்ரா என்ற மரத்தில் இருந்து தான் கங்கபோக் கிராமம் அதன் பெயரைப் பெற்றது. இன்று இந்த கிராமம் இருக்கும் இடத்தில் தான் அந்த மரங்கள் இருந்தன. மக்கள் இந்த இடத்தில் வாழ வேண்டி மரங்களை வெட்டித் தள்ளினர்.

எனவே இந்த இடத்திற்கு கங்ராபோக்பி என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு கங்ரா வளர்ந்துள்ளது என்று பொருளாகும். இப்பெயர் காலப்போக்கில் மாறி கங்கபோக் என்று ஆனது.

இந்த இடத்தில் லோப் பட் என்றழைக்கப்படும் லோப் ஏரி மற்றும் இன்னும் சில தலங்கள் உள்ளன. பல காலமாக இந்த ஏரியின் தண்ணீர் மீன் பிடிக்கவும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதால், உள்ளூர் விவசாயிகள் வாழ்க்கையில் இந்த ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள லம்லாங் பஜாரும் முக்கியமானவை.

Subodhthok

வைதௌ மலை

வைதௌ மலை

தௌபல் மாநகராட்சி பல ஏரிகளுக்காகவும் நதிகளுக்காகவும் புகழ் பெற்றது. புகழ் பெற்ற லோக்டக் ஏரியும் இந்த மாநகராட்சியில் தான் உள்ளது. வைதௌ ஏரி அவற்றில் மிகவும் முக்கியமான சுற்றுலாப் பகுதியாகும். மேலும் வைதௌ சுற்றுப் பகுதிகளின் கவர்ச்சிக்கு காரணமாகவும் இந்த ஏரி விளங்கி வருகிறது.

இந்த ஏரி மாநகராட்சியின் வடக்கு திசை நோக்கி உள்ளது. வைதௌ மலையிலிருந்து வரும் நீர் மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இருக்கும் விவாசய நிலத்திலிருந்து தேங்கும் நீரினால் உருவானதே இந்த ஏரி.

இந்த இடம் இம்பாலிலிருந்து 16 கி.மீ. தொலைவில் இம்பால்-ம்யன்மர் சாலையியிலும், தௌபல் மாநகராட்சி பணித் தலைமையிடமிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமையப்பெற்றிருக்கிறது.

முன்னாட்களில் இந்த ஏரி அருகிவரும் மீன் உயிரினமான ந்கடன் என்ற மீனின் இனப்பெருக்க இடமாக இருந்தது. 1970-ஆம் ஆண்டு இங்கே செக்சபி அணை கட்டப்பட்டதால் இந்த மீன் வகைகள் காணாமல் போனது.

Dangmei

சுக்னு

சுக்னு


சுக்னு என்பது தௌபல் மாநகராட்சியில் உள்ள முக்கிய வணிக மையமாகும். சுக்னு- இம்பால் மாநில நெடுஞ்சாலை வழியாக இந்த இடத்திலிருந்து மணிப்பூரின் தலைநகரத்துக்கு செல்லலாம்.

சுக்னு இம்பாலிலிருந்து 74 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. வணிக மையம் தவிர, இந்த அழகிய நகரத்தில் இம்பால் நதியும் பாய்ந்தோடுகிறது. இந்த இடத்திற்கு அழகை சேர்ப்பதாக விளங்குகிறது இந்த நதி. இந்த நதியினால் இதன் சுற்று வட்டாரம் பசுமையோடு இருக்கும். சிறு குன்றுகள் அடங்கிய தௌபல் மாநகராட்சி சுக்னுவிற்கு கூடுதல் அழகை சேர்க்கும்.

தௌபல் மாநகராட்சியில் உள்ள 10 விதான் சபா தொகுதிகளில் ஒன்று சுக்னுவில் உள்ளது. லிலாங், வாங்கெம், தௌபல், ஹேய்ராக், கங்கபோக், வாங்ஜிங் டெண்தா, கக்சிங், வாபகை மற்றும் ஹியங்க்லம் ஆகியவை தான் மற்ற ஒன்பது தொகுதிகள்.

தௌபல் மாநகராட்சிக்கு தெற்கே அமைந்துள்ளது சுக்னு. இங்கே மக்கள் தொகை 4500 ஆக இருப்பதாக 2001 ஆம் ஆண்டின் சென்சஸ் கணக்கு கூறுகிறது. இங்கு உடல்நிலை பாதுகாப்பு மையம் மற்றும் தொடக்கப் பள்ளி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.

Dangmei

 பல்லெல் நகரம்

பல்லெல் நகரம்

மொரெஹ்வுக்கு செல்லும் வழியில் இருக்கிறது இந்த பல்லெல் நகரம். மணிப்பூரில் உள்ள வணிக மையம் இது. தௌபல் மற்றும் சண்டெல் எல்லையில் இருக்கும் இந்த இடத்தை கடந்து தான் தேசிய நெடுஞ்சாலை எண் 39 கடந்து செல்கிறது. இம்பாலிலிருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ளது பல்லெல். மேலும் ட்ரான்ஸ்-ஆசிய சூப்பர் நெடுஞ்சாலையின் நுழைவு வாயிலாக விளங்குகிறது பல்லெல். சண்டெல் மலைகளும் தௌபல் நிலப்பகுதிகளும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது பல்லெல். இவையிரண்டும் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் பல்லெலின் அழகு மேன்மேலும் கூடுகிறது. மொரெஹ் போகும் வழியில் இருக்கும் பல்லெல் நம் கண்களுக்கு விருந்தாக அமையும். இதன் அழகை கண்டு கழிக்கவே சுற்றுலாப் பயணிகள் இங்கு வர விரும்புவர். விவசாயம் தான் பல்லெலின் முக்கிய வாழ்வாதாரம். இது போக இங்கு வாழும் பழங்குடியினர் கைவினைப் பொருட்களை விற்றும் பிழைக்கின்றனர். பல சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பல தலைமுறைகளாக இங்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். மரியாங்க்ஸ், குக்கிஸ், மெய்டெய்ஸ் மற்றும் லம்கங்ஸ் போன்றவர்கள் தான் இங்கு வாழும் முக்கிய பழங்குடியினர்.

Herojit th

கொண்ஜம்

கொண்ஜம்


கொண்ஜம் என்ற இடம் தௌபல் மாநகராட்சியில் உள்ள புகழ் பெற்ற இடங்களில் ஒன்றாகும். நாட்டின் சுதந்திரத்துக்காக மணிப்பூர் மக்கள் வெள்ளையர்களுக்கு எதிராக கடைசி போரை நடத்தியது இந்த இடத்தில் தான்.

மணிப்பூர் மக்கள் வெள்ளைய முதன்மை ஆணையரையும் அவரின் கட்சி உறுப்பினர்களையும் கொலை செய்த பின் 1891 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் மூண்டது இந்த போர்.

வெள்ளையர்களிடம் ஒப்பிடுகையில் மணிப்பூர் மக்களிடம் போதிய ஆள் பலமோ ஆயுதோ பலமோ இருக்கவில்லை. இருப்பினும் தங்களது சக்தியை பயன்படுத்தி போரில் முழு வீச்சுடன் ஈடுபட்டனர்.

இந்த போரில் மணிப்பூர் மக்கள் தோற்றுப் போனாலும், மேஜர் ஜெனரல் பௌனா ப்ரஜாபஷி தலைமையில் போரிட்ட அனைவரின் வெறித்தனமான மனத் தைரியமும் மறக்க முடியாதவை.

கொண்ஜம், தௌபலிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் இம்பாலிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. போரில் பங்கு பெற்ற வீரர்களின் நினைவாக அங்குள்ள ஒரு குன்றின் மேல் ஒரு சின்ன போர் நினைவகம் நிறுவப்பட்டிருக்கிறது.

இந்த போரின் நினைவாக ஒவ்வொரு வருடம் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி மணிப்பூரில் மாநில விடுமுறை விடப்பட்டுள்ளது. கொண்ஜம், தேசிய நெடுஞ்சாலையுடன் தொடர்பில் இருப்பதுடன் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி ஒன்றும் இங்கு உள்ளது.

Gazetteer of Manipur

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+