Search
  • Follow NativePlanet
Share
» »2023 இல் எல்லா மாதங்களிலும் நீங்கள் சபரிமலைக்கு செல்லலாம் - சபரிமலை 2023 காலெண்டர்!

2023 இல் எல்லா மாதங்களிலும் நீங்கள் சபரிமலைக்கு செல்லலாம் - சபரிமலை 2023 காலெண்டர்!

கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு சென்று சாஸ்தாவை தரிசனம் செய்வது தான் விசேஷம்! மண்டல பூஜை மற்றும் மகர விளக்கையொட்டி தொடர்ந்து 48 நாட்களுக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் மற்ற மாதங்களிலும் சபரிமலைக்கு சென்று அய்யன் ஐயப்பனை தரிசனம் செய்யலாம்! கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்வார்கள். ஆனால் நீங்கள் சாதாரண நாட்களில் வரும் போது கூட்டமும் குறைவாக இருக்கும், நின்று நிதானமாக சுவாமி தரிசனமும் செய்யலாம்! இதோ சபரிமலை சாஸ்தாவின் 2023 காலெண்டர்!

 Sabarimala Calender 2023

புனிதம் நிறைந்த கார்த்திகை மாதம்

கார்த்திகை மாதம் என்றாலே நம் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஹரிஹர சுதனான அய்யன் ஐயப்பனே! இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, தினமும் பூஜைகள் செய்து, கடுமையான விரதமிருந்து, சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். மண்டல பூஜை மற்றும் மகர ஜோதிக்காக திறக்கப்பட்டிருக்கும் கோவிலில் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை வருவதற்கு முன்னரே பல பக்தர்கள் மாலை போட்டு கொள்வார்கள்,சரியாக கார்த்திகை 1 அன்று அய்யனை காண வேண்டுமென்று, பெரும்பாலான பக்தர்கள் கார்த்திகை 1 அன்று மாலை போட்டு மகரஜோதியன்று அய்யனை தரிசனம் செய்வார்கள்.

வருடம் முழுவதும் செல்லலாம்

பெரும்பாலான மக்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமே ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால், விஷயம் அதுவல்ல. வருடத்தின் ஒவ்வொரு மாதமும் கோயில் நடை திறக்கப்பட்டு மாதந்திர பூஜைகள் நடைபெறும். ஐந்து நாட்களுக்கு பின்னர் நடை சாற்றப்படும். நீங்கள் இந்த ஐந்து நாட்களுக்குள் சென்றால் சுவாமி தரிசனம் செய்யலாம். அதோடு மட்டுமில்லாமல் கூட்டம் குறைவாக இருப்பதால் மிகவும் நிதானமாக நின்று அய்யனை தரிசிக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

சபரிமலை காலெண்டர் 2023

சபரிமலை சாஸ்தாவின் வருடாந்திர காலெண்டர் இப்போது வெளிவந்துள்ளது. நீங்கள் கீழ்க்கண்ட தேதிகளை கவனித்து அதற்கு ஏற்றார்போல் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம்.

மாதம் பூஜை திறக்கப்படும் தேதி மற்றும் நேரம் நடை சாற்றப்படும் நேரம் மற்றும் தேதி
டிசம்பர் - 2022 மண்டல பூஜை 27/12/2022 மாலை 5 மணி
மகரவிளக்குக்காக திருநாடு மீண்டும் திறக்கப்படுகிறது 30/12/2022 மாலை 5 மணி 20-01-2022 இரவு 10 மணி
ஜனவரி - 2023 மகரவிளக்கு திருநாள் 14/01/2023
பிப்ரவரி - 2023 மாதந்திர பூஜை - கும்பம் 12/02/2023 மாலை 5 மணி 17/02/2023 இரவு 10 மணி
மார்ச் - 2023 மாதந்திர பூஜை - மீனம் 14/03/2023 மாலை 5 மணி 19/03/2023 இரவு 10 மணி
சபரிமலை உற்சவம் 26/03/2023 மாலை 5 மணி 05/04/2023 இரவு 10 மணி
கொடியேத்து 27/03/2023
ஏப்ரல் - 2023 பங்குனி உத்திரம் & அரட்டு 05/04/2023
மேட விஷு திருவிழா 11/04/2023 மாலை 5 மணி 19/04/2023 இரவு 10 மணி
விஷு 15/04/2023
மே - 2023 மாதாந்திர பூஜை - ரிஷபம் 14/05/2023 மாலை 5 மணி 19/05/2023 இரவு 10 மணி
சிலை நிறுவுதல் பூஜை 29/05/2023 மாலை 5 மணி 30/05/2023 இரவு 10 மணி
ஜூன் - 2023 மாதாந்திர பூஜை - மிதுனம் 15/06/2023 மாலை 5 மணி 20/06/2023 இரவு 10 மணி
ஜூலை - 2023 மாதாந்திர பூஜை - மேஷம் 16/07/2023 மாலை 5 மணி 21/07/2023 இரவு 10 மணி
ஆகஸ்ட் - 2023 மாதாந்திர பூஜை - சிம்மம் 16/08/2023 மாலை 5 மணி 21/08/2023 இரவு 10 மணி
ஓணம் பூஜை 27/08/2023 மாலை 5 மணி 31/08/2023 இரவு 10 மணி
ஓணம் திருநாள் 29/08/2023
செப்டம்பர் - 2023 மாதாந்திர பூஜை - கன்னி 17/09/2023 மாலை 5 மணி 22/09/2023 இரவு 10 மணி
அக்டோபர் - 2023 மாதாந்திர பூஜை - துலாம் 17/10/2023 மாலை 5 மணி 22/10/2023 இரவு 10 மணி
நவம்பர் - 2023 ஸ்ரீ சித்திர அட்ட திருநாள் 10/11/2023 மாலை 5 மணி 11/11/2023 இரவு 10 மணி
மண்டல பூஜை மஹோற்சவம் 16/11/2023 மாலை 5 மணி 27/12/2023 இரவு 10 மணி
டிசம்பர் - 2023 மண்டல பூஜை 27/12/2023
திருநடை திறப்பு - மகரவிளக்கு மஹோற்சவம் 30/12/2023
ஜனவரி - 2024 மகரவிளக்கு திருநாள் 14/01/2024

சுவாமி தரிசனம் டிக்கெட் புக்கிங்

சபரிமலை தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் முன் பதிவு செய்வது அவசியம். https://sabarimalaonline.org/#/login என்ற இணையத்தளத்தில் நீங்கள் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்கள் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் செய்துகொள்ளலாம். இதற்காக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் ஒரிஜினல் கையில் வைத்திருக்க வேண்டும். சென்னையில் இருந்து குமுளிக்கு தினமும் மாலை 5.30 மணிக்கு பேருந்து இயக்கப்படுகிறது.

ஆகவே, நீங்கள் இந்த மாதம் செல்ல முடியவில்லை என்றாலும் காலெண்டரை பார்த்து உங்களுக்கு தகுந்தாற்போல் டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள் பக்தர்களே!

    Read more about: sabarimala calender 2023
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X