
இன்று ஜைன மதம் வட இந்தியாவிலும் பௌத்தம் சீனா, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமே பிரதானமாக மக்களால் பின்பற்றப்படுகிறது. ஆனால் 8ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் இவ்விரண்டு மதங்களும் கோலோச்சியிருக்கின்றன. திருவள்ளுவரே கூட ஜைனர் என்று சொல்வோர் உண்டு.
இசையெழுப்பும் அதிசய தூண்கள் உள்ள கோயில்கள் எவை தெரியுமா?
இப்படி தென்னிந்தியாவில் பௌத்தமும், ஜைன மதமும் இருந்ததன் அடையாளமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் பல எவ்வித பராமரிப்புமின்றி அழிந்துவிட்டன. ஆனால், கர்நாடக மாநிலத்தில் சாவிரா கம்பகள பசதி என்ற ஜெயின் கோயில் இன்றும் அதே பொலிவுடன் இருக்கிறது. அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சாவிரா கம்பகள பசதி ஜெயின் கோயில் !!
கர்நாடக மாநிலத்தில் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் மங்களூரு நகரில் இருந்து 34கி.மீ வட கிழக்கே உள்ள மூடபித்ரி என்ற ஊரில் அமைந்திருக்கிறது சாவிரா கம்பகள பசதி ஜெயின் கோயில்.

சாவிரா கம்பகள பசதி ஜெயின் கோயில் !!
இந்த கோயிலின் மூலவராக ஜைன மதத்தின் எட்டாவது தீர்த்தங்கரராக சொல்லப்படும் சந்திரபிரபா என்பவர் எட்டு அடி உயர சிற்பமாக வழிபடப்படுகிறார்.
இதன் காரணமாகவே சந்திரநாதர் கோயில் என்றும் இது அழைக்கப்படுகிறது.

சாவிரா கம்பகள பசதி ஜெயின் கோயில் !!
இக்கோயிலை கட்டியவர் விஜயநகர பேரரசை சேர்ந்த தேவராய வுடையார் என்பவராவார். கி.பி 1430ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயில் 1960ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

சாவிரா கம்பகள பசதி ஜெயின் கோயில் !!
இக்கோயிலின் முன்னே 'மனஸ்தம்பா' என்ற ஒரே கல்லில் குடையப்பட்ட 60 அடி உயர புனித தூண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதனை கார்களா என்ற இடத்தில் அரசியான நாகளா தேவி என்பவரே அமைத்தவர் ஆவார்.

சாவிரா கம்பகள பசதி ஜெயின் கோயில் !!
இக்கோயிலின் பெரும் சிறப்புகளில் ஒன்றாக சொல்லப்படுவது இதனுள் இருக்கும் 1000 தூண்கள் தான். இக்கோயிலில் உள்ள இந்த ஆயிரம் தூண்களும் பார்ப்பவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் அவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன.

சாவிரா கம்பகள பசதி ஜெயின் கோயில் !!
இரண்டு குதிரைகள் ஒன்றாக நிற்பது யானையின் முகம் போன்ற வடிவில் இருக்கும் அற்புத சிற்ப வேலைப்பாடு.

சாவிரா கம்பகள பசதி ஜெயின் கோயில் !!
கோயிலின் வெளிப்புற சுவரில் இருக்கும் ட்ராகனின் சுவர் சிற்பம். சீனாவில் மட்டுமே அறியப்பட்ட டிராகன்கள் தென்னிந்தியாவில் உள்ள ஒரு கோயிலின் சுவரில் இடம்பெற்றது இன்னும் விடுக்கப்படாத புதிராகவே உள்ளது.

சாவிரா கம்பகள பசதி ஜெயின் கோயில் !!
மூடபித்ரியில் இருக்கும் 18 ஜைன கோயில்களில் சிறந்ததாக இந்த சாவிரா கம்பகள பசதி ஜெயின் கோயிலே சொல்லப்படுகிறது.
இவ்வூரில் இருக்கும்மூடபித்ரி ஜைன மடாலயமே இங்கிருக்கும் அனைத்து ஜைன கோயில்களையும் பராமரிக்கிறது.

சாவிரா கம்பகள பசதி ஜெயின் கோயில் !!
சாவிரா கம்பகள பசதி ஜெயின் கோயிலின் மூலவரான சந்திரநாதரின் சிலை.

சாவிரா கம்பகள பசதி ஜெயின் கோயில் !!
ஆயிரம் தூண் கோயிலை பற்றி இந்திய அகழ்வாராய்ச்சி துறையினால் வைக்கப்பட்டுள்ள விளக்க பதாகை.