» »அமைதிக்கு பெயர் போன திவேகர் கடற்கரைக்கு போக நீங்க ரெடியா? இதப் படிச்சுட்டு போங்க!!

அமைதிக்கு பெயர் போன திவேகர் கடற்கரைக்கு போக நீங்க ரெடியா? இதப் படிச்சுட்டு போங்க!!

By: Balakarthik Balasubramanian

மும்பையின் தெற்கிலிருந்து 190 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு கடற்கரை நகரம் தான் இந்த திவேகர் ஆகும். இந்த இடமானது அமைதியாகவும், ஒதுங்கு புறமாகவும் காணப்படும் கிராமமாக இருக்க, இவர்களின் பெரும்பாலான வருவாயாக மீன்பிடி தொழிலும், தேங்காய் மற்றும் பாக்கு தோட்டங்களும், சுற்றுலா சேவைகளான உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் வாடகை வீடுகளுமென காணப்படுகிறது.

அழகிய சவுக்கு மரங்கள் இங்கே சூழ்ந்திருக்க, தள்ளிக்காணப்படும் தூய்மையான ஒரு கடற்கரையாகவும் இந்த திவேகர் காணப்படுகிறது. இங்கே நம்மால் கடல் ஆமைகளின் முட்டைகளையும், மணல் குமிழி நண்டுகளையும் கடற்கரையில் நம்மால் பார்க்க முடிகிறது. இங்கே அருகில் காணப்படும் ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் திமிங்கலங்களையும் நம்மால் பார்க்க முடிகிறது. தினசரி சலிப்பூட்டும் விஷயங்களை மறந்து ஓய்வின் மூலம் உங்கள் நேரத்தை செலவிட இந்த திவேகர் கடற்கரை உங்களை வரவேற்கிறது.

இந்த திவேகரிலும், அதற்கு செல்லும் வழியிலும் நாம் பார்க்க வேண்டிய மற்ற இடங்களையும் இப்பொழுது நாம் பார்க்கலாம்.

மும்பையிலிருந்து திவேகருக்கு செல்லும் வழி:

மும்பையிலிருந்து திவேகருக்கு செல்லும் வழி:

சேட்டா நகர் - பெங்களூரு - மும்பை நெடுஞ்சாலை - பென் கொப்பிலி சாலை - மாநில நெடுஞ்சாலை 92 - பத்தன்சாயின் MH66 - மாநில நெடுஞ்சாலை 97 -
திவேகர்.
மும்பையிலிருந்து திவேகருக்கு நாம் செல்ல எளிய வழிய��க இது அமைய, இந்த 189 கிலோமீட்டரை நாம் கடக்க 4 மணி நேரம் நமக்கு ஆகிறது.

நவி மும்பை:

நவி மும்பை:

மும்பையிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் திட்டமிடப்பட்ட நகரமாக நவி மும்பை காணப்படுகிறது. நவி மும்பையில் காணப்படும் பாம் பீச் மார்க்கின் வழியாக பத்து கிலோமீட்டருக்கு பரந்து விரிந்து நாம் பயணம் செய்ய, அழகிய அனுபவத்தை அது நமக்கு தருகிறது. இங்கே நாம் பார்க்கும் அழகிய காட்சியான சாம்பல் நிற கட்டிடங்கள் முதல் நீல நிற கடற்கரை வரை நம் கண்களை வெகுவாக கவர, பச்சை பசுமையும் சூழ்ந்து மனதினை வருடுகிறது.
கர்காரின் புற நகரங்களான உட்சவ் சௌக்கும், பாண்டவகடா நீர்வீழ்ச்சியும் நாம் நவி மும்பையின் அருகில் பார்க்க வேண்டிய சுவாரஷ்யமான இடங்களாகவும் அமைகிறது.

gentlesound

 கர்னாலா:

கர்னாலா:

பயணம்/இயற்கை ஆர்வலர்களின் சிறந்த பயண இடமாக இவ்விடமிருக்க, பறவைகளையும் ந��்மால் இங்கே பார்த்து பரவசமடைய முடிகிறது. இங்கே ஏதோ ஓர் அழகினால் நம் மனம் ஈர்க்கப்பட, பயணம் வருபவர்களின் இலக்காக கர்னாலா கோட்டையும் காணப்படுகிறது. இங்கே அடிவாரத்தில் கர்னாலா பறவைகள் சரணாலயமானது காணப்பட, பறவை ஆர்வலர்களின் வருகைக்கு சிறந்த இடமாகவும் இது அமைகிறது.

வரலாற்றில், இந்த சிறந்த கோட்டையானது கொங்கன் கடற்பகுதியிலிருந்து எதிரிகள் நுழைவதனை பிரதிபலிக்கும் சிறந்த இடமாக விளங்குகிறது. 150 இன பறவைகளுக்கு வாழ்விடமாக இந்த சரணாலயமானது காணப்பட, பாம்பு கழுகு, பெரேக்ரின் ஃபால்கோன் என பல பறவைகளும் இதில் அடங்கும்.

Vshlkhomane

ஹரிஹரேஷ்வர் கடற்கரை:

ஹரிஹரேஷ்வர் கடற்கரை:

அழகிய இடமான இந்த ஹரிஹரேஷ்வர் கடற்கரை, நான்கு மலைகளின் நடுவில் அமைந்து காணப்படுகிறது. திவேகர் கடற்கரைக்கு அருகில் இவ்விடம் காணப்பட, திவேகருக்கு வரும் நீங்கள் கண்டிப்பாக இதனை காணாமல் செல்லாதீர்கள்.

திவேகர் கடற்கரை போல் ஹரிஹரேஷ்வர் கடற்கரை காணப்படாமல் தூய்மையான கரு நிற மணலை இது கொண்டிருக்கிறது. இவ்விடம் தூய்மையாகவும், குளுமையாகவும், காணப்பட வண���கமயமாக்குதல்களுக்காக தொட்டிராத ஒரு இடமாகவும் இது விளங்குகிறது.

Rajarshi MITRA

 திவேகரில் காணப்படும் ஆலயங்கள்:

திவேகரில் காணப்படும் ஆலயங்கள்:

கணேச பெருமானின் சிலை ஒன்று இங்கே முக்கியமாக காணப்பட சுவர்ன கணேஷ ஆலயம் கடற்கரைக்கு அருகில் காணப்படுகிறது. இந்த சிலையானது 300 வருடங்களுக்கு பழமை வாய்ந்து காணப்பட, 24 கேரட் தங்கம் கொண்டு இது உருவாக்கப்பட்டிருக்க, இதன் எடையானது 1.3 கிலோவும், 60 சென்டிமீட்டர் உயரமும் காணப்படுகிறது.

பதிமூன்றாம் நூற்றாண்டில் சிலஹார் ஆட்சியின்போது கட்டப்பட்டதாக நம்பப்படும் சுந்தர நாராயணன் ஆலயமானது விஷ்னு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்படுகிறது. இங்கே அழகிய விஷ்னு பெருமானின் சிலை செதுக்கப்பட்டு காணப்பட, திவேகருக்கு வரும் நீங்கள் இதனை கண்டிப்பாக பார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

Rajdave26

முருத் ஜஞ்சிரா:

முருத் ஜஞ்சிரா:

திவேகர் கடற்கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஓர் கிராமம் தான் முருத் ஆகும். இங்கே முருத் ஜஞ்சிரா எனப்படும் பழங்காலத்து மாபெரும் கோட்டை ஒன்று காணப்பட, இந்தியாவில் காணப்படும் வலிமைமிக்க கடற் கோட்டைகளுள் இதுவும் ஒன்றாகும். இந்த கோட்டையில் 26 கொத்தளங்கள் காணப்பட, இதன் மிகப்பெரிய புதிராக கொத்தளங்களில் காணப்படும் சம நிலைகள் பல நூறு வருடங்களை கடந்தும் அதே மாதிரி காணப்படுகிறதாம்.

திவேகர் கடற்கரையில் படகுகள் செல்ல, அவை முருத் ஜஞ்சிரா கோட்டையை அடைகிறது. இக்கோட்டையானது நீள்வட்ட வடிவத்தில் பாறைகளால் காணப்பட, இது ஒரு தீவை போல் நமக்கு காட்சியளிக்கிறது.

Ishan Manjrekar

Read more about: travel